ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 4 30

அமுதா, “விஸ்வா, அதிகம் பணம் சம்பாதிக்கணுங்கறதுதான் உன் முக்கியக் குறிக்கோளா?”

விஸ்வா, “It has nothing to do with money. வேணுங்கற அளவுக்கு அப்பா, அம்மா, அத்தை மாமா எல்லாம் எங்களுக்கு சேர்ந்து வெச்சு இருக்காங்க. பணத்தை விட அந்த மாதிரி ஒரு பொஸிஷனில் இருக்கும் போது வரும் மதிப்பு, மரியாதை … புகழ்ன்னு கூட சொல்லலாம்”

அமுதா, “வேற என்ன குறிக்கோள் வெச்சு இருந்தே?”

விஸ்வா, “குழந்தைங்களை நல்லா வளர்க்கணும். அவங்க இஷ்டப் பட்ட துறையில் படிச்சு முன்னுக்கு வர அவங்களை தயார் செய்யணும்”

அமுதா, “வாழ்க்கையை எப்படி வாழணும்ன்னு குறிக்கோள் எதுவும் இல்லையா?”

விஸ்வா, “Of course. வாழ்நாள் முழுக்க சந்தோஷமா உற்சாகத்தோட வாழணும்”

அமுதா, “உன் சந்தோஷம் மட்டும்தான் உன் குறிக்கோளா?”

விஸ்வா, “நோ, நோ … குடும்பத்தில் எல்லோரின் சந்தோஷம்”

அமுதா, “குடும்பத்தில்ன்னு ஏன் பொதுவா சொல்லறே. வனிதா உன் மனைவி. அவளுக்குன்னு தனி இடம் இல்லையா?”

விஸ்வா, “அவளுக்கு தனி இடம் எதுக்கு? she has been my better half … என்னோட வாழ்க்கைத் துணை அவ. எங்க ரெண்டு பேர் சந்தோஷமும் வேற வேறன்னு நான் எப்பவும் நினைச்சது இல்லை. அவதான் அப்படி நினைச்சு இருக்கா”

அமுதா, “உண்மையா சொல்லு? What if she does not share all your goals in the same priority?”

விஸ்வா, “என்ன சொல்லறீங்க?”

அமுதா, “இல்லை. குறிக்கோள்ன்னு கேட்டதும் முதலில் உன் வேலையைப் பத்தி சொன்னே. அடுத்ததா உன் சந்தோஷத்தையும் குடும்பத்தின் சந்தோஷத்தையும் பத்தி சொன்னே. வனிதாவின் சந்தோஷம்ன்னு தனியா உனக்கு எந்தக் குறிக்கோளும் இல்லையா?”

விஸ்வா வாயடைத்துப் போய் அமர்ந்து இருந்தான். அவன் எதையோ நினைத்துப் பார்த்து குற்ற உணர்வால் தலை குனிவதை அமுதா நன்கு உணர்ந்தார்.

அமுதா, “சரி, கடந்த நாலு வருஷமா வனிதாவுடன் தினம் எத்தனை மணி நேரம் செலவு செய்வே?”

விஸ்வா, “அப்படி கணக்குப் பார்த்து செலவு செஞ்சது இல்லை. குழந்தைங்க சாப்பிடுவதற்கு முன்னால் வீட்டுக்கு வந்துடுவேன். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் குழந்தைங்களை தூங்க வைப்போம்.”

அமுதா, “அதற்குப் பிறகு?”

விஸ்வா சற்று எரிச்சலுடன், “தூங்கறவரைக்கும் வனிதாகூடதான் இருப்பேன். For God sake! We used to sleep together”

1 Comment

Comments are closed.