ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 4 30

சுமதி, “விஸ்வா, நான் என் வீட்டுக்காரரை ஒழுங்கா கவனிச்சுக்கலை. I mean sexually. More over, அவருக்குள்ளே இப்படி ஒரு நயவஞ்சக குணம் இருக்குன்னும் எனக்குத் தெரியலை. இல்லைன்னா மத்த பெண்ணைத் தேடிப் போக விட்டு இருக்க மாட்டேன். அந்த மனுஷனும் உன் வாழ்க்கையையும் இப்படி நரகமாக்கி இருக்க மாட்டார். உன்னை வேலையில் சேர்க்க அவர் போட்ட நிபந்தனைக்கு வனிதா ஏன் அப்படி முட்டாள்தனமா ஒத்துகிட்டான்னு தெரியலை. ஆனா ஏழு மாசத்துக்கு முன்னாடி மறுபடியும் அவங்க ஒண்ணு சேர்ந்ததுக்கு நான் தான் காரணம்”

விஸ்வா, “என்ன சொல்லறீங்க?”

சுமதி, “டெல்லியில் நடந்த அந்த ட்ரேட் ஃபேரில் கலந்துக்க PMLஇன் முக்கியப் பிரதிநிதிகளா நீயும் அவரும் போறதா இருந்தது. நீ வனிதாவையும் கூட அழைச்சுட்டுப் வரப் போறதா அவர்கிட்டே சொன்னே. என்னையும் டெல்லிக்கு அவர் வரச் சொன்னார். எப்பவும் ஸ்கூல் காலேஜுன்னு இருக்கியே நாலஞ்சு நாள் ஜாலியா இருக்கலாம்ன்னு ரொம்ப கெஞ்சிக் கேட்டுப் பார்த்தார். நான் போகலை. கடைசி நிமிஷத்தில் ஜப்பான் கம்பெனிக்காரங்க ஒரு டிஸ்கஷனுக்குக் கூப்பிடதால் நீயும் அதை முடிச்சுட்டு நேரா டெல்லி வர்றதா ப்ளான் பண்ணி சிங்கப்பூருக்குக் கிளம்பிப் போனே. முதல் ஒண்ணு ரெண்டு நாள் ட்ரேட் ஃபேரில் எங்க வீட்டுக்காரருக்கு உதவியா இருக்க வனிதாவை டெல்லிக்கு அனுப்பினே. அந்த ட்ரேட் ஃபேர் முடியற வரைக்கும் உன்னால் சிங்கப்பூரை விட்டு வர முடியலை. அந்த சமயத்தில்தான் என் வீட்டுக்காரர் வனிதாவை மறுபடியும் தன் ஆசைக்கு அடி பணிய வெச்சு இருக்கார். முதல் தடவை ஒயின் ஊத்திக்கொடுத்துக் கூட்டிட்டுப் போனாராம். அதுக்குப் பிறகு கூப்பிட்டப்ப அவளே வந்தான்னு சப்பைக் கட்டு கட்டி இருக்கார். இதை எல்லாம் என் முகத்துக்கு நேரா சொல்ல பயப்பட்டு கோழைத் தனமா கடுதாசி எழுதி வெச்சுட்டுக் குடிச்சுட்டு காரை ஹைவேல எடுத்துட்டுப் எதிரில் வந்த லாரியில் மோதி இருக்கார்.”

விஸ்வா கண்கள் குளமாக, தொண்டை கரகரக்க “I am so sorry .. ஆனா அது மட்டும்தான் அவர் தற்கொலை செஞ்சுக்கக் காரணம் இல்லை”

சுமதி, “தெரியும். அதையும் எழுதி வெச்சுட்டுத் தான் போயிருக்கார். துளிகூட நன்றி இல்லாம கம்பெனிக்கு நாயா உழைக்கும் உனக்கு துரோகம் செஞ்சு இருக்கார். நீ பதிலுக்கு அப்படிக் கேட்டதில் என்ன தப்பு?”

விஸ்வா வாயடைத்துப் போய் நின்று இருந்தான்.

சுமதி, “அவர் உயிரோடு இருந்தப்ப அவருக்கு நான் கொடுத்து இருக்க வேண்டிய அந்த சுகத்தை நான் உனக்குக் கொடுக்கத் தயாரா இருக்கேன். செத்துப் போன அந்த நன்றி கெட்ட நயவஞ்சகனுக்காக இல்லை. PMLஐ நம்பி இருக்கும் குடும்பங்களுக்காக. முப்பத்தி அஞ்சு வயசானாலும் நான் இன்னும் இளமையாத்தான் இருக்கேன். உனக்கு வேணுங்கற வரைக்கும் நான் உனக்கு வைப்பாடியா இருக்கத் தயார். ஏற்கனவே கம்பெனியில் எல்லாம் ஸ்தம்பிச்சுப் போய் இருக்கு. I don’t want to delay further. இப்போதைக்கு இந்த ரூம் ஓ.கே. அப்பறம் அந்த கெஸ்ட் ஹவுஸை எப்பவும் காலியா வெச்சுக்கலாம். அங்கே அவர் வாரம் ஒரு முறை வனிதாகூட இருந்ததா சொல்லி இருக்கார். ஆனா உனக்கு எப்போ நான் வேணும்ன்னாலும் சரி. ஒரு ஃபோன் கால் போதும். அடுத்த அரை மணி நேரத்தில் கெஸ்ட் ஹவுஸில் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன். சரியா?” என்றபடி தன் முந்தானையைப் பொருத்தி இருந்த பின்னைக் கழட்ட முற்பட்டாள்.

அவள் காலடியில் மண்டியிட்டு விஸ்வா கதறினான், “Oh, please, please just kill me”

தன் காலடியில் விழுந்தவனை இழுத்து அவன் தலையை தன் மடிமேல் சாய்த்தபடி சுமதியும் அழுது குலுங்கினாள் …

1 Comment

Comments are closed.