உனக்கு என்ன வேணும் மதி? 72

உள்ளே சென்ற காஃபியின் உற்சாகத்தில் வேலையை முடித்து வீடு செல்ல பஸ் நிலையம் வந்தேன்.

அமெரிக்கா செல்ல அம்மாவிடம் எப்படி அனுமதி வாங்குவேன்

அம்மாவிடம் விஷயத்தை சொல்லும் போது அம்மாவுக்கு விருப்பம் இருக்காது என்று நினைத்துதான் சொன்னேன்
ஆனால் நேர் மாறாக அம்மா என் வாயில் சர்க்கரை கொண்டு வந்து போட்டார். கடவுள்தான் நமக்கு வழி காட்டி இருக்கார் மதிக்குட்டி.

பையன் வீட்டுல சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு சொல்லுராங்க. மாப்பிளைக்கு துபாய்ல வேலை கிடைச்சு இருக்காம் .
உன் தங்கை வந்த நேரம்னு அவங்க அம்மாக்கு அவ்ளோ சந்தோஷம். உன்கிட்ட எப்படி பணம் பெரட்ட சொல்லுறதுணு கைய பெசஞ்சுட்டு இருந்தேன்.
பெருமாள்க்கு என் வேண்டுதல் கேட்டுருச்சு.
அம்மா கண் கலங்க என் கையை பிடித்தபடி பேசியவர், என் முக மாறுதலை கண்டதும் பின் வாங்கினார்.

என்ன மதி ஏன் இப்படி பாக்குற? நீதான் கல்யாணம் பண்ண மாட்டேனு அடம் பிடிக்குற!
உன் தங்கை தம்பியாவது சந்தோஷமா இருக்கட்டுமே டா!

என் கண்களில் நீர் கோர்த்தது. மாற்றாந்தாய் என்பதை நிரூபித்து விட்டாள்.

ஒரு வயதாக இருந்த போது தாயை இழந்து தன்னை பார்த்துக்கொள்ள வந்த ஸித்தியைஅம்மாவாக ஏற்றாள்.
இப்போதல்லவா புரிகிறது. இனி புரிந்து என்ன பிரயோஜனம்!

இரவில் உணவருந்தாமல் உறங்கினேன். காலையில் என் தங்கையின் தலையனைக்குள் மாப்பிளையில் ஃபோட்டோ கண்ட போது மனம் வலித்தது.

ஆபீஸ் சென்றதும் எம் டி அறையை தட்டினேன்.

எஸ் கம் இன்

அவன் முகம் பாராது சொன்னேன், உங்களுடன் அமெரிக்கா வர எனக்கு சம்மதம்

தட்ஸ் குட், விசா எல்லாம் ரெண்டு நாளுல ரெடி ஆயிரும். அது வரைக்கும் கொஞ்சம் நீ கத்துக்க வேண்டியதிருக்கு!

12 Comments

  1. Super stroy . இது போன்று கதை எழுத ங்கள் ஆசிரியரே. இந்த கதை அருமை…

  2. Ex a lent, supper

  3. Cont..mannichudunaga ram story

  4. அருமையான கதை ! காம கதை என நினைத்து படிக்கையில் ! அழகான காதல் கதையை உணர தேர்ந்தது! சிறு வயது காதலை நினைவு கூற வைத்தது !

  5. story touch my heart

  6. Woooow excellent story…vaasiththu kondirukkumbothu neraya edangalil kan kalangi vidden…❤❤❤

Comments are closed.