ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 5 37

”ஓ…!!” சிறிது இடைவெளி விட்டுக் கேட்டேன் ”ஆமா.. நீ எதுக்கு இங்க வர்ரேனு கேட்டுசசா..?”
”ஆமாங்க…”
”நீ… என்ன சொன்ன…?”
”வீடு கூட்டி… துணி தொவச்சுக் குடுக்க வர்றதா….”
சிரித்துவிட்டேன்.
”ஓ..!! வேலைக்காரி… மாதிரி..?”
”ஆனாக்கா..அது நம்பின மாதிரி தெரியலீங்க…” என்றாய்.
காபி குடித்த பின்.. நான் குளிக்க ஆயத்தமானேன். சேவிங் செட்டெல்லாம் எடுத்து வைத்து விட்டு..
”சரி.. நான் குளிச்சிட்டு வந்தர்றேன் தாமரை..” என்றேன்.
”செரிங்க..” என்று விட்டுச் சொன்னாய் ”என்னங்க இந்த மழை..? காலைலயே இப்படி பெய்யுது..?”
”தூரல்தான..?”
”இன்னிககேதான்.. பேயனுங்களா..? நேத்தோ.. இல்ல நாளைக்கோ..பேஞ்சா.. என்னங்களாம்..?”
”புயல் உருவாகியிருக்கும்..! சொல்ல முடியாது… இன்னும் ரெண்டு..மூனு நாள் பெஞ்சாலும் பெய்யலாம்..”
”எத்தனை நாள் வேனா… பேயட்டுங்க..! இன்னிக்கு ஒரு நாள் மட்டும்.. நிக்கக் கூடாதுங்களா…?”
”ஹா..ஹா..! உனக்கென்னடி.. மழைமேல.. இத்தனை கோபம்..?”
”நாம.. இன்னிக்குத்தாங்க.. பண்ணாரி போறோம்..?”
”ஏய்..! கவலப்படாத..! நாம போறத.. இந்த மழை தடுத்துராது..!!”
”போலாந்தாங்க..?”
”ம்ம்..! போலாம்.. போலாம்..!!”
”நா…ரொம்ப ஆசையா.. வந்தங்க..!!”
”பத்து மணிக்கு மேல.. போனாபோதும்…”
”சரிங்க..!” என்றவள்.. சிறிது தயக்கத்துக்குப் பின் கேட்டாய் ”கார்லீங்களா போறோம்..?”
”ஏன்… கார்லதான் போகனுமா..?”
”ஐயோ..! அப்படி இல்லீங்க..! சும்மா கேட்டங்க..!!”
”கார்ல இல்ல..! பஸ்லதான் போறோம்..!!” என்றேன்.
”செரிங்க…! தெரிஞ்சுக்கலாம்னுதாங்க கேட்டேன்..!!” என்று சிரித்தாய்.
உன் கன்னத்தில் சுண்டிவிட்டு… நான் குளிக்கப் போனேன்..!! நான் உல்லாசக் குளியல் போட்டு… உடை மாற்றிய போது… ஜன்னல் வழியாக மேகலா தென்பட்டாள். சட்டென நீ.. மறைந்து நின்றாய்.
நான் சிரிக்க… அவளும் சிரித்து… ”சாப்பிட்டாச்சா..?” என்று கேட்டாள்.
”இல்ல..! நீங்க…?”
”நா… இன்னும் பல்லுகூட வெளக்கல..!” என்றாள்.
”பசங்க..?”
”உள்ளருக்காங்க..”
”உங்க வீட்டுக்காரரு..?”
”எங்கயோ போனாரு..”
”என்ன சமையல்..? மட்டனா.. சிக்கனா..?”
சிரித்தாள் ”இப்ப.. ஆப்பம் மட்டும்தான்..! இனிமேதான்.. மத்ததெல்லாம்..!!”
”ஓ..! காலைல.. டிபன்..! ஆப்பமா..?”
”ம்ம்..! தரட்டுமா..? சாப்பிடறீங்களா..?” என்று கேட்டாள்.
மறுக்க மனமில்லை..!
”ம்ம்.. குடுங்க..!!” என்றேன்.
உடனே வீட்டுக்குள் போய்.. ஒரு தட்டில் போட்டு… மூடி.. நனையாமல் குடை பிடித்துக் கொண்டு வந்து ஜன்னல் வழியாகக் கொடுத்தாள்.
”நனஞ்சிட்டு வரனுமா..?” என்று வாங்கினேன்.
”பரவால்ல..! ” கொடுத்த பின்..கையை வெளியே எடுத்து.. ”குளிக்கனும்..” என்றாள்.
”குளிச்சிட்டு…?”
என்னை முறைப்பாகப் பார்த்தாள்.
”இ..இல்ல..! இப்பவே பாதி குளிச்சிட்டீங்க..! அதான்..குளிச்சிட்டு என்ன பண்ணப்போறதா.. பிளான்னு கேட்டேன்..!!”
” பிளான்லாம்.. ஒன்னும் இல்ல..” என்று விட்டுத் திரும்பிப் போனாள்.
மூடிய தட்டை விலக்க.. உள்ளே நான்கு ஆப்பங்களும்.. அதற்கு தொட்டுக் கொள்ள.. தேங்காய் சட்னியும்.. கத்தரிக்காய் சாம்பாரும் இருந்தது..!! மூடியைத் திறந்தவுடனே.. ஆப்பம் மணத்தது..!!
நகர்ந்து கட்டிலில் உட்கார்ந்து.. உன்னைக் கூப்பிட்டேன்.
”இந்தா…சாப்பிடு..”
” நீங்க..சாப்பிடுங்க..!!” என்றாய்.
”ஏய்.. சாப்பிடு..வா..” என்க.. நீ என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாய்.
இருவரும் பேசிக்கொண்டே.. ஆப்பம் சாப்பிட்டோம்..! சாப்பிடும்போது கேட்டாய்.
”நா.. இருக்கறது தெரிஞ்சா.. என்னங்க நெனைக்கும்..?”
” என்ன நெனைக்கப் போறா..? எல்லாரையும் போலத்தான்..!”
”ஆனா… நல்ல.. அழகா.. லட்சணமா இருங்குங்க..”
உன்னைப் பார்த்தேன்.
”அப்படிங்கறியா..?”
”ஏங்க…?”
”ம்ம்…! நீ சொல்றது.. உண்மைதான்..! மாநிறமா இருந்தாலும்… ஒடம்பு நல்லா.. நசசுனுதான் இருக்கு..! அலட்டல் இல்லாத.. அழகுனு சொல்லலாம்..!! என்ன.. அவ புருஷனுக்கு.. அவள புடிக்கறதில்லேன்னு… கொஞ்சம் பீல் பண்ணுவா..!!”
நீ… வெறுமனே சிரித்தாய். நான் மறுபடி..
”ஆனா…நல்ல கட்டை..!!” என்றேன்.
உடனே நீ.. ”அதும்பேர்ல ஆசைங்களா..?” என்று கேட்டாய்.
”என்ன…?”
தயங்கினாய் ”இ..இல்ல… அது மேல…?”
”உனக்கு.. ஏன் இப்படி கேக்கனும்னு தோணுச்சு..?”
”ஐயோ..! தப்புன்னா மன்னிச்சிருங்க..! என் குணம்.. சட்னு கேட்டுட்டேன்..!”
”ஓகே..! பரவால்ல… விடு..!!” என சிரித்தேன்.

1 Comment

Comments are closed.