ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 5 37

ஆளுக்கு இரண்டு ஆப்பம் சாப்பிட்டோம்..! நீ.. சிரித்து விட்டு.. சாப்பிட்ட தட்டுக்களை எடுத்துப் போய் கழுவிக் கொண்டு வந்து கேட்டாய்.
”குடுத்துராலங்களா..?”
ஜன்னல் வழியாகப் பார்த்தேன். மேகலா தென்படவில்லை.
”இப்ப.. அத வெளில காணம்..! வெச்சிரு.. அப்பறம் குடுத்துக்கலாம்..!” என்றேன்.
பாத்திரங்களை வைத்து விட்டு.. வந்து… நீ என் பக்கத்தில் உட்கார்ந்து.. டிவியைப் பார்க்க. .. நான் உள்ளே நகர்ந்து உட்கார்ந்து.. உன்னைப் பக்கத்தில்.. இழுத்து… உட்கார வைத்து.. அணைத்துக் கொண்டேன்.!
”அப்றம்.. உன் பிரெண்டு எப்படி இருக்கா..?”
”யாருங்க..?” என்னைப் பார்த்தாய்.
”தீபமலர்..?”
”ஓ..! அவ நல்லாருக்காங்க..!!”
” ஆமா… அந்த.. தீபாளுக்கு வேலை கேட்டியா..?”
”ஆ..! கேட்டங்க…! உங்ககிட்ட அத.. சொல்ல மறந்துட்டங்க..!”
”சரி.. என்ன சொன்னாரு..?”
”இப்ப.. ஆள் வேண்டாம்னு சொன்னாருங்க..! அப்படி வேனும்னா.. சொல்றேன்னு சொன்னாருங்க..”
”சரி.. விடு..! வேற வேலைக்கு ஏற்பாடு..பண்ணலாம்..” என்றேன்.
”செரிங்க…” என்றாய்..!
சிறிது நேரத்தில் மழை ஓய்ந்து விட்டது..!
அதைப்பார்த்த.. நீ..
”மழ நின்றுச்சுங்க…” என்றாய்.
”போலாமா…?” நான் கேட்க…
”போலாங்க…!!” என்று முகத்தில் மகிழ்ச்சி பொங்கச் சிரித்தாய்….!!!!!

சாலையில்.. மழை பெய்த ஈரம் அப்படியே இருந்தது..! அங்கங்கே சின்னச் சின்னக் குட்டைகளாக மழைநீர் தேங்கியிருந்தது..! சாக்கடைத் தண்ணீர் வழக்கத்தை விடவும் அதிகமாக ஓடிக் கொண்டிருந்தது..!!
கால்களைப் பார்த்துப் பார்த்து.. எடுத்து வைத்து நடக்க வேண்டியிருந்தது..! இன்னும் கூட சில… வீடுகளிலும்.. மரங்களிலுமிருந்து.. மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது..! காக்கை.. குருவிகள் வசதியான இடங்களில் உட்கார்ந்து… சிறகுலர்த்திக் கொண்டிருந்தன..!!
சாலையில் நடமாடும் மனிதர்களின்… ஒவ்வொருவர் கையிலும்.. தவறாமல் குடை இருந்தது..!!
பண்ணாரி வழியாக… சத்தியமங்கலம் செல்லும் பேருந்து.. புறப்பட்டுத் தயாராக நின்றிருந்தது..! பேருந்தில் ‘காதல்.. பிசாசே…காதல் பிசாசே..’ பாடல் இறைந்து கொண்டிருந்தது.!
கோவையிலிருந்து.. வரும் பேருந்து…! இருப்பினும் இன்று கூட்டமின்றி.. இருந்தது..! நிறைய இருக்கைகள் காழியாக இருந்தது..!!
நீ ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டாய். ஜன்னலின் விளிம்பில் மழையின் ஈரம் கசிந்து கொண்டிருந்தது..!! ஏஸி பேருந்து போல.. உள்ளே குளு குளுவென்றிருந்தது. நீ.. உன் தோள் பேகை மடியில் வைத்து அணைத்துக் கொண்டாய்..!
முன்னிருக்கையில் ஒரு புதுமண ஜோடி உட்கார்ந்திருந்தனர்.
”இந்த பஸ் நேரா.. பண்ணாரியே போகுதுங்களா..?” என்று என்னைப் பார்த்துக் கேட்டாய்.
”நேரா… போறதுக்கு இது என்ன பிளேனா..? வளஞ்சு… வளஞ்சுதான் போகும்..” என்றேன்.
நீ.. அப்பாவியாகச் சிரித்தாய்..! ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்தாய். பேருந்து கிளம்பி வேகமாகச் செல்லத் துவங்க… மழையின் ஈரக்காற்று… விசுவிசுவென…வீசி… உடம்பின் மயிர்க் கால்களையெல்லாம் சிலிர்க்க வைத்தது..! காற்றுக்கு.. உன் கூந்தல் உதிரிகள்… பறந்து வந்து என் முகத்தில் மோதிக்கொண்டே இருந்தது..! நீயும் முடிந்த வரை.. அதை எடுத்து.. உன் காதோரமாக ஒதுக்கிக் கொண்டிருந்தாய்..! அப்படியும் அது சிலிப்பிக் கொண்டு வந்தது..!!
உன் தலையிலிருந்து வீசிய.. ரோஜா மணம் மிகவும் சுகந்தமாக இருந்தது..! நானும் வெளியே பார்த்தவாறு… உன் பக்கமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன்..! முன்னிருக்கையில் இருந்தவர்கள்.. அண்மையில்தான் மணமானவர்களாக இருக்க வேண்டும்..!
பெண்ணின் கழுத்தில் மெருகு கலையாத தாலிக்கயிரும்… இரட்டை வடச் சங்கிலியும் பிணைந்து கிடந்தது..! அதைத் தவிறவும் அந்தப் பெண் நிறைய.. நகைகளை அணிந்திருந்தாள்.! வயலட் கலர் புடவையில் நல்ல நிறமாக இருந்தாள்..! நெளி நெளியான கூந்தலில்… சரம் சரமாக பூ வைத்திருந்தாள்..! தன் கணவன் தோளில் சாய்ந்தவாறு… மிகச் சன்னமான குரலில் சிரித்துச் சிரித்துப் பேசினாள்…!!
”தாமரை..” மெல்லிய குரலில் அழைத்தேன்.
வெளியே பார்த்துக் கொண்டிருந்தவள்.. சடக்கென என் பக்கம் திரும்பினாய்.
”என்னங்க..?”
”மேகலா.. அழகாத்தான் இருக்கா… இல்ல…?”
என்னை வியப்புடன் பார்த்தாய். என் எண்ணம் உனக்குப் புரிந்து விட்டது..! நீ சிரித்தாய்..!
”நீ.. என்ன சொல்ற..?” என்றேன்.
”நா… என்னங்க… சொல்றது..?” என்றாய்.
”அதானே…நீ என்ன சொல்லுவ..? பாவம்..!!” என்றேன் ”ஆனா தாமரை..!! அவ மனசுலயும் அந்த சைத்தான் பூந்துருச்சுனு நெனைக்கறேன்..!!”
நீ.. அப்பாவியாகச் சிரித்தாயே தவிற… ஒன்றும் பேசவில்லை. மழைக் காற்றின்.. ஈரத்துடன்.. உன் அருகில் உட்கார்ந்து.. இப்படி பிரயாணிப்பது… மனதுக்கு மிகவும் சுகமாக இருந்தது..!!
திடுமென நீ…
” தீபா.. உங்களப் பத்தி ஒன்னு சொன்னாங்க..” என்றாய்.
”என்னைப் பத்தியா..?”
”ஆமாங்க..”
” என்ன சொன்னா..?”
”உங்கள மாதிரி.. ஒருத்தரப் பாக்கறது.. அதிசயம்னு சொன்னாங்க…!!”
” ஓ..!! ஏனாம்…?”
”உங்களப் பத்தி… நா அவகிட்ட.. எல்லாமே சொன்னங்க..”
”எல்லாமேன்னா..?”
”உங்க… நல்ல மனசு..! குணம்..!! தனியாருக்கறது… எல்லாம் சொன்னங்க..!!”
”ஓ…!! அப்படியா..?”
இப்படி சின்னச் சின்னதாக நிறையப் பேசினோம்..!! பயணத்தில்.. இருவரும் மிகவும் அன்னியோன்யமாக இருந்தோம்..!! ஒன்னேகால் மணி நேர.. பிரயாணம்..! வேறு சமயமாக இருந்திருந்தால்.. நிச்சயமாக அழுத்துப் போயிருக்கும்..! ஆனால் நீ என் பக்கத்தில் இருந்ததால்… அப்படி எதுவும் தோன்றவில்லை..!!
பண்ணாரி அம்மன் கோவிலின் விஸ்தாரத்தையும்.. அதன் முன் இருந்த… காலி இடத்தையும் பார்த்து வியந்தவாறு சொன்னாய்.

1 Comment

Comments are closed.