ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 5 37

”ஏன்டி… உனக்கு ஏதாவது தேவைப் படுதா..?” என்று கேட்டேன்.. !!

“ஐயோ..! எனக்கில்லீங்க..! உங்களுக்குத்தான்….” என்று சிரித்தாய்.
”இப்ப… ஒன்னும் வேண்டாம். .நட..!!” உன் நெற்றியில் மோதிச் சிரித்தேன்.
இருவரும் வெளியே வந்தபின்… வீட்டைப் பூட்டினேன்..!!
தெருவை அடைந்து… இரண்டு பக்கமும் பார்த்துவிட்டுச் சொன்னேன்.
”சரி நீ…போ தாமரை..! நான் போய்.. என் பிரெண்ட பாத்துட்டு.. அப்பறம் ஸ்டேண்டுக்கு போய்க்கறேன்..!!”
”செரிங்க..!!” என்று சிரித்து விட்டுப் போனாய்.
உன்னை வேலைக்குத் அனுப்பி விட்டு… நான் குணாவின் வீட்டுக்கு நடந்தேன்..!! தெருவில் நடந்த போது.. நான் உன்னைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
‘ உன்னைப் பிரிய… என் மனசு.. ஏன் இவ்வளவு தவிப்பை உணர வேண்டும்…????’
அப்போதுதான்… அந்த உண்மை… என் மண்டையில் உறைத்தது..!!
‘ நான்.. உன்மேல் காதலாகி விட்டோனோ..?’
நடந்து கொண்டிருந்த… நான் தட்டென ஒரு நொடி.. அப்படியே நின்று விட்டேன்..!
‘எனக்கு.. உன்மேல் காதலா..? சே..! இருக்காது..!’
நான் நின்றுவிட்டதை உணர்ந்து… மறுபடி.. நடையைத் தொடர்ந்தேன்..!
என்னால் அந்த உண்மையை ஏற்காமல் இருக்க முடியவில்லை.
‘ ஆம்..நான்.. உன்னைக் காதலிக்கிறேன்..!’
ஆனால் இது… சாத்தியமா..?
ஏன் சாத்தியமாகாது..? நீ.. ஒரு விலைப் பெண்ணாக இருந்தாயே தவிற… இப்போதும்… அப்படியே இல்லையே..? நீ.. சுத்தமாக இப்போது…மாறித்தானே போயிருக்கிறாய்…?

ஆனால்.. ஆனால்… உன்னை..என் நண்பர்கள் அனைவருக்கும் தெரியுமே…? ஓ…! இந்தப் பிரச்சினையை நான் எப்படி…சமாளிக்கப் போகிறேன்..????
இது ஒரு இமாலயக் கேள்வி…????

கேட்டின் உள்ளே… தொளதொள பேண்ட்டும்… பனியனுமாக நின்று…எங்கோ பார்த்தவாறு.. பல் தேய்த்துக் கொண்டிருந்தாள் நிலாவினி..!! அந்த உடையில் அவளின் உடல் வளைவுகள் எடுப்பாய் தெரிந்தது.. !!
நான் காம்பௌண்ட் கேட்டைத் தள்ளித் திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பி.. என்னைப் பார்த்தள்.! பற்பசை அப்பிய… அவளின் உதடுகள் வெள்ளையாக இருந்தன.!! எச்சிலைத் துப்பிவிட்டு.. என்னைப் பார்த்துச் சிரித்தாள்..!
”ஹாய்..”
”ஹாய்..!!” நானும் சிரித்தேன் ”என்னது இவ்வளவு லேட்டா..?”
புன்னகைத்தாள் ”லீவ்.. அதான்..”
”என்ன லீவு…?”
”சொந்த லீவ்…”
”ஓ…!!”
”ம்ம்..!!”
”என்ன பண்றான்… உன் பிரதர்..?”
” அவன்… இன்னும் எந்திரிக்கலேன்னு நெனைக்கறேன்..!”
”இன்னுமா… தூங்கறான்..?”
”ம்ம்..! உங்க பிரெண்டு இல்ல..? வேற எப்படி இருப்பான்..? ” என்றாள்.
காலை நேரச் சூரியனின்.. இளம் வெயிலில் பளபளத்த… அவள் அழகு…இப்போதும்… என்னுள் ஒரு… சலன அலையை எழுப்பியது..! மேலும் அவளோடு பேச ஆசைதான் எனக்கு..! ஆனால் அதற்குள்.. அவளது அம்மா வந்து விட்டாள்.
”வாப்பா…!!” என்றாள்.
”இன்னும் தூங்கறானா..?” தெரிந்தும் நான் கேட்டேன்.
”ஆமா.. நைட்டு லேட்டாத்தான் வந்தான் போலருக்கு..! எங்க போனான்..?”
”சவாரிதாங்க…!!”
நிலாவினி ”எந்த ஊரு..?” என்று கேட்டாள்.
”நான் போன் பண்ணப்ப… ஈரோட்ல இருக்கறதா சொன்னான்..”
”எழுப்பறதா..?” அவனது அம்மா கேட்டாள்.
”இல்ல.. வேண்டாம்.. அவனே எந்திரிக்கட்டும்..! அவன் எந்திரிச்சா… சொல்லுங்க.. நான் ஸ்டேண்டுல இருக்கேன்..” என்று திரும்பினேன்.

1 Comment

Comments are closed.