ஹலோ மிஸ்டர் மணி, ஹாய் குமார், லஞ்ச் ஆச்சா? என்றவாறே அருகில் அமர்ந்தேன்.
மணிதான் அசிங்கமாகப் பேசுபவன், குமார் சும்மா கேட்டுக் கொண்டிருப்பவன்.
அப்புறம் குமார், எப்படி இருக்கீங்க? வேலை எப்டி போகுது?
அவர்களெல்லாம் அவ்வளவு எளிதில் என்னிடம் நெருங்க முடியாது, அப்படியிருக்கையில், நானே வலியப் போய் பேசும் போது அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை! கொஞ்சம் தள்ளி சாப்பிட்டுக் கொண்டிருந்த சிலர் கூட, இதை அதிசியமாகப் பார்த்தார்கள்.
நல்லா போகுது சார்!
கால் மீ மதன்! நோ சார்!
எஸ் சார்… சாரி மதன்!
ஹா ஹா. அப்புறம் குமார், உங்க அப்பா, நீங்க காலேஜ் படிக்கிறப்பவே இறந்துட்டாருல்ல?
நான், அவனுடைய பெர்சனல் விஷயங்களைக் கூடத் தெரிந்து வைத்திருப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது!
எஸ் சார்….!
இப்போது மணியிடம் கேட்டேன். ஆனாலும் மிஸ்டர் மணி, காலேஜ் படிக்கிறப்பங்கிறது ரொம்ப சின்ன வயசு இல்ல?
ஆமா சார்.
என்னா, உங்க அப்பாவுக்கு 45 வயசு கூட ஆகியிருக்காது! பாவம்தான்! அப்படியிருந்தும் உங்கம்மா உங்களை கஷ்டப்பட்டு வளர்த்திருக்காங்களே, பெரிய விஷயம்தான்!
அவர்கள் மவுனமாயிருந்தார்கள்! ஆனால் ஆச்சரியமாய் பார்த்தார்கள்!
மணி உங்க க்ளோஸ் ஃபிரண்டா? வீட்டுக்கெல்லாம் வருவாரா?
ஆமா சார், க்ளோஸ் ஃபிரண்டுதான். வீட்டுக்கு நிறைய தடவை வந்திருக்காரு!
என்ன, மிஸ்டர் குமார், ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே?
என்ன சார் சொல்றீங்க?