ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 4 30

ராம், “அவர் சொல்வதை நம்புவே ஆனா கட்டின பெண்டாட்டி கிட்டே கேட்க மாட்டே அப்படித்தானே?”

விஸ்வா, “அது தான் உண்மை. அதை மறுபடி அவ வாயால கேட்டு கஷ்டப் பட விரும்பலை”

ராம், “சரி, அவ செஞ்ச தவறுகளை ரெண்டு கட்டமா பிரிச்சு யோசிக்கலாமா? முதலில் உன் வேலைக்காக அவருக்கு ஒப்புதல் கொடுத்ததை எடுத்துக்கலாம். அவர் போட்ட கண்டிஷனுக்கு அவ ஒத்துட்டது தப்புத்தான். ஒத்துக்கறேன். ஆனா, ஒரு நிமிஷம், அந்த சமயத்தில் உங்க ரெண்டு பேருக்கும் நடுவே நடந்த பேச்சு, அந்த வேலை கிடைக்காது-ன்னு நினைச்சு நீ நடந்துட்ட விதம் இதை எல்லாம் கொஞ்சம் யோசிச்சுப் பாரு”

விஸ்வா, “எஸ், I was anxious and disappointed .. but ..”

ராம், “அந்த ஆள் உன்னை எடுக்கத் தயக்கப் பட்டார். அதனால தான் அவளே முயற்சி எடுத்து சண்முகம் சார் உன்னை மீட் பண்ண ஏற்பாடு செஞ்சா. உன் துரதிஷ்டம் அவர் நான்-கமிட்டலா ஒப்புதல் கொடுத்து இருக்கார். அதையும் உன் ஆர்வத்தையும் சந்திரசேகர் பயன் படுத்திட்டு அவகிட்டே கண்டிஷன் போட்டு இருக்கார். இருந்தாலும் அவளைப் புரிஞ்சுக்காம அந்த சமயத்தில் உன் ஏமாற்றத்தையும் உனக்கு இருந்த ஆதங்கத்தையும் காட்ட அவளை ஒரு வடிகாலா பயன் படுத்தினே. நானே சில நாள் உங்க வீட்டில் இருக்கும் போது உன்னை திட்டி இருக்கேன். ஒவ்வொரு நாளும் அவளுக்கு நரகமா இருந்தது … உன்னை எப்படி சமாதானப் படுத்தறது-ன்னு தெரியாம எத்தனை தரம் என் கிட்டே சொல்லி அழுது இருக்கா தெரியுமா? She was on pins and needles … அது எனக்கு நல்லா தெரியும். எத்தனை தடவை நாம் மூணு பேரும் அதைப் பத்தி பேசினோம். ஒரு தரமாவுது இந்த வேலை கிடைக்கலைன்னா பரவால்லை வேற முயற்சி செய்யறே-ன்னு சொல்லி இருப்பியா? நாங்க ரெண்டு பேரும் சொன்னதுக்கு எங்க மேல எறிஞ்சு விழுந்தே. நான் போனதுக்குப் பிறகு வனிதாகூட இப்ப மாதிரி பேசாம இருந்து அவளை சித்தரவதை பண்ணி இருக்கே. இதெல்லாம் மறந்துடுச்சா?”

விஸ்வா, “சோ, அவ செஞ்சது சரிங்கறியா?”

ராம், “அவ செஞ்சது தப்புதான். ஆனா அவ மனசில் அப்போ இருந்த சூழ்நிலையில் அதை சரி-ன்னு நினைச்சு செஞ்சு இருக்கா”

விஸ்வா, “தப்பு தப்புதான் … “

1 Comment

Comments are closed.