உனக்கு என்ன வேணும் மதி? 72

அந்தி சாயும் மாலைப் பொழுது கதிரவன் விடை பெரும் நேரம் மதியும் விஜயும் அட்வான்ஸ் ந்யூ இயர் வாழ்த்துக்கள் பகிர்ந்து கொண்டார்கள்.

நாளைக்கு எனக்கு என்ன கிப்ட் தருவ விஜி?

உனக்கு என்ன வேணும் மதி?

நீ என்ன குடுத்தாலும் ஓகே

நீ மறக்க முடியாத கிப்ட் தரேன்

ஹே என்ன கிப்ட் இப்ப சொல்லு ப்லீஸ்

சொன்னா சஸ்பென்ஸ் போயிரும்

அஞ்சு வருஷமா பழகுறோம் இப்பவும் உன் புத்தி மாரல

காலேஜ் வந்ததும் உன் முன்னாடி என் கிப்ட் இருக்கும் பை செல்லம்

விஜய் குடுக்கும் கிப்ட் என்னவாக இருக்கும் மதிக்கு விளங்கவில்லை

மதிய காதலிப்பதாக சொல்லுவான்ணு மூணு வருஷமா காத்துக்கிட்டு இருக்கா

இன்னைக்கு விஜி கண்ணுல தெரிஞ்ச பளபளப்பு நாளைக்கு அவன் தன் காதலை சொல்லிறுவாண்ணு நம்பிக்கை வந்துச்சு

மதுமிதாவும் விஜய ராகவனும் ஒரே காலேஜில் வேறு வேறு பிரிவில் படிப்பவர்கள்.

எல்லோரும் மது என்று அழைத்த பெயர் விஜைய் மதியாக அழைத்த காரணம் அவன் பால் அவளுக்கு காதல் வந்து விட்டது.

ஐந்து வருடம் பழகினாலும் விஜைய் கேரக்டர் மதிக்கு தெரியாது என்பதே உண்மை. ஸ்கூலில் பழகிய பழக்கம் காலேஜிலும் தொடர்ந்தது

இருவரும் நல்ல நண்பர்கள். மதியின் தந்தை இறந்து இரண்டு வருடங்கள் முடிந்து விட்டது.

விஜயின் தந்தை நிறுவனத்தில் அவர் பணியில் இருந்ததால் அவர் மனைவிக்கு வேலை போட்டு கொடுத்தார். மதியின் கல்விக்கும் கை கொடுத்தார்.

இப்போது பி.ஈ ஈஸி பிரிவில் கடைசி செமஸ்டர், தன் முதலாளி மகன் விஜைய் என்பதை மறந்து, அவன் பால் அன்பு கொண்டிருந்தாள்.

நாளை விடியும் இரவு எனக்காக மட்டுமே என்ற மிதப்பில் கண்களில் கனவோடு உறங்கினாள். காலை விடிந்தது. மதுவிடம் இருப்பத்ிலேயே நல்ல துணியை எடுத்து அணிந்து கொண்டாள்.

ஒப்பணையொடு கிளம்பும் மகளை கடைக்கண்ணால் கவனித்த லலிதா அம்மாள் தன் மகள் வாழ்வு செழிக்க வேண்டும் என இறைவனை வேண்டிக்கொண்டாள்.

அவசரமாக பஸ் பிடித்து இதோ காலெஜும் வந்து விட்டது. இன்று விடுமுறை என்றாலும் ந்யூ இயர் கொண்டாட்டம் நடந்துகொண்டு இருந்தது.

விஜைய் வந்தான் மயக்கும் புன்னகை சிந்தினான். வெரி பியியூடிஃபுல் என்றவனின் முகத்தை பார்க்க கூசி நின்றாள்.

சட்டென்று சுதாரித்து என் கிப்ட் குடு என்று கண்ணை மூடி கையை நீட்டினாள்.
அவள் கை மேல் மெல்லிய பஞ்சு போன்ற கைகள் இணையவும் குழப்பத்தோடு கண் திறந்தாள்.
அங்கே காவ்யா தன் தெத்து பல் சிரிப்போடு நின்று இருந்தாள்.

நான் புரியாமல் விஜய் முகத்தை பார்த்தேன். மீட் மை லவ் காவ்யா என்றான்.

12 Comments

  1. Super stroy . இது போன்று கதை எழுத ங்கள் ஆசிரியரே. இந்த கதை அருமை…

  2. Ex a lent, supper

  3. Cont..mannichudunaga ram story

  4. அருமையான கதை ! காம கதை என நினைத்து படிக்கையில் ! அழகான காதல் கதையை உணர தேர்ந்தது! சிறு வயது காதலை நினைவு கூற வைத்தது !

  5. story touch my heart

  6. Woooow excellent story…vaasiththu kondirukkumbothu neraya edangalil kan kalangi vidden…❤❤❤

Comments are closed.