ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 5 37

”அப்படி என்னடா பிரச்னை..?”
”பொரு… வா…” என்னை இழுத்துக் கொண்டு போனான்.
எனக்கு குழப்பமாக இருந்தது.
‘ தண்ணியடித்து விட்டு தனியாக என்னுடன் பேசுமளவுக்கு.. என்ன பிரச்சினை..? தாமரை என் வீட்டில் தங்குவது தெரிந்து விட்டதோ…? அது பற்றி ஏதாவது பேசப் போகிறானோ..? சே… சே… அதற்கு இவன் ஏன் இவ்வளவு டென்ஷனாக வேண்டும்..? அல்லது… அவனது புது செட்டப்புடன் ஏதாவது பிரச்சினையோ..? ம்ம்…பார்க்கலாம்…!!’
ஸ்டேண்டுக்கு எதிரேதான் கங்கா. ஊட்டி ரோட்டைத் தாண்டி.. இரண்டே நிமிடத்தில் கங்கா பாருக்குள் நுழைந்தோம்.
எனக்கு பீர்..! அவனுக்கு பிராண்டி..! மடக்.. மடக்கென பிராண்டியைக் குடித்தான். நான் சிப்.. சிப்பாக பீரைப் பருகியவாறு கேட்டேன்.
”என்னடா பிரச்னை..?”
”நீ… கல்யாணம் பண்ணிப்பதான…?” என்று கேட்டான்.
சிரித்து விட்டேன்.
”இத கேக்கவா… என்னை இங்க கூட்டிட்டு வந்த…?”
சிகரெட் பற்ற வைத்தான் குணா.
”கமான் ஐ..ஸே..! பண்ணிப்ப தான..?”

“சொல்லுடா.. நீ கல்யாணம் பண்ணிப்பதானே?” குணா குரல் நடுங்கக் கேட்டான்.
“கண்டிப்பாடா..”
“சரி.. சரி… ”
“ஏன்டா.. இப்ப திடீர்னு இதெல்லாம் கேக்குற.?”
அவன் தடுமாறினான். திணறினான். பின்..
”என் தங்கச்சி நிலாவ… கல்யாணம் பண்ணிக்கறியா…?” என்று கேட்ட குணாவின் குரல் மிகவும் நடுங்கியது.
”வ்வாட்…??” அதிர்ந்து விட்டேன் நான் ”எ… என்னடா சொல்ற. ?”
”நிலா… நிலாவ கல்யாணம் பண்ணிக்கறியா..?” மறுபடி.. சரக்கை ராவாக இறக்கினான் குணா.
”நிலாவயா… என்னடா… சொல்ற..?”
எனக்கு விளங்கவிலலை. அல்லது விளங்கிக் கொள்ளும் நிலையில் நான் இல்லை.
குணா ”எனக்கு எப்படி சொல்றதுனு தெரியலடா..! ஆனா…ஆனா.. அவ உன்னை விரும்பறா…!” என்றான்.
திடுக்கிட்டேன்.
”நிலா… என்னை… விரும்பறாளா..? என்னடா.. இப்படி ஒரு குண்டத் தூக்கி போடற..?”
” எனக்கும் கேள்விப் பட்டப்ப… இப்படிதான்டா இருந்துச்சு…!”
”கேள்விப்பட்டப்பவா… என்னடா…?”
சிகரெட்டை ஆழமாக இழுத்தான். படபடப்பைக் கொஞ்சம் தணித்துக் கொண்டு சொன்னான்.
”கல்யாணம்னு ஒன்னு நடந்தா.. அது உன்னோடதானாம்..! இல்லேன்னா கல்ய்ணமே பண்ணிக்க மாட்டேங்கறா..” என்ற குணா.. என்னைப் பார்த்து நேரடியாகக் கேட்டான் ”நீயும் லவ் பண்றதான..?”
”லவ்வா… என்னடாது..?” அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.
”அவ… அவ… உன்னை பண்றான்னா… உனக்கு தெரியாம எப்படிடா…?”
”வாட்..? நானா..? அப்படிப்பட்ட துரோகி இல்லடா… நான்..!” உன்னிடம் சொன்னது நினைவு வந்தது. ‘என்ன பண்றது… நண்பனோட தங்கச்சியா போய்ட்டாளே..?’
” ஆனா.. அவ அப்படி சொல்லலியே..?”
”அவளே சொன்னாளா..?”
”ஆமா… அவதான் சொன்னா..”
”எப்ப சொன்னா… நட.. இப்பவே கேக்கலாம்…” சட்டென நான் எழுந்து விட்டேன்.
உடனே என் தோளைப் பிடித்து அழுத்தினான் குணா.
”உக்காரு… உக்காரு…! டென்ஷனாகாத..!”
”நா… நான்…! பண்ணலடா..! உன்மேல சத்தியமா..! அவளும் அப்படி என்கிட்ட பழகினதில்ல..!”
”அப்ப…அப்ப. ..நீ பண்ணலை.?”
”ஐயோ.. இல்லடா..! என்னடா நீ.. இவ்ளோ நாள் என்கூட பழகிட்டு..? போடா…! நீயெல்லாம் என்ன புரிஞ்சு வெச்சிருக்க…? உனக்கு தங்கச்சின்னா… அவ எனக்கும் தங்கச்சிதான்டா…?”
”ச்ச்.. ச்ச்…ச்ச்..! அப்படி சொல்லாத.. நீ இல்லேன்னா அவ சாகறேங்கறா..!”
”ச்ச..! அவ சொல்றத நீயும் நம்பறியா…?”
”நா… நம்பலடா..! உன்னைத் தெரியாதா எனக்கு..? நீ எவ்வளவு நல்லவன் .! ஆனா அவ உன்னை பண்றா… அதான் நீ வேனும்னு ஒத்தக் கால்ல நிக்கறா…!”
”எப்படிடா…? சே…! என்னடாது..?”
”ஸாரிடா..! எனக்கு கேக்க தெரியல..? என்னனென்னவோ கேட்டு… உன்னை டென்ஷனாக்கிட்டேன்..! பட்… ரியலா… ரீசன் என்னன்னா.. அவளுக்கு மாப்பிள்ளை வரேன்னாங்க… அதப் பத்தி பேசறப்பத்தான் அவ… இதெல்லாம் சொன்னா..! அதான் உன்கிட்ட எப்படி பேசறதுனு தெரியாம… சரிடா.. சரி… அதெல்லாம் விட்றுலாம்..! நீ சொல்லு அவளை பண்ணிக்கறியா…?”
”என்னடா.. என்னை இப்படி ஒரு இக்கட்ல கொண்டு வந்து விட்டுட்ட..? எனக்கு என்ன சொல்றதுனே.. தெரியலடா..!”
”சரி..நானே சொல்றேன்..! பண்ணிக்கடா.. ! எனக்கு உன்மேல எல்லாம் ஒரு கோவமும் இல்ல..! என் கோவமெல்லாம் அவமேலதான்…! உன்னை நான் நம்பறேன்..”
”நா.. சாதாரணமாதான்டா.. பழகினேன்.. அவகூட..! அது தப்பாடா…?”
”உமமேல தப்பே இல்லடா…! எல்லாம் விட்றுடா… அதெல்லாம் வேண்டாம்…! என்ன சொல்ற… நிலாவ பண்ணிக்கறியா…?”
”இப்படி கேட்டா… நான் என்னடா சொல்றது அடிச்சது பூராமே எனக்கு எறங்கிப் போச்சு…! இன்னொரு பீரு சொல்லு…!” என்றேன்.
குடுக்கற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டுதான் குடுக்கும் என்பார்கள்… இப்படி பாரில் உட்கார வைத்துமா கொடுக்கும்..?
ஒரு வேளை.. நான் உன்னுடன் சேர்ந்து… கோவில் குளமெல்லாம் சுற்றியதால்… சுக்கர திசை என் சூத்தில் அடித்து விட்டதோ..? சே…! என்ன இது..? சாதாரணமாகவே எனக்கு சிந்திக்கத் தெரியாது… இதில் போதையில் உட்கார்ந்து கொண்டு சிந்திப்பது.. ????
”ரெண்டு சொல்லட்டுமா..?”

1 Comment

Comments are closed.