மதன மோக ரூப சுந்தரி – 4 45

செடிகளுக்கு நடுவே, வெண்ணிற பனியன் அணிந்திருந்த அவர் அமர்ந்திருந்தார்.. மணிமாறன்.. நாற்பது வயதை தாண்டியவர்.. தலைமுடி கருத்திருக்க, தாடி மட்டும் நரைத்திருந்தது..!! கையிலிருந்த செடியை தரையில் ஊன்றி மண் நிரப்பிக்கொண்டே.. யாரிடமோ புன்னகை முகத்துடன் பேசிக்கொண்டிருந்தார்..!!

“……… புரியுதா..?? இனிமே இதுதான் உன் இடம்.. வேற எங்கயும் போகணும்னு நெனைக்க கூடாது..!!”

யாரிடம் பேசுகிறார் என்று இவர்கள் ஆர்வமாக பார்த்தனர்.. அவரை தவிர அங்கு வேறு யாரும் இல்லை.. தனியாகத்தான் பேசிக்கொண்டிருந்தார்..!!

“சமத்தா இங்கயே இருக்கணும்.. என்கூடவே இருக்கணும்.. எப்போவும்..”

தானாக பேசிக் கொண்டிருந்தவர், அருகில் நிழலாடுவதை உணர்ந்ததும் பேசுவதை நிறுத்தினார்.. தலையை திருப்பி இவர்களை ஏறிட்டார்.. உடனடியாய் முகத்தில் ஒரு குழப்பரேகை பரவ..

“நீ..நீங்க..??” என்று கேள்வியாக பார்த்தார்.

“நான்.. ஆதிரா.. தாமிராவோட அக்கா.. நேத்து கால் பண்ணினேனே..??” ஆதிரா சொன்னதும் அவர் முகத்தில் குழப்பம் மறைந்து, பட்டென ஒரு மலர்ச்சி தோன்றியது.

“ஓ.. நீங்களா.. வாங்க வாங்க..!! இவ்வளவு சீக்கிரம் வந்து நிப்பிங்கன்னு எதிர்பாக்கல.. அதான்..!!” சொன்னவாறே எழுந்து கொண்டவர்,

“வாங்க.. வீட்டுக்குள்ள போய் பேசலாம்..!!” என்றவாறே அவர்களை வீட்டுக்கு முன்பக்கமாக அழைத்து சென்றார். நடக்கும்போதே,

“என்னடா.. பைத்தியக்காரன் மாதிரி தனியா பேசிட்டு இருக்கான்னு பாத்திங்களா..?? ஹாஹா..!!” என்று சிரிப்புடன் கேட்டார்.

“ச்சேச்சே.. அப்படிலாம் இல்ல ஸார்..!!”

“ஹ்ம்ம்.. என் வொய்ஃப் போனப்புறம்.. இந்த தோட்டம்தான் எனக்கு இருக்குற ஒரே துணைன்னு ஆகிப்போச்சு.. இந்த செடிகளும் பூக்களும் எனக்கு ஃப்ரண்ட்ஸ் மாதிரி..!! ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணினா.. இப்படி வந்து உக்காந்து பேசிட்டு இருப்பேன்.. மனசுக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்..!!”

“ம்ம்.. புரியுது ஸார்..!! என்னோட அப்பாவுக்கு கூட இந்த மாதிரி செடிக கூட பேசுற பழக்கம் இருக்கு..!!”

“ஹாஹா..!! நெஜமாவா..?? தாமிரா அதைப்பத்தி எங்கிட்ட சொன்னதே இல்லயே.. ஹாஹாஹா.. குட் குட்.. வெரி குட்..!!”

இருவரையும் வீட்டுக்குள் அழைத்து சோபாவில் அமரவைத்தார் மணிமாறன்.. சமையலைறைக்குள் புகுந்தவர், ஐந்து நிமிடங்கள் கழித்து மூன்று தேநீர் கோப்பைகளுடன் வெளிப்பட்டார்..!!

“பால் கலக்காத க்ரீன் டீ-தான் எங்க வீட்ல எப்போவும்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க..!! ஹாஹா..!!”

என்று சிரிப்புடனே கோப்பைகளை இவர்களிடம் நீட்டினார்..!! மூவரும் தேநீர் உறிஞ்ச ஆரம்பித்ததுமே..

“ம்ம்.. சொல்லுங்க.. என்ன விஷயமா என்னை பாக்க வந்திருக்கீங்க..??” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

1 Comment

  1. And indefinitely it is not far 🙂

Comments are closed.