ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 5 37

”குண்டத்தப்ப… எள்ளு விழ எடமிருக்காது..! இப்ப பாருங்க.. எப்படி இருக்குனு..!!”
எனக்கு தெய்வ பக்தியெல்லாம் எதுவும் கிடையாது.! ஆனால் உன் மனம் கோண வேண்டாம் என்பதற்காக.. உன்னுடன் சேர்ந்து பிரகாரமெல்லாம் சுற்றி வந்தேன்..! சாமி சிலைகளைக் கண்ட பக்கமெல்லாம் விழுந்து.. விழுந்து வணங்கினாய்..!!
திருமணம்… காது குத்து… பெயர் சூட்டுதல்.. போன்ற சுப காரியங்களும்… நிறையவே நடந்து கொண்டிருந்தன..! கோவிலை விடவும்… மண்டபங்களில் கூட்டம் நிரம்பியிருந்தது..!!
கோவிலிலும் மழை பெய்திருந்தது..! தரையெங்கும் மழை ஈரத்தின் குளுமை இருந்தது.! வானம் இன்னும் மேக மூட்டமாகவே இருந்தது..! சூரியனுக்கும் இன்று விடுமுறை போலும்…!!
வெளியே வந்து… சுற்றிய போது..
”ஐஸ் சாப்பிடலாமா.. தாமரை..?” என்றேன்.
”மழ.. இதுலீங்களா..?” என்றாய்.
”ம்ம்…!! நல்லாருக்கும்..!!”
“செரிங்க..”
சாக்கோபார் இரண்டு வாங்கினேன். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக.. கோவிலின் சுற்றுப்புரத்தில் சுற்றிக் கொண்டிருந்து விட்டு… அதன்பின் அங்கிருந்து கிளம்பினோம்..!!
பேருந்தில் உட்கார்ந்து..
”நேரா.. ஊருக்குங்குங்களா..?” என்று கேட்டாய்.
”என்ன அவசரம்..?”
“அவசரமில்லீங்க..”
” இன்னும் டைமிருக்கில்ல..?”
”வேற… எங்கீங்க…?”
”பவானிசாகர் டேம் இருக்கே..? ஜாலியா… டைம் பாஸ் பண்ணிட்டு அப்பறம் போலாம்..?”
”செரிங்க..!!” என்று சிரித்தாய்.
பேருந்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே… மழை மறுபடி தூரத் தொடங்கியது..! நகரப்பேருந்து.. என்பதால்… அணையை அடைய… நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது..! பவானிசாகர் அணையை அடைந்த போது… எனக்கு லேசாக வயிறு பசித்தது..!
தூ வானம் விட்டபாடில்லை..! மழை மெல்லிசாக தூறிக் கொண்டேதான் இருந்தது..!! அந்த மழைத் தூரலிலும்… சுற்றுலாப் பயணிகள் நிறையப் பேர் வந்திருந்தனர்..! நிறையக் கடைகள் கூட்டமாகவே இருந்தன.! உணவகங்களிலிருந்து…பொரித்த மீன் வாசணை… மூக்கைத் துளைத்தது..!
”மொதல்ல சாப்பிட்டுக்கலாம் தாமரை..” என்றேன்.
”செரிங்க..! ஆனா மழைதான் தூத்தலாவே இருக்கு..!!’ என்றாய்.
”தூறட்டும்.. வா..!!” ஒவ்வொரு கடையாகப் பார்த்தவாறு சிறிது நடந்து.. கூட்டம் குறைவாகத் தெரிந்த… உணவகத்துக்குள் போய் உட்கார்ந்தோம்..!
மீன் குழம்புடன் சாப்பிட்டோம். புதிய மீனை… கண் முன்பாகவே ரோஸ்ட் போட்டுத்தரச் செய்து சாப்பிட்டோம்..!!
பொதுவாக நிறைய மீன்கள்… முந்தைய நாள் ரோஸ்ட் போடப்பட்டதாக இருக்கும்..!! சாப்பிட்ட பின் லேசான தூரலில் நனைந்து கொண்டே பூங்காவில் நுழைந்தோம்..! மழை தூறிய போதும்… இளம் காதலர்களுக்குக் குறைவில்லாமல் இருந்தது..!!
முதலைப் பண்ணையில் முதலையைப் பார்த்ததும்.. நீ என் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கேட்டாய்.
”இதோட தோலு மட்டும் ஏங்க.. இப்படி இருக்கு..?”
” எப்படி…?”
”கெட்டியா… பாறைமாதிரி..?”
”எனக்கும் தெரியல..!!” என்றேன்.
இன்னும் பாம்பு… எலி…கழுகு… மான்கள்.. என்று பார்த்து… தெரிந்ததைப் பேசி… உற்சாகமாகச் சுற்றிக் கொண்டு… அணைக்கு ஓரமாகப் போய்… நீண்ட நேரம்… ஆற்றோரமாக நின்றிருந்தோம்..!!
மழையின் தூரல் ஒரு பொருட்டாகவே இல்லை…!! உன்னுடன் சேர்ந்து.. இப்படி சுற்றிக் கொண்டிருப்பது.. எனக்கும் ஆனந்தமாகவே இருந்தது..! உன்னுடைய குழந்தைத் தனமான குதூகலம்.. என்னையும் பரவசப்படுத்தியது..!!
நேரம் போவதே தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தோம்..! கால்கள் வலியெடுக்க…
”எங்காவது உக்காரலாம் தாமரை..” என்றேன்.
”செரிங்க…” என்றாய் பின்.. ”எங்கீங்க உக்கார்றது..?” எனக் கேட்டாய்.
வாய்க்கால் ஓரமாக கீழே வந்த போது… தண்ணீர் ஓரத்தில் இருந்த செடி மறைவுகளில் எல்லாம்… நிறையப் பேர் ஜோடி… ஜோடியாக உட்கார்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது..!!
”என்னங்க… இது… இங்கயும் இப்படி..?” என்றாய் நீ.
”இது இங்க மட்டுமில்லடி…! எங்கெல்லாம்… நம்மள மாதிரி நல்லவங்க இருக்காங்களோ… அங்கெல்லாம் இப்படித்தான்..” என்று நான் சொல்ல… சிரித்து.. என் தோளோடு இணைந்து நடந்தாய்..!
பூங்காவின் இடைப் பகுதியில் வந்து…. உட்கார்வதற்கென கட்டப்பட்டிருந்த… மேடைகளில் ஒன்றில் நீண்ட நேரம் உட்கார்ந்து.. ஓய்வெடுத்த பின்னரே கிளம்பினோம்..! பேருந்தில் திரும்பி வரும்போது… முந்தானையால் உடம்பைப் போர்த்தியவாறு.. மூக்கடைத்துக் கொண்ட குரலில் நீ பேசினாய்..!
”இன்னிக்குத்தாங்க..! நான் ரொம்ப…ரொம்ப சந்தோசமா இருக்கேன்…”
”அப்படியா..?” உன்னோடு அணைந்தவாறு கேட்டேன்.
”நீங்கதாங்க… என்னோட.. வாழ்க்கையவே மாத்திருக்கீங்க..”
”அட…” நான் புன்னகைத்தேன் ”எப்பருந்து நீ… இந்த மாதிரிலாம் பேசக்கத்துட்ட..?”
சிரித்தவாறு என் தோளில் சாய்ந்து கொண்டு.. ” தெய்வங்க… நீங்க…!!” என்று சொன்ன உன் குரல் மிகவும் நெகிழ்ந்திருந்தது….. !!!!

வீட்டை அடைந்து கதவைத் திறந்த போது வீடு இருட்டாக இருந்தது. உள்ளே நுழைந்து விளக்கைப் போட்டேன். பளிச்சென விளக்கு எரிந்தது..!
” போய்ட்டு வந்தாச்சுங்க..! எந்த கவலையுமில்லாம..” என்று சிரித்த முகத்துடன் நீ என் பக்கத்தில் வந்து நின்றாய்.
”ம்ம்..! சந்தோசமா..?” என் சட்டை பட்டனைக் கழற்றினேன்.
”ரொம்ப சந்தோசங்க..” என் அடுத்த பட்டனை நீ கழற்றினாய்.
என் சட்டையைக் கழட்டும் வேலையை உன்னிடம் விட்டுவிட்டு… நான்.. என் இரண்டு கைகளையும் தூக்கி.. உன் இரண்டு தோள்களிலும் போட்டுக் கொண்டேன். உன் முகத்தை நெருங்கி உன் மூக்கில் என் மூக்கை உரசினேன்.
”டயர்டா இருக்கியாடி..?”

1 Comment

Comments are closed.