ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 4 30

இருவரின் அழுகையும் அடங்கிய பிறகு …

சுமதி, “எத்தனை நாளைக்கு இப்படி வெளியே தங்கிட்டு தினமும் குடிச்சு உன் உடம்பை கெடுத்துக்கப் போறே? அங்கே வனிதாவும் குழந்தைங்களும் உனக்காக தவிச்சு ஏங்கிட்டு இருக்காங்க.”

விஸ்வா இல்லை என்று தலையை அசைத்தான் …

சுமதி, “நீ படும் வேதனை எனக்குப் புரியுது. ஆனா, வனிதாவைப் பார்த்தா அதைவிட ரொம்ப பாவமா இருக்கு விஸ்வா. என் வீட்டுக் காரர் செஞ்ச தப்புக்கு உடந்தையா இருந்தது அவ தப்புதான் ஒத்துக்கறேன். ஆனா இப்போ அவ நடைப் பிணமா இருக்கா. உன் குழந்தைங்களையும் நினைச்சுப் பாரு”

விஸ்வா, “எந்த விதத்தில் அவங்க விஷயம் எனக்கு தெரிய வந்ததுன்னு உங்களுக்குத் தெரியாது. அன்னைக்கு நான் பார்த்ததையும் கேட்டதையும் என்னால் வாழ்நாளுக்கும் மறக்க முடியாது”

சுமதி, “சரி, அதுக்காக இப்படி எதைப் பத்தியும் எந்த முடிவும் எடுக்காம இருப்பது சரியா? ஓண்ணா சேர்ந்து வாழ விருப்பம் இல்லைன்னா அதுக்கான ஏற்பாடுகளை செய். அப்படி முடிவு எடுக்க முடியலைன்னா இங்கே இருப்பதற்கு பதிலா மறுபடியும் வீட்டுக்குப் போய் குழந்தைகளோடு நேரம் செலவு செய். என்ன முடிவு எடுப்பதுன்னு உனக்கே தோணும்”

அமுதா அடுத்த நாள் வனிதாவை வரச் சொல்லி இருந்தார் …

அமுதா, “வா வனிதா. இன்னைக்கு வரச் சொன்னதுக்கு சாரி. சனிக்கிழமை லீவு நாளில் நீ வீட்டில் குழந்தைகள் கூட இருக்கலாம்-ன்னு நினைச்சு இருப்பே”

வனிதா, “பரவால்லை. ரெண்டு வாரமா அம்மா வீட்டுக்கு அதுங்க ரெண்டும் போகலை. பாட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னதும் ராம் அங்கிள் ஊரில் இருந்து வந்து இருப்பாரான்னு கேட்டாங்க. ஆமான்னதும் ரொம்ப குஷியா புறப்பட்டாங்க” என்றவள் சிறு புன்னகையுடன், “I mean to get the chocolates he had brought சாயங்காலம் வரைக்கும் அங்கே தான் இருப்பாங்க”

அமுதா, “அம்மா எதாவுது உன் கிட்டே டைவர்ஸ்ஸைப் பத்தி கேட்டாங்களா?”

வனிதா, “இல்லை. அதைப் பத்தி எதுவுமே பேசலை. இங்கே வரப் போறே-ன்னு சொன்னேன். சரி போயிட்டு வா-ன்னு மட்டும் சொன்னாங்க. She sounded very supportive”

அமுதா, “உன் அத்தை மாமாவைப் பார்த்தியா?”

வனிதா, “மாமா ஹாஸ்பிடலுக்குப் போயிருந்தார். அத்தையும் ராமும் இருந்தாங்க. கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்”

அமுதா, “என்ன பேசிட்டு இருந்தீங்க?”

வனிதா, “சந்திரசேகர் போனதுக்குப் பிறகு PMLஇல் என்ன மாற்றங்கள் நடந்து இருக்கு-ன்னு அத்தை விசாரிச்சாங்க”

அமுதா, “எதாவுது மாற்றம் இருக்கா?”

1 Comment

Comments are closed.