ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 4 30

வனிதா, “என் வேலையில் எந்த மாற்றமும் இல்லை. விஸ்வாவை CEOஆக நியமிக்கப் போறாங்க-ன்னு கேள்விப் பட்டேன்”

அமுதா, “நீ விஸ்வா இருக்கும் அதே ஆஃபீஸில்தானே வேலை செய்யறே?”

வனிதா, “அதே பில்டிங்க்தான் ஆனா வேற பகுதியில்”

அமுதா, “பொதுவா ஆஃபீஸில் நீங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிப்பீங்களா?”

வனிதா, “லஞ்ச் டைமில் … முன்னே எல்லாம் ஒண்ணா சாப்பிடுவோம்”

அமுதா, “ராம் எதாவுது கேட்டாரா?”

வனிதா, “அத்தை மாமா சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கறேன். கவுன்ஸிலிங்க் எப்படிப் போயிட்டு இருக்குன்னு கேட்டார். நான் போயிட்டு இருக்குன்னு விட்டேத்தியா பதில் சொன்னேன். எதுவா இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் ரிசால்வ் செய்ய முடியும். மனசைத் தளர விடாதேன்னு ஆறுதல் சொன்னார்”

அமுதா, “ம்ம்ம் … ஆரம்பிக்கலாமா?”

வனிதா, “எஸ்”

அமுதா, “இந்த கவுன்ஸிலிங்கில் இருக்கும் வெவ்வேறு கட்டங்களைப் பத்தி உனக்கு சொன்னேன் இல்லையா?”

வனிதா, “எஸ்”

அமுதா, “இப்போ நாம் அடுத்த கட்டத்துக்குப் போகப் போறோம். இந்த விவாகரத்துக்கு காரணமான விஷயங்களைப் பத்தி பேசப் போறோம்”

வனிதா, “அதான் அன்னைக்கே சொன்னேனே?”

அமுதா, “என்ன சொன்னே?”

வனிதா, “இந்த விவாகரத்துக்கான காரணத்தை”

அமுதா, “எது?”

முகத்தில் சற்று எரிச்சலைக் காட்டிய வனிதா, “That I stepped out on Viswa”

அமுதா, “அதுதான் காரணமா?”

வனிதா, “ஆமா”

அமுதா, “அதைப் பத்தி கொஞ்சம் விவரமா பேசப் போறோம். Whether you like it or not”

வனிதா, “ஏன்?”

அமுதா, “நான் அன்னைக்கு சொன்னதை மறுபடியும் சொல்லறேன். இந்த கவுன்ஸிலிங்க் முடிஞ்சதுக்குப் பிறகு நீங்க ரெண்டு பேரும் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும். இதற்குப் பிறகு ரெண்டு பேரும் ஒருத்தரோடு ஒருத்த சகஜமா பேசும் அளவுக்காவுது நெருக்கம் வந்து இருக்கணும். ஒருத்தரை ஒருத்தர் மனசார மன்னிக்கும் மனப் பக்குவம் வந்து இருக்கணும். விஸ்வா உன்னை மன்னிப்பதற்கு முன்னாடி உன் தவறுகளையும் அதற்கான காரணங்களையும் நீ நல்லா உணர்ந்து உன்னை நீயே மன்னிக்கும் மனப் பக்குவம் உனக்கு வரணும்”

1 Comment

Comments are closed.