உனக்கு என்ன வேணும் மதி? 73

நான்கு நாட்கள் பம்பரமாக சுழன்று வேலை செய்தோம்.

நாங்கள் அமெரிக்க கிளம்பும் நாள் வந்தது.

நானும் உதயனும் ஏர்போர்ட் செல்லும் வழியில் ஒரு பெரிய மாலுக்கு சென்றோம். இரண்டு ஸ்வெட்டர் , ஜெர்கின், ஸ்னக் ,
ஸ்கார்ப் வாங்கி கொண்டு ஏர்போர்ட் சென்று செக்கிங் முடிந்து விமானத்தில் ஏறினோம்.

எனக்கு எல்லாமே புதியதாக இருந்தது. நான் முதன் முதலாக ஃ ப்ளைட்டில் ஏறுகிறேன்.
ஏறி அமர்ந்ததும் என் உடலில் மெல்லிய குளிர் ஏறியது, மெல்ல நடுங்கியது.

உதய் என் நிலை அறிந்து என்னை பயப்பட வேண்டாம் என்று என் கைகளை கெட்டியாக பிடித்துகொண்டார்.
அவரின் உள்ளங்கையில் வியர்த்து இருந்தது ஆனாலும் ஒரு மிதமான சூடு என் உடலுக்குள் ஊடுருவி பாய்வதை என்னால் உணர முடிந்தது.
மூளை கையை இழுத்து கொள்ள சொன்னது, அனால் மனமோ வேண்டாம் என்று தடுத்தது. உதய் உடம்பின் சூட்டினால் அல்ல
என் உள்ளே இருந்த பயத்தினால் அவர் கையை அழுத்தி பிடித்துக்கொண்டேன்.

இவ்ளோ பயம் எதுக்கு?

இல்ல நான் ஃ பஸ்ட் டைம் ஃ ப்ளைட்ல ட்ராவல் செய்யுறேன்.

ஹ்ம்ம் கொஞ்சம் சிரித்தவர் மக்கு மக்கு இத்தனை பேர் இருக்கோம் அப்புறம் என்ன பயம்?

ஹி…ஹஇ .. என்று இளித்தேன்.

அப்புறம் நல்லா தூங்கிக்கொ.

எனக்கு தூக்கம் வரல ஸார்.

முந்திரி கோட்டை மாதிரி இடைல பேசுறதை நிறுத்து! அப்புறம் இந்த சார் மோர் எல்லாம் அமேரிக்கா வரைக்கும் கொண்டு வர வேண்டாம்.
உதய்ன்னு கூப்பிடு ஓகே.

ஓகே சார் (மனதுக்குள் “சும்மாவே கடிக்குற இதுல உதை உதை ன்னு கூப்பிட்டா சொல்லவே வேண்டாம் ” உதை ஒண்ணுதான் மீதம் இருக்கு.)

அமெரிக்கா ல இந்நேரம் நைட் பதினோரு மணி ஆயிருக்கும் நாம இப்போ தூங்கினாத்தான் நாளைக்கு அங்க டைம் மேனேஜ் பண்ண முடியும்.

ஓகே சார்.

மூஞ்சிய உம்முன்னு வெச்சுக்காத இனி ஒரு மாசத்துக்கு நீதான் என் ப்ரெண்ட் டைம் பாஸ் எல்லாம்.

ஓகே சார்.

12 Comments

  1. Super stroy . இது போன்று கதை எழுத ங்கள் ஆசிரியரே. இந்த கதை அருமை…

  2. Ex a lent, supper

  3. Cont..mannichudunaga ram story

  4. அருமையான கதை ! காம கதை என நினைத்து படிக்கையில் ! அழகான காதல் கதையை உணர தேர்ந்தது! சிறு வயது காதலை நினைவு கூற வைத்தது !

  5. story touch my heart

  6. Woooow excellent story…vaasiththu kondirukkumbothu neraya edangalil kan kalangi vidden…❤❤❤

Comments are closed.