ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 4 32

அமுதா, “அப்பறம் எதுக்கு அவரை அப்படி மிரட்டினே? என்ன நிபந்தனை விதிச்சே?”

விஸ்வா, “அவரை பழி வாங்க அப்படி மிரட்டினேன். என்னால அப்படி செய்ய முடியும்ன்னு அவருக்கு நல்லா தெரியும். நான் படும் கஷ்டத்தை அவரும் அனுபவிக்கணும்ன்னு, வனிதாவை எப்படி பணிய வெச்சாரோ அதே மாதிரி அவரையும் பணிய வைக்கத் திட்டம் போட்டு மிரட்டினேன். நான் PMLஇல் தொடர்ந்து வேலையில் இருக்கணும்ன்னா இனிமேல் சுமதி மேடம் எனக்கு வைப்பாட்டியா இருக்கணும்ன்னு கண்டிஷன் போட்டேன். அழுது கெஞ்சினார். நான் விட்டுக் கொடுக்கலை. கேவலமா திட்டி அனுப்பிட்டேன். அடுத்த நாள் காலைல அவர் இறந்துட்டதா செய்தி வந்தது”

வயதில் விஸ்வாவை விட சில வருடங்கள் மூத்தவளானாலும் பின் இருபதுகளில் இருப்பதைப் போன்ற தோற்றத்துடன் இருந்த சுமதியை அமுதா நினைவு கூர்ந்தார். உடன், அவளது உடற் தோற்றத்தை விட அவள் தந்தையுடன் தொடங்கிய பள்ளிக்கூடமும் அதனை ஒட்டிய கல்லூரியும், அவைகள் பாமர மக்களுக்கு ஏறக்குறைய இலவசமாகக் கல்வி அளிப்பதைப் பற்றியும் நினைவு கூர்ந்தார். பாமர மக்கள் கோவில் கட்டிக் கும்பிடும் சுமதிக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பும் மரியாதையையும் அமுதாவின் நினைவுக்கு வந்தது …

முகத்தில் வெறுப்பை உமிழ்ந்த அமுதா, “அதுப்புப் பிறகுதான் விவாகரத்து செஞ்சுக்கணும்ன்னு ஞானோதயம் வந்ததாக்கும்?”

விஸ்வாவின் கண்ணீர் ஊற்றெடுத்து அவன் கன்னத்தை நனைத்தது ..

விஸ்வா, “இல்லை .. அவர் இறந்து ஒரு வாரத்துக்குப் பிறகு ஒரு நாள் சாயங்காலம் நான் தங்கி இருந்த ரூமுக்கு சுமதி மேடம் வந்தாங்க … ”

அன்று நடந்தவை …

மாலை ஏழு மணியளவில், விஸ்வா பெங்களூர் க்ளப்பில் அவன் தங்கி இருந்த அறையை நெருங்கும் போது … அந்த அறை வாசலில் சுமதி நின்று இருந்தாள் …

விஸ்வா, “மேடம் … ”

சுமதி, “உள்ளே போய் பேசலாம் வா விஸ்வா”

அறைக்குள் நுழைந்த பிறகு அங்கு இருந்த நாற்காலிகளில் எதிரெதிரே அமர்ந்தனர் ..

சுமதி, “விஸ்வா, PML எங்க அப்பா பார்த்துப் பார்த்து உருவாக்கினது. நம் முதல் ஃபாக்டரியில் ஒவ்வொரு மெஷிணும் அவர் நேரடி மேற்பார்வையில் நிர்மாணிக்கப் பட்டது. ஒரு அளவுக்கு மேல் வளர்ச்சி இல்லாமல் இருந்தாலும் நல்ல லாபத்தில் ஓடிட்டு இருந்ததால் அப்படியே இருக்கட்டும்ன்னு இருந்தோம். அதாவது நீ வேலைக்கு சேரும் வரை”

விஸ்வா, “தெரியும் மேடம்”

சுமதி, “ஒரு காலத்தில் எங்க அப்பாவுக்கு நிறைய சொத்து இருந்தது. ஆனா அவரோட கவனக் குறைவை பயன் படுத்தி அதில் பாதிக்கும் மேல் மத்தவங்க சுரண்டி சாப்பிட்டுட்டாங்க. இப்போ பாக்கி இருக்கும் இருநூறு கோடிக்கும் மேல் பொரும் ரியல் எஸ்டேட்ஸ் கோர்ட் கேஸில் இழுத்துட்டு இருக்கு. ஸ்கூலில் இருந்தும் காலேஜில் இருந்தும் ஒரு நயாபைசா நாங்க எடுத்துக்கறது இல்லை. இன்னைக்கு எங்க குடும்பத்துக்கு ஒரே வருமானம் PML மூலமாத்தான். எங்க குடும்பம் மட்டும் இல்லை இதில் வேலை செய்யும் நூத்துக் கணக்கான தொழிலாளிகளின் குடும்பங்களும் PMLஐ நம்பி இருக்கு”

விஸ்வா, “I know that too”

1 Comment

Comments are closed.