ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 4 30

வனிதா, “ஏன்னா?”

அமுதா, “ஏன் ஒருத்தருக்கு வாழ்க்கை பட்ட பிறகு யாரோடையும் உறவு வெச்சுக்கக் கூடாது?”

வனிதா, “ஒருத்தருக்கு ஒருத்தர்-ன்னு முடிவு செய்யறதுதானே கல்யாணம். அதற்குப் பிறகு கணவனைத் தவிற வேற ஒருத்தன் கூட உறவு வெச்சுட்டா அது கல்யாணத்தை மறந்துடற மாதிரி”

அமுதா, “நான் கற்பைப் பத்தி கேட்டேன் நீ கல்யாணத்தைப் பத்தி சொல்லறே”

வனிதா, “ம்ம்ம் … தெரியலை. நீங்க கன்ஃப்யூஸ் பண்ணறீங்க”

அமுதா, “உங்க கல்யாணம் எங்கே நடந்தது?”

வனிதா, “இங்கே தான் பெங்களூரில் ஆர்ய சமாஜத்தில்”

அமுதா, “ஓ! உங்க கல்யாணத்தை நடத்தி வெச்சவர் சொன்ன சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு விளக்கம் கொடுத்தாரா?”

வனிதா, “Yes. Viswa insisted. எனக்கும் புரியணும்-ன்னு விஸ்வா ஆங்கிலத்தில் விளக்கக் கூடியவர் தான் கல்யாணத்தை நடத்தி வெக்கணும்-ன்னு சொன்னார்”

அமுதா, “அவர் கொடுத்த விளக்கங்களில் இருந்து உனக்கு என்ன புரிஞ்சுது?”

வனிதா, “ரெண்டு பேரும் கடவுள் முன்னாடி உறுதி மொழி எடுத்துகிட்டோம்-ன்னு புரிஞ்சுது”

அமுதா, “Now you got the point. கல்யாணம்ன்னா என்ன? கல்யாணம் ஒரு ப்ராமிஸ். வாக்கு கொடுப்பது. கற்புன்னா என்ன? கொடுத்த வாக்கைக் காப்பாத்தறது”

வனிதா மௌனம் காத்தாள் …

அமுதா, “சரி, வனிதா அடுத்ததா சந்திரசேகருடன் உனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பத்தி பேசப் போறோம். கூச்சப் படாம என் கிட்டே நீ சொல்லணும். ஒண்ணு நிச்சயம். நீ சொல்வதை வெச்சு நான் உன்னை எந்த விதத்திலும் எடை போட மாட்டேன். நீ செஞ்ச தவறுகளுக்கான காரணங்களை நீயே உணர்ந்து நடந்ததை எல்லாம் விஸ்வாகிட்ட மனம் திறந்து சொல்லணும் அதுதான் என் குறிக்கோள். ஓ.கே?”

வனிதா, “நடந்தது எல்லாம்ன்னா?”

அமுதா, “உனக்கும் சந்திரசேகருக்கும் இடையே நடந்த எல்லாத்தையும்”

வனிதா, “யூ மீன் செக்ஸ் சம்மந்தப் பட்டதை எல்லாத்தையுமா?”

அமுதா, “ஆமா”

வனிதா, “How can I? என்னதான் வேற ஒருத்தன் கூட இருந்து இருந்தாலும் அதை எப்படி என் கணவர் கிட்டே சொல்ல முடியும்? It will hurt him”

1 Comment

Comments are closed.