ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 4 30

அமுதா, “நான் இன்னும் கொஞ்சம் விளக்கமா கேட்கறேன். குழந்தைங்களை தூங்க வெச்ச பிறகு தினமும் பொதுவா எத்தனை மணி நேரம் வனிதாவுடன் செலவு செய்வே. ஐ மீன் முழிச்சுட்டு இருக்கும் போது?”

விஸ்வா, “Not every day .. but … நிறைய நாள் ஒரு மணி நேரம் சில சமயம் … ஐ மீன் முன்னாடி எல்லாம் ரெண்டு மணி நேரம் கூட … ம்ம்ம் … அவகூட இருப்பேன். We used have sex”

அமுதா, “ஒரு ஏழு மாசத்துக்கு முன்னாடி? இல்லை. ஒரு வருஷத்துக்கு முன்னாடி எவ்வளவு நெருக்கம் இருந்தது?”

விஸ்வா மௌனம் காத்தான் …

அமுதா, “அந்த விஷயத்தைப் பத்தி என்னுடன் பேச நீ கூச்சப் படறேன்னு தெரியுது. இருந்தாலும் ரெண்டே ரெண்டு கேள்விகளை மட்டும் யோசிச்சு ராம்கிட்டே அதற்கான பதிலை சொல்லு. ஓ,கே?”

விஸ்வா, “என்ன கேள்வி?”

அமுதா, “கடந்த ஒரு வருஷமா சராசரியா வாரத்துக்கு எத்தனை நாள் உங்களுக்கிடையே உடலுறவு இருக்கும்? சராசரியா எத்தனை மணிநேரம் நெருக்கமா இருப்பீங்க?”

விஸ்வாவின் முகம் வெளுத்தது …

அமுதா, “ராம் என்னைக்கு வர்றார்?”

விஸ்வா, “இன்னைக்கு நைட்டு. நாளைக்கு சாயங்காலம் அவன் கூடப் பேசப் போறேன்”

அடுத்த கட்டத்தை நெருங்கி மேலும் தள்ளிப் போட விரும்பாமல் அதற்கு விஸ்வாவை தயார் செய்ய முனைந்தார் …

அமுதா, “விஸ்வா, வனிதாவைப் பத்தின ஒரு விஷயம், அவ சின்ன வயசில் நடந்தது, நேத்து தெரிஞ்சுட்டேன்”

விஸ்வா, “என்ன விஷயம்?”

அமுதா, “உன்னைக் கன்வின்ஸ் பண்ணறதுக்காக நான் இதைச் சொல்லலை” என்று தொடங்கி வனிதாவின் சிறு வயதில் நடந்தவற்றைக் கூறினார். முடிவில், “ஸோ, சில விடைகள் கிடைச்சு இருக்கு”

விஸ்வா, “சோ, நீங்க அவ செஞ்சது சரிங்கறீங்களா?”

அமுதா, “இல்லை விஸ்வா. நான் எப்பவும் அவ செஞ்சதை சரின்னு சொல்ல மாட்டேன்”

விஸ்வா, “அப்பறம் என்ன விடைகள்?”

அமுதா, “முதல் முதலில் எதுக்காக அந்த தவறை அவ செஞ்சான்னு உனக்குத் தெரியுமா?”

விஸ்வா, “தெரியும். எனக்கு வேலை வாங்கிக் கொடுக்க”

அமுதா, “உனக்கு எப்படித் தெரியும். உன் கிட்டே எதுவும் வனிதா சொல்லலைன்னு சொன்னாளே?”

1 Comment

Comments are closed.