காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 8 64

இட்ஸ் ஓகே! இனி இந்த மாதிரி தப்பு செய்யாதீங்க!

மணி ஒரு மாதிரி பயத்திலும், அவமானத்திலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் தள்ளி இருந்தவர்கள், அவனை மிகக் கேவலமாக பார்ப்பது போல் தோன்றியது!

குமாரை மன்னிச்சிடலாம். மணிக்கு என்ன தண்டனை கொடுக்குறதுன்னு நீயே சொல்லு. நீ கம்ப்ளெயிண்ட் கொடுத்தா அவனை வேலை விட்டு கூட டிஸ்மிஸ் பண்ணலாம். என்ன சொல்ற?

மணியின் முகத்தில் அப்பட்டமான பயம் தெரிந்தது.

அதைப் பார்த்த லாவண்யாவோ, மன்னிச்சு விட்டுடலாம் என்றாள்.

எனக்கு கடுப்பானது. என்ன பெரிய தியாகியா நீ?

இப்போது என் கண்களைப் பார்த்தாள்.

இவன் தன்மானம் இருக்கிறவனா இருந்தா, மான, ரோஷம் இருக்கிறவனா இருந்தா வேலையை விட்டு இவனே போயிடுவான்.

திறமை இருக்கிறவனா இருந்தா, இந்த வேலை இல்லாட்டி இன்னொன்னுன்னு திமிரா இருப்பான்.

ஆனா, இவன், எதுக்கும் உதவாத, சுயமரியாதையும் இல்லாத கோழை. அதான் பயப்படுறான்.

இவனை மன்னிச்சு விட்டு, இவன் முன்னாடி, நான் பழைய மாதிரியே நடமாடுறதுதான், இவனுக்கான தண்டனை. ஆனா, இனி, இது மாதிரி பேசனும்னு நினைச்சாக் கூட, பளார்னு அறைதான் கொடுப்பேன், என்றாள்! முடிஞ்சா, இவன், இதே கம்பெனியிலியே இன்னும் மூணு வருஷம் ஒர்க் பண்ணனும்னு அக்ரிமெண்ட் போடுங்க!

மணிக்கு வேலையை விட்டு அனுப்பியிருந்தாலே தேவலாம் போலிருந்தது! அவ்வளவு அசிங்கமாய் இருந்தது!

நான் அவளை மெச்சுதலாகப் பார்த்தேன். குட்!

பின் அவர்களிடம், கெட் லாஸ்ட் என்று சொல்லி விட்டு என் ரூமிற்குள் சென்றேன்! என் பின்னாலேயே அவளும் வந்தாள்.