ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 5 37

”நோ… நோ…! ஒன்னு போதும்..!”
”யோசி… நல்லா யோசி…! யோசிச்சு சொல்லு…!”
மறுபடி ஒரு பீர்வந்தது. ஜல்லென்றிருந்த பீரை.. கடகடவென உள்ளே இறக்கினேன். ஒரே தம்மில்..! பாட்டிலைக் கீழே வைத்து விட்டு… தலை குணிந்து உட்கார்ந்திருந்த குணாவைப் பார்த்துக் கேட்டேன்.
”இப்ப சொல்லு..? நான் என்னடா.. பண்ணனும்..? நீ என் உயிர் நண்பன்..! நீ சொல்லி… நான் கேக்க மாட்டனா..? சொல்லு… நான் என்ன பண்ணனும்..?”
”எனக்காக.. நீ என்னவேனா செய்வேன்னு தெரியும்.! அதுதான்… நம்ம நட்போட பெருமை…!”
”ஆனா… நண்பா.. இந்த பாட்டல்மேல சத்தியமா சொல்றேன். நான் நிலாவ லவ் பண்ணலடா…!!”
”தெரியும்டா..! அதான் என்னால.. கோபப்பட முடியல..! ஆனா.. அவ… அந்த திருட்டு கழுதை உன்னை படு சின்சியரா பண்ணிருக்காடா..! எனக்கு அவளும் முக்கியம்.. நீயும் முக்கியம்…! ஸோ… முறையா கேக்கறேன்..! என் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கறியா..?”
காதில் தேன் வந்து பாய்ந்தது.! என் குழப்பங்கள் தீர்ந்தன. அல்லது காணாமல் போயின.! மனசு குளிர்ந்தது..! என்ன ஒரு அதிர்ஷ்டம்..? என்ன ஒரு அருமையான வாய்ப்பு..?
நிலாவினி எத்தனை பிரமாதமான.. அழகி..? எனது எத்தனை இரவுகளை அவஸ்தைக்கு உள்ளாக்கியிருப்பாள்..? இனி அவள் எனக்கா..? நிச்சயமாக நான் அதிர்ஷ்டக்காரன்தான்…!!
திடுமென குணா கேட்டான்.
”நிலா அழகா.. இல்லயாடா..?”
”ச்ச.. எவன்டா சொன்னது.. அப்படி..! அவ தேவதைடா..! பூமில வந்து நடக்கற.. ரம்பைடா..! தெய்வீக அழகுடா..!!” என்று உணர்ச்சிவசப் பட்டுச் சொன்னேன்.
”அப்பறம்.. ஏன்டா.. அவள லவ் பண்ணல..?”
திகைத்தேன் ”இ…இல்ல… அவ…”
”போடா…!!” என்றான் குணா ”இப்படி ஒரு அழகான தங்கச்சி.. உனக்கிருந்துருந்தா… நான்லாம்.. கண்டிப்பா பண்ணிருப்பேன்டா..! சரி.. இப்ப என்ன சொல்ற..? அவள புடிச்சிருக்குதான..?”
”ம்ம்.. ”
”கல்யாணம் பண்ணிக்கறதான..?”
” உனக்காக பண்ணிக்கறன்டா..”
”அது போதுன்டா… எனக்கு..!” சட்டென என் கைகளைப் பிடித்துக் கொண்டான் ”எனக்கு ஒரே தங்கச்சிடா.. அவ தேவதை மாதிரியிருக்கானு ரொம்ப செல்லம் குடுத்து..வளத்தம்டா… ஆனா.. அவ…அவ…” என அழுதான்.
”டேய்..! என்னடாது..? நீ..ஏன்டா.. அழற..? நான் பண்ணிக்கறன்டா..! நான் பண்ணிக்கறன்டா…!! அவள நான் கண்ணுக்குள்ள வெச்சு காப்பாத்தறேன்.. நீ.. அழாதடா..”
” உண்மைலயே..நீ ரொம்ப.. நல்லவன்டா…” என்று குணா கண்களைத் துடைத்துக் கொண்டான்.
போதையில் அவன் கண்கள் சிவந்து விட்டன. முகம் முழுவதும் வியர்வை..! தீரத்தீர… சிகரெட் பற்றவைத்துக் கொண்டே இருந்தான்..!
”இப்ப வர்றியாடா..?” என்று கேட்டான்.
”எங்க..?”
”அவள பாக்க..? வந்து நீயே பேசிப்பாரு…?”
சட்டென எனக்குள் ஒரு பனிப்புயல் வெடித்தது.
”இ..இப்பவா..?” நான் தடுமாறினேன்.
”ஏன்டா…? என்னடா.. யோசணை..?”
”இ…இல்ல.. இப்ப…இந்த நெலமைல..?”
”அதனால..என்னடா..?”
”இல்லடா.. எனக்கு மனசு இடம் தரல.. இன்னிக்கு வேண்டாம்..! நாளைக்கு வர்றேன்.. நிதானத்துல பேசிக்கலாம்..!”
”நாங்க எல்லாம் பேசிட்டம்டா..! உனக்கு சம்மதம்தான்டா..?”
”என்னடா இப்படி கேக்கற..? மனப்பூர்வமா சம்மதிக்கறேன்டா..” என்றேன்.
”சரி… எப்ப வெச்சிக்கலாம் கல்யாணத்த..? என்று.. சிறிது இடைவெளி விட்டு கேட்டான் குணா…!!!!

பீர் போதையில் நான் கிருகிருத்துப் போயிருந்தேன். நான் கொஞ்சம் யோசித்தேன்.
”என்னடா யோசிக்கற..?” குணா என்னைக் கலைத்தான்.
”இல்ல.. என்ன சொல்றதுனு..? அதயும் நீயே சொல்லிருடா..”
”ம்..ம்..! ” அவனும் கொஞ்சம் யோசித்தான் ”எதுக்கும் நீ உங்க பெரியம்மாவ பாத்து பேசிரு..! அப்பறம் முடிவு பண்ணிக்கலாம்..”
”சரிடா… இன்னிக்கே போறேன்..”
” நீ.. பயப்படாதடா.. நா பொண்ணுக்கும் அண்ணன்.. உனக்கும் நண்பன்.. உங்க கல்யாணத்த… முன்னால நின்னு.. நானே ஜாம் ஜாம்னு நடத்தி வெக்கறேன்டா…”
”சந்தோசம்டா.. ரொம்ப சந்தோசம்” எனக்கு கண்கள் கலங்கியது.
”அப்பறம்… நீ என்ன கேட்டாலும் தரேன்..! நகை…பணம்… இன்னும் என்ன வேனுமோ… கேளு..” என்றான்.
”சே..சே… என்னை ஏன்டா… இப்படி இன்சல்ட் பண்ற..?” நான் பதறினேன்.
” இல்லடா… அவளுக்கு பண்ணாம நான் வேற யாருக்கு பண்ணப் போறேன்..? நகை.. பணம் இது இல்லாம… பைக் வாங்கித் தரன்டா..! கல்யாணச் செலவெல்லாம் நாங்களே பாத்துக்கறோம்… நீ ஒரு பைசா… செலவு பண்ண வேண்டாம்..!”
”சே..! அவளே பெரிய சொத்துடா..!! நான் ஒன்னுமே கேக்க மாட்டேன்..!!”
எனக்கு பூரிப்பில் நெஞ்சு விம்மியது.! இவனல்லவா நண்பன்..? தேவதை போன்ற.. அழகான தங்கையையும் கொடுத்து பணம் நகை.. பைக்..
”எனக்கு ஒன்னும் வேணான்டா.. ” என்றேன்.
”சரி… நல்லாரு…” என்றான் குணா.
அடப்பாவி..? அப்படியானால் இவ்வளவு நேரம் பேசியதெல்லாம்….??
”லுக்டா… நீ எதுக்கும் ஒர்ரி பண்ணிக்காத… இன்னிக்கே நீ போய் உன் பெரியம்மாகிட்ட பேசு… இப்படி இப்படினு விபரமா சொல்லு… நாளைக்கு நாம முடிவு பண்ணிக்கலாம்…!!”
”எனக்கு… என்ன சொல்றதுன்னே புரியலடா…”
”உங்க பெரியம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. இல்ல..?”
”சே..சே.. அவங்க சந்தோசம்தான் படுவாங்க..”
” அடுத்த நல்ல.. முகூர்த்தத்துல கல்யாணத்த வெச்சுக்கலாம்…!!”
”தேங்க்ஸ் நண்பா…”
”ச்ச… என்னடா… நமக்குள்ள..?”
” தேவதை மாதிரி இருக்கற உன் தங்கச்சிய எனக்கு தர்ற..நீ பெரியவன்டா…”
” போடா… நமக்குள்ள என்னடா பெரிய.. பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு..? இந்த உலகத்துலயே…காதலுககு அடுத்தபடியா… நிக்கறது… நட்புதான்டா…”

1 Comment

Comments are closed.