ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 4 30

விஸ்வா, “ஹூம் ..என் கிட்டே சொல்லி இருந்தா அந்த மிரட்டலும் பொய்ன்னு அவளுக்கு ப்ரூவ் பண்ணிக் காண்பிச்சு இருப்பேன்”

அமுதா, “வனிதா உன்கிட்டே எதுவும் சொல்லலைன்னு சொன்னாளே? அவர் மிரட்டினதைப் பத்தி உனக்கு எப்படித் தெரியும்?”

விஸ்வா, “சந்திரசேகர் சொன்னார்”

அதிர்ச்சியுற்ற அமுதா, “உன்கிட்டே சொன்னாரா? எப்போ? எதுக்கு?”

விஸ்வா, “அன்னைக்கு வனிதாவை அவர்கூட பார்த்ததுக்குப் பிறகு நான் வீட்டுக்குப் போகலை. ஆஃபீஸுக்கும் போகலை. க்ளப்பில் ரூம் போட்டுத் தங்கிட்டு இருந்தேன். மூணு நாள் கழிச்சும் நான் ஆஃபீஸுக்கு வரலைன்னதும் பயந்துட்டு என்னைத் தேடி வந்தார்”

அமுதா, “என்ன பயம்?”

விஸ்வா, “அவர் வனிதாகிட்டே சொல்லி இருந்தது சுத்தப் பொய். சண்முகம் சாரும் சுமதி மேடமும் சந்திரசேகரை ரொம்ப ஒழுக்கமானவர்ன்னு நினைச்சுட்டு இருந்தாங்க. ஆனா அவரோட பயம் அவங்களுக்கு தன்னுடைய ஒழுக்கக் கேடு தெரிஞ்சுடும் அப்படிங்கறது மட்டும் இல்லை”

அமுதா, “வேற என்ன பயம்?”

விஸ்வா பெருமூச்சு விட்டபின் தொடர்ந்தான் ..

விஸ்வா, “நான் வேலையை விட்டு விலகினா PML பெரிய நஷ்டத்துக்கு உள்ளாக வாய்ப்பு இருக்கு. அதற்கும் மேலா நான் PMLஇன் போட்டிக் கம்பெனியில் சேர்ந்தா என்னால PMLஐ இழுத்து மூடும் அளவுக்கு கொண்டு வர முடியும். அந்த பயம் தான்”

அமுதா, “அப்படின்னா அவர் சாவு?”

விஸ்வா, “தற்கொலை”

அமுதா, “அதுக்கு வனிதாவோட இருந்த தொடர்புதான் காரணமா?”

விஸ்வா, “அது மட்டும் இல்லை. Also my threat and demand (என் மிரட்டலும் நிபந்தனையும்)” சொல்லி முடித்த போது அவன் கண் கலங்கித் தலை குனிந்தான் …

அமுதா, “உனக்குச் சொல்ல விருப்பம் இல்லைன்னா வேண்டாம். சொன்னா மனசில் இருக்கும் பாரம் குறையும்ன்னு தோணுச்சுன்னா சொல்லு”

விஸ்வா, “என்னைத் தனியா சந்திக்கணும்ன்னு கேட்டு மெஸ்ஸேஜ் பண்ணினார். அன்னைக்கு சாயங்காலம் மீட் பண்ணினோம். என் வேலைக்காக வனிதாவை பணிய வெச்சதில் இருந்து நடந்ததை எல்லாம் சொன்னார். திரும்ப வேலையில் வந்து சேருன்னு கேஞ்சினார். போட்டிக் கம்பெனியில் சேரப் போறதோடு நிறுத்தப் போறது இல்லை, PMLஇல் எனக்குப் பழக்கமானவங்களையும் என்னோட கூட்டிட்டுப் போய் PML ஆறே மாசத்தில் இழுத்து மூடும் நிலைக்குக் கொண்டு வரப் போறேன்னு மிரட்டினேன்”

அமுதா, “இப்போவும் அதைச் செய்யத் திட்டம் போட்டு இருக்கியா?”

விஸ்வா, “ம்ம்ஹூம் … முதலில் அப்படித்தான் திட்டம் போட்டு இருந்தேன். அப்பறம் நானே என் குழந்தை மாதிரி பாவிச்சு விரிவாக்கின கம்பெனியை இழுத்து மூடும் அளவுக்கு செய்ய என் மனம் இடம் கொடுக்கலை”

1 Comment

Comments are closed.