ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 5 37

”ம்ம்.. உன் அனுபவத்துல.. நீ எத்தனை பேர பாத்துருப்ப..! அதுல எத்தனை பேரு.. உன் மனசுக்கு புடிச்சவங்களா.. இருப்பாங்க..??”
“…….”
” அவங்கள்ள… யாரப்பத்தியாவாது… ஏதாவது சொல்லேன்..!!”
‘கெக்’ கென ஒரு சத்தம்…!! துக்கத்தில் நீ வெடித்தாய்..!! உன்னால்.. உன் விம்மலை அடக்க முடியவில்லை..!! உன் கண்ணீரில்… என் மார்பு நனையத் தொடங்கியது.. !!

” தாமரை…”
நீ விசித்து விசித்து அழுதாய். உன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரில் என் மார்பு நனைந்து விட்டது.
”ஏய்.. தாமரை..?”
ம்கூம்..! நீ புரண்டு புரண்டு அழுதாய்..! உன் மனதின் பாரமான ஒரு பகுதியை நான் தாக்கிவிட்டேன்.! இது உன் நீண்ட நாள் துக்கத்தின் வெளிப்பாடு போலும்..!!
உன் கண்கள் சிந்தும் கண்ணீர்… என் நெஞ்சைத் தாக்கியது..! என் தவறு புரிந்தது..! என் குற்றத்தை உணர்ந்தேன். உன்னிடம் நான் இப்படி கேட்டிருக்கக் கூடாது.! உன் முகத்தை… மேலே தூக்கினேன்..! கண்ணீர் வழிந்த உன் கன்னங்களைத் துடைத்தேன்.!
”ஏய்.. என்னடி இது..? ஒரு வெளையாட்டுக்கு பேசினா… அதுக்கு போயி… இப்படி….” உன்னை மேலே இழுத்து.. உன் நெற்றியில் முத்தமிட்டேன்.
”ஸாரிடி…! நா..ஏதோ.. வெளையாட்டா நெனச்சுத்தான் கேட்டேன்..! ஆனா… நீ அத இவ்வளவு சீரியஸா எடுத்துக்குவேனு தெரியாம…!! ஸாரி…!!” என்றேன்.
உன் விசும்பல் மெல்ல குறைந்தது.
”பரவால்லீங்…” என மூக்கை உறிஞ்சினாய்.
”நெஜமா.. நா… வெளையாட்டாத்தான்டி கேட்டேன்…”
”பரவால்லீங்க.. ஆனா இன்னொரு வாட்டி அப்படி பேசாதிங்க..! என்னால தாங்க முடியாது..!! ”
”சரி… பேசல…! ஆனா அநதளவுக்கு… இதுல என்னடி இருக்கு..?”
” என்னால முடியாதுங்க…! நீங்க இப்படி பேசினா… அப்பறம்.. நான்… செத்துருவங்க..!’’
”ஏய்…ச்சீ… லூசு…! என்னடி.. பேசற…?”
மறுபடி உன் கண்கள் கண்ணீரைச் சுரந்தது..! உன்னை அணைத்து..உன் கணகளைத் துடைத்து விட்டேன். இப்போதைக்கு உனக்குத் தேவை ஆறுதல்தான். கேள்விகள் அர்த்தமற்றவை..!
”சரி…சரி…! இனிமே கேக்க மாட்டேன் போதுமா..? என்னை மன்னிச்சிரு…!!”
”ஐயோ… மன்னிப்பெல்லாம் கேக்காதிங்க..” கண்களைத் துடைத்து மூக்கை உறிஞ்சினாய் ”நீங்க என்னோட உசுருங்க..! உங்களத் தவற நான் யாருக்குமே இல்லீங்க..! இதுக்கு முன்னால நான் அப்படி இருந்தவதாங்க.. ஆனா இனிமே… உங்களத் தவற வேற யாரும் என்னை தொட முடியாதுங்க..! இது சத்தியங்க..! உங்களுக்கு என்னை புடிக்கலேன்னாலும் பரவால்லீங்க.. ஆனா இப்படியெல்லாம் பேசாதிங்க..! அப்பறம் நான் உசிரையே விட்றுவங்க…!!” என்று நீ உருக்கமாகச் சொல்ல… எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
‘நான் அலட்சியமாக நினைக்கும் ஒரு விசயம்… உனக்கு எந்தளவு முக்கியமான ஒன்றாக இருக்கிறது..?’
உன்னை இருக்கமாக அணைத்துக் கொண்டேன். நீண்ட நேரத்துக்குப் பின்பே.. நீ என்னிடமிருந்து விலகினாய்.
”என் மேல கோபமாடி…?” நான் கேட்டேன்.
”ஐயோ…! இல்லீங்க…!!”
”கோபமில்லதானே..?”
”சாமி சத்தியமா இல்லீங்க..”
”இனிமே அப்படி பேசமாட்டேன்..! தெரியாம பேசிட்டேன்… என்ன..?”
”பரவால்லீங்க..! நானும் சட்னு அழுதுட்டேன்..! என்னை மன்னிசசிருங்க… என்னமோ.. நீங்க அப்படி கேட்டதும்.. என்னால தாங்கிக்க முடியலீங்க..”
”ம்ம்…! நான் அப்படி கேட்றுக்கக் கூடாது..!!”
”காபி குடிக்கலாங்களா…?”
” ம்ம்…! வெய்…!! பாலு..?”
”நான் போயி வாங்கிட்டு வரங்க..”
”ம்..ம்..!!”
”வேற ஏதாவது வாங்கறதுங்களா..?”
”இல்ல வேண்டாம்..! பால் மட்டும் வாங்கிட்டு வா..! உனக்கு வேனும்னா ஏதாவது வாங்கிக்க..”
”செரிங்க..”
என்னிடமிருந்து விலகி எழுந்து.. நின்று.. உள்ளாடைகள் அணிந்து.. ரவிக்கை போட்டு.. புடவை கடடிக் கொண்டு பாத்ரூம் போனாய். என் அருகே.. கட்டிலில்.. உன் கூந்தலில் இருந்து.. உதிர்ந்த ரோஜாவும்… மல்லிகையும் சிதறிக் கிடந்தது.
ரோஜாக்கள் இதழ்… இதழாக பிரிந்து.. கசங்கி சுருண்டு கிடந்தது. என் படுக்கையை அலங்கரித்த.. அந்த உதிரிப் பூக்களை எல்லாம் சேகரித்து.. முகர்ந்தேன். வாடிய பூக்களின் நறுமணத்தில் என் சுவாசம் புத்துணர்ச்சியடைந்தது. அவைகளை.. என் நெஞ்சின் மேல் போட்டுக்கொண்டு கண்களை மூடினேன்.
அசதியும்.. தலை பாரமும்.. அப்படியே என்னைத் தூக்கத்தில் ஆழ்த்தி விட்டது.! கலர் கலராகக் கனவுகள் வந்தன.!

1 Comment

Comments are closed.