காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 8 64

நானும் வரனுமா?

நான் அவளையே பார்த்தேன். அவளோடு முழுதாக ஒரு வாரம் இருக்கப் போகும் வாய்ப்பை இழக்க நான் விரும்பவில்லை. அவளுடைய கோபத்திற்க்கான காரணத்தை கண்டு பிடித்தேயாக வேண்டும்! அதனாலேயேச் சொன்னேன். நீதான என் செக்ரட்டரி? தவிர ஏற்பாடுல்லாம் நீதான பண்ண? நீயில்லாம எப்படி?

இல்ல, ஒரு வாரம் வீட்டை விட்டு….

ஏன், உன் வீட்ல, உன்னை ஆசையா சீராட்டிகிட்டு இருக்காங்களா? வீட்டை விட்டு தனியா லேடீஸ் ஹாஸ்டல்லதானே இருக்க? அப்புறம் என்ன?

நான் லேடீஸ் ஹாஸ்டல்ல இருக்கிறது உனக்கு எப்படி தெரியும்?

நீ எந்த ரூம்ல இருக்கிற, என்னென்ன பண்றங்கிறது வரை தெரியும். போதுமா? கம்முனு கெளம்பி வா! ஒரு தடவை தள்ளி நின்னதுக்கே, ரொம்ப அனுபவிச்சிட்டேன். இனி அப்படி இருக்கிறதா இல்லை! நீ என்னை ஏத்துக்குவியோ, மாட்டியோ, ஆனா, ஜென்மத்துக்கும், என் கண் பார்வையை விட்டு உன்னை விலக்குறதா இல்லை!

ஊட்டியை முந்தைய நாள் மதியத்திற்க்கும் மேல் ரிசார்ட்டை அடைந்தோம். நானும் அவளும், மூன்று ரூம்கள் உள்ள ஒரு ஃபாமிலி ஹவுஸ்ஸில் தங்கினோம். மற்ற ரூம்களுடன் ஒப்பிடுகையில், அது கொஞ்சம் தள்ளியே இருந்தது. மற்ற வெண்டார்கள், எம்ப்ளாயிகளுக்கு இன்னொரு பக்கமாக அறை இருந்தது.

நான், எனக்கும், அவளுக்கும் தனிமை வேண்டியே அப்படி ஏற்பாடு செய்திருந்தேன்.

மத்த எம்ப்ளாயிஸ் இருக்கிற இடத்திலேயே எனக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கலாம்ல?

நான் கடுப்பானேன். உனக்கு வேணா, அவங்களைப் போல, நான் பாஸா இருக்கலாம்! ஆனா, என்னைப் பொறுத்த வரை, நீ என்னிக்குமே, மத்தவிங்க மாதிரி எம்ப்ளாயி கிடையாது!

இல்லை, என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?

நான் மீண்டும் கடுப்பானேன், உன்னையே நினைச்சிட்டிருந்த நான் என்ன நினைப்பேன்னு கூட நீ எதுவும் கண்டுக்கலை, இவிங்களை மட்டும் ஏன் கண்டுக்கற? ம்ம்? எப்பப் பாரு அடுத்தவிங்க என்ன நினைப்பாங்கன்னுகிட்டு? என்று கோபமாகக் கேட்டேன். இந்தக் காரணத்தைச் சொல்லிதாண்டி ஒவ்வொரு வாட்டியும் தள்ளிப் போற.

அவனுடைய பேச்சு, அவளுக்கு கடும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்தது. முன்பு, தான் நழுவ விட்ட சொர்க்கத்தை நினைத்து கலங்கினாள். கண்ணீரை மறைக்க, வேகமாக அவளுடைய அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.

மாலையில் அக்கா ஃபோன் பண்னியிருந்தாள்.

சொல்லு!