ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 4 30

அமுதா, “சரி, இந்த விஷயத்தை சத்தியமா நான் விஸ்வாவுக்கு சொல்ல மாட்டேன். சொல்லு”

வனிதா, “He can’t lost long. அவருக்கு சீக்கிரமா வந்துடும்”

அமுதா, “சீக்கிரமான்னா?”

வனிதா, “ஒண்ணு ரெண்டு நிமிஷத்தில்”

பெங்களூரில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப் பட்ட NIMHANS என அழைக்கப் படும் National Institute of Menhal Health and Neurosciences – தேசிய மன நலம் மற்றும் நரம்பறிவியல் ஆராய்ச்சிக் கல்லூரியும் அதனைச் சார்ந்த அமைப்புகளையும் கொண்ட பகுதியில் ஒரு அமைதியான பூங்காவில் மர நிழலில் இருந்த ஒரு பெஞ்சில் இரட்டையர்கள் இருவரும் அமர்ந்து இருந்தனர் …

ராம், “ம்ம்ம் … சொல்லு”

விஸ்வா, “என்ன சொல்லறது? Vanitha has been sleeping around with my boss”

ராம், “தெரியும் … டாக்டர் அமுதா கூட நேத்து லண்டனில் இருந்து புறப்படுவதற்கு முன் பேசினேன். மறுபடி என் கிட்டே இன்னைக்கு மதியம் பேசினாங்க”

பெருமூச்செறிந்த விஸ்வா, “எப்போ இந்த கவுன்ஸிலிங்க் முடியும்-ன்னு இருக்கு .. ”

ராம், “ஏன்?”

விஸ்வா, “So that I can get on with life”

ராம், “என்ன செய்யறதா உத்தேசம்?”

விஸ்வா, “தனியா ஒரு ஃப்ளாட் எடுத்துட்டு இருக்கப் போறேன். மே பீ, வசியைப் பாத்துக்க ஒரு ஆளை வேலைக்கு எடுத்துக்க வேண்டி இருக்கும்”

ராம், “அதுக்கப்பறம்?”

விஸ்வா, “அதுக்கு அப்பறம் என்ன? என் வேலையிலும் வசியை நல்ல முறையில் வளர்ப்பதிலும் கவனம் செலுத்தப் போறேன்”

ராம், “அம்மா இல்லாமல் நீ மட்டும் வளர்த்தா அவ நல்ல முறையில் வளருவாள்-ன்னு நினைக்கறையா?”

விஸ்வா, “அந்த மாதிரி அம்மாவை விட நான் நல்ல பழக்க வழங்க்கங்களை சொல்லித் தருவேன்”

ராம், “நீ சொல்றதை எல்லாம் உன் பொண்ணு கேட்டுக்கணும். அப்படித்தானே? குழந்தை வளர்ப்பது என்ன ஆர்மி ட்ரெயினிங்க்-ன்னு நினைச்சுட்டு இருக்கியா?”

விஸ்வா, “என்னை என்னதாண்டா செய்யச் சொல்லறே?”

ராம், “அது நீயா முடிவு எடுக்க வேண்டிய விஷயம்”

விஸ்வா, “தெரியாமத்தானே கேட்கறேன்”

ராம், “விஸ்வா, You are a manager by profession. அதுவும் ஆர்மி ஆஃபீஸரா இருந்ததுக்குப் பிறகு மேனேஜ்மண்ட் படிச்சே. ஒரு முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி எல்லா கோணத்தில் இருந்தும் அதை அலசிப் பார்க்கணும் இல்லையா?”

விஸ்வா, “எந்த முடிவைப் பத்தி சொல்லறே?”

ராம், “டைவர்ஸ் பண்ணனும்-ன்னு எடுத்த முடிவு”

விஸ்வா, “நான் அலசிப் பார்க்கலை-ன்னு சொல்லறையா?”

ராம், “சில விஷயங்களை நீ அலசிப் பார்த்தியா-ன்னு தெரியலை”

விஸ்வா, “என்ன சில விஷயங்கள்”

ராம், “உதாரணத்துக்கு வனிதா அப்படி செஞ்சதுக்கான காரணம்”

1 Comment

Comments are closed.