ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 4 30

விஸ்வா, “வனிதா வேலைக்குப் போக ஆரம்பிச்ச அதே சமயத்தில் எனக்கு மார்கெடிங்க் மேனேஜர் ப்ரொமோஷன் கொடுத்து இருந்தாங்க. அதில் இருந்து நான் ரொம்ப பிஸியாயிட்டேன்”

அமுதா, “உங்க ரெண்டு பேருக்குள் உறவு எப்படி இருந்தது?”

விஸ்வா, “ஓ.கே”

மேலும் அவன் சொன்னதில் இருந்து அவர்கள் வாழ்க்கை அவன் கண்ணோட்டத்தில் குழந்தைகளைச் சுற்றி மட்டுமே சுழன்றதை அமுதா உணர்ந்தார். கவுன்ஸிலிங்கின் அடுத்த கட்டத்தை அடைய விஸ்வா தன் அனுபவங்களைப் பற்றி சுருக்கிச் சொல்வதை உணர்ந்தார்.

அந்த உரையாடலின் திசையை மாற்ற அமுதா, “Tell me about your professional life”

விஸ்வா, “சேல்ஸ் மேனேஜர் அப்படிங்கற பொஸிஷன் புதுசா உருவாக்கப் பட்டது. சேல்ஸ் ரெப் நாலஞ்சு பேர் இருந்தாங்க. அவங்க எல்லாம் சந்திரசேகர் பொறுப்பில் வேலை செஞ்சுட்டு இருந்தாங்க. நான் சேர்ந்ததற்குப் பிறகு அவங்க எல்லாம் எனக்கு ரிப்போர்ட் பண்ணினாங்க. அதனால வேலைக்கு சேர்ந்த புதுசில் சந்திரசேகரோடு அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டி இருந்தது. அப்போ PML உற்பத்தி செஞ்சுட்டு இருந்த பொருட்களுக்கு தென் இந்தியாவில் போட்டியாளர்கள் யாரும் இல்லை. வடக்கிலும் லூதியானாவில் ஒரு கம்பெனி மட்டும்தான். அதனால் அந்தப் பொருட்களை விற்பனை செய்வது ரொம்ப சுலபம். தொடர்ந்த வாடிக்கையாளர்கள் கூப்பிட்டு ஆர்டர் கொடுப்பாங்க. சேர்ந்து கொஞ்ச நாளில் விற்பனை சம்பந்தப் பட்ட எல்லாப் பொறுப்பையும் நான் எடுத்துட்டேன். இருந்தாலும் என்னால் அதற்கும் அதிகமா செய்ய முடியும்ன்னு நம்பினேன். Basically I wanted to come up in my career”

அமுதா, “நீ சொல்வது ரொம்ப சரி. நிறையப் பேர் கொடுத்த வேலையை மட்டும் செஞ்சாப் போதும்ன்னு நினைக்கறாங்க. ஆனா அதுவே அவங்க முன்னுக்கு வரத் தடையா இருக்கும்ன்னு நினைக்கறது இல்லை. ம்ம்ம்ம் . அப்பறம்?”

விஸ்வா, “PML தொழிற்சாலையில் இருக்கும் மெஷின்களை வெச்சுட்டு இன்னும் சில பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்ன்னு தெரிஞ்சுகிட்டேன். ஒரு சிலரை மட்டும் புதுசா வேலைக்கு எடுத்தா போதும். மற்ற பொருட்களை உற்பத்தி செஞ்சு வித்தா PMLஇன் வரவை 30% அதிகம் ஆக்க முடியும்ன்னு சந்திரசேகருக்கு ஒரு ப்ரெசெண்டேஷன் கொடுத்தேன். அவர் எப்பவும் போல தலையை சொறிந்தார். நானே சண்முகம் சார்கிட்டே பேசி பர்மிஷன் வாங்கறேன்னு சொன்னேன். போர்ட் மெம்பர்ஸ் எல்லாருக்கும் அதே ப்ரசெண்டேஷன் கொடுத்தேன். அவங்க எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சு இருந்தது. அந்த புதுப் பொருட்களை உற்பத்தி செஞ்சு விற்பதை என் பொறுப்பில் விட்டாங்க. That is how my growth started in PML”

1 Comment

Comments are closed.