ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 4 30

அமுதா, “சோ, ப்ரொமோஷம் கொடுத்தாங்களா?”

விஸ்வா, “முதலில் மார்கெட்டிங்க் மேனேஜர் அப்படின்னு ஒரு புது போஸ்டை உருவாக்கி அதை எனக்குக் கொடுத்தாங்க. PMLஇன் உற்பத்தி தரம் எப்பவும் ரொம்ப நல்லா இருக்கும். அதுக்கு முக்கியக் காரணம் சண்முகம் சார். நான் புதுசா விற்பனைக்குக் கொண்டு வந்த பொருட்களுக்கு மார்கெட்ல நல்ல வரவேற்பு. அதற்குன்னு தனி தொழிற்சாலை உருவாக்க வேண்டிய அளவுக்கு அவைகளின் விற்பனை அதிகரிச்சது. PMLஇன் வரவு நான் சேர்ந்தப்ப இருந்ததை விட ரெண்டு மடங்கு ஆச்சு”

அமுதா, “எக்ஸெலண்ட். ஏதோ மேனேஜ்மெண்ட் ஸக்ஸஸ் ஸ்டோரி படிக்கற மாதிரி இருக்கு. ம்ம்ம். மேல சொல்லு”

விஸ்வா, “சந்திரசேகருக்கு கீழே G.M Production, G.M Finance and Admin ரெண்டு ஜெனரல் மேனேஜர்ஸ் இருந்தாங்க. அடுத்தபடியா ஜெனரல் மேனேஜர் மார்கடிங்க் (G.M Marketing) என்கிற புது போஸ்ட்டை உருவாக்கி மத்த ரெண்டு ஜெனரல் மேனேஜர்களுக்கு இணையா என்னை நியமிச்சாங்க”

அமுதா, “ம்ம்ம் .. உன் ரெண்டவது ப்ரொமோஷன். then?”

விஸ்வா, “அவ்வளவு நாளா போட்டிக் கம்பெனி எதுவும் இல்லாம இருந்தோம். புனாவில் ஒரு புது போட்டிக் கம்பெனி சைனா நாட்டுக் கம்பெனியோட கூட்டுறவில் உறுவாச்சு. எங்க உற்பத்திப் பொருட்களை விட இன்னும் கொஞ்சம் நவீனமான தொழிற்நுட்பத்தோட மார்கெட்டில் விக்க ஆரம்பிச்சாங்க. நாங்களும் எங்க உற்பத்திப் பொருட்களில் நவீன தொழிற்நுட்பத்தை அறிமுகப் படுத்தணும்ன்னு அதற்கான ஒரு திட்டத்தை கொடுத்தேன். என்னையே அதற்கும் பொறுப்பு எடுத்துக்கச் சொல்லி வெவ்வேறு நாடுகளில் இருக்கும் கம்பெனிகளுடன் தொடர்பு கொண்டு ஒரு ஜாயிண்ட்-வெஞ்சர் (Joint-venture கூட்டுறவு முயற்சி) செட் அப் பண்ணச் சொன்னாங்க. முதல் சில நிறுவனங்களோட தொடர்பு கொள்ள சந்திரசேகரும் கூட வந்தார் … He was out of depth and he couldn’t handle interactions at that level .. என்னையே எல்லாத்தையும் கவனிக்கச் சொல்வதா போர்ட் மெம்பர்ஸ்கிட்டே சொன்னார். சண்முகம் சார் தனியா என்னிடம் பேசும் போது அது எதிர்பார்த்ததுதான்னு சொன்னார். ஏற்கனவே செட்-அப் பண்ணின உற்பத்தியையும் விற்பனையும் சந்திரசேகர் பொறுப்பில் விடச் சொன்னார். நான் முழுக்க முழுக்க ஜாயிண்ட்-வெஞ்சர் முயற்சியில் ஈடு பட்டேன். ஒரு ஜப்பானியக் கம்பெனியுடன் ஆறு மாசத்துக்கு முன்னாடி சைன் பண்ணினோம். அந்த முயற்சிக்குன்னு ஒரு தனி தொழிற்சாலை உருவாகி இருக்கு. தேவையான மெஷின்ஸ் எல்லாம் வந்தாச்சு. இன்னும் கொஞ்ச நாளில் முதல் கட்ட உற்பத்தி தொடங்கப் போகுது. ஏற்கனவே அதற்கான விற்பனைத் திட்டத்தையும் நான் போட்டு வெச்சு இருக்கேன். இப்போ எனக்கு ப்ரொமோஷன் கொடுக்க Vice President – Business Development அப்படிங்கற புது போஸ்டை உருவாக்கி இருக்காங்க. ஆனா அதுக்கு முன்னாடி தான் வனிதாவுடன் சந்திரசேகருக்கு இருந்த தொடர்பு எனக்குத் தெரியவந்தது … ”

விஸ்வா தன் வேலையைப் பற்றிப் பேசும் போது அதில் அவன் முழுவதும் மூழ்கி இருப்பதையும் அதில் காட்டிய உற்சாகத்தையும் அமுதா நன்கு உணர்ந்தார்…

அமுதா, “வாழ்க்கையில் உன் குறிக்கோள்கள் என்ன விஸ்வா? I mean what are your life time goals?”

விஸ்வா, “They kept changing … ஒரு காலத்தில் அர்மியில் ஜெனரல் ஆகணும்ன்னு இருந்தேன். அந்த விபத்துக்குப் பிறகு அது முடியாதுன்னு ஆயிடுச்சு. இப்போ அதே அளவுக்கு ஒரு பொஸிஷனுக்கு வரணும்ன்னு இருக்கேன்”

அமுதா, “அதே அளவுக்குன்னா?”

விஸ்வா, “ஒரு ஜெனரலுக்குக் கீழே பல ஆயிரம் பேர் இருப்பாங்க. தவிற ராணுவத்தில் வரவுன்னு எதுவும் இல்லைன்னாலும் பல நூறு கோடிகள் ஒரு ஜெனரலின் மேற்பார்வையில் செலவு செய்யப் படும். அதே மாதிரி வியாபார உலகத்தில் ஒப்பிட்டுப் பார்த்தா ஒரு பெரிய கம்பெனியின் C.E.O. அந்த அளவுக்கு ஆகணும். அதுக்கு அப்பறம் மேல மேல வளந்துட்டே இருக்கணும்”

1 Comment

Comments are closed.