உனக்கு என்ன வேணும் மதி? 73

சொல்லுங்க அம்மா ஏதாவது விசேஷமா.

பெரிய விசேஷம் என் ஒரே பையனோட கல்யாணம்தான்..ஹ ஹ ஹா.

அந்த அம்மாவின் தெத்துபல் சிரிப்பு எனக்கு காவியாவை ஞாபக படுத்தியது.

நீங்க சிரிக்கும் பொது ரொம்ப அழகா இருக்கீங்க அம்மா.

எல்லோரையும் அம்மான்னு கூப்பிடலாமா? நான் உனக்கு அத்தையாக்கும்!!

சாரி ஆன்ட்டி. ஹ்ம்ம் ஆன்ட்டி நு சொல்லாம நீ அத்தைன்னு சொல்லி இருக்க வேண்டியது எல்லாம் மாறி போச்சு..

என்ன ஆன்ட்டி ரொம்ப சலிப்பா பேசுறீங்க.

மனசுல வெச்சுக்க முடியலம்மா நான் உன் அம்மா கிட்ட உன்னைத்தான் பெண் கேட்டேன்.
அவங்கதான் உனக்கு திருமணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டாங்க.

ஆமா ஆன்ட்டி நான்தான் வேண்டாம்னு சொன்னேன்.

அப்புறம் ஏண்டா பிள்ளையார் கிட்ட வேண்டிகிட்டு இருக்க.. உன் முகம் கலக்கமா இருந்துச்சு அதான் பேசிட்டு போலாம்னு நினச்சேன்.

அம்மா எனக்கு என் குடும்பம் நிமிரனும், என் தம்பி சம்பாதிச்சு எனக்கு கல்யாணம் கட்டி வெப்பான் போதுமா என்றேன் முகம் மலர்ந்த சிரிப்புடன்.

நல்லா இரு கண்ணு என்று என்னிடம் பேசி விட்டு நகர்ந்தார்.

நானும் வீடு நோக்கி நடந்தேன். மனதில் சஞ்சலம் குறைந்தது.

வீட்டுக்குள் நுழைந்ததும் அம்மா காப்பியோடு வந்தாள்

என்னாச்சு மதிக்குட்டி அமெரிக்கா ட்ரிப்க்கு ஓகே சொல்லிட்டைல்ல

அம்மாவை தீர்க்கமாக பார்த்தேன்

ப்ளீஸ் டா அப்படி பாக்காத

அம்மா ப்ளிஸ் இனி அந்த ட்ரிப் பத்தி நீ எதுவும் தெரிஞ்சுக்க வேண்டாம்.
நான் நாளைக்கு கிராமத்துக்கு போயி பாட்டியை பார்த்துட்டு அமெரிக்கா கிளம்பலாம்னு இருக்கேன் என்றேன் உணர்ச்சியற்ற குரலில்.

12 Comments

  1. Super stroy . இது போன்று கதை எழுத ங்கள் ஆசிரியரே. இந்த கதை அருமை…

  2. Ex a lent, supper

  3. Cont..mannichudunaga ram story

  4. அருமையான கதை ! காம கதை என நினைத்து படிக்கையில் ! அழகான காதல் கதையை உணர தேர்ந்தது! சிறு வயது காதலை நினைவு கூற வைத்தது !

  5. story touch my heart

  6. Woooow excellent story…vaasiththu kondirukkumbothu neraya edangalil kan kalangi vidden…❤❤❤

Comments are closed.