உனக்கு என்ன வேணும் மதி? 73

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. அறியாத வயதில் விஜியை இழந்தேன். இப்போது விவரம் தெரிந்தும் உதியை இழக்கிறேன்.

நிமிடத்தில் உதய் உதி ஆகிப் போனான். அவர் அவன் ஆனது. ஆம் இனி யார் வந்தாலும் என் காதல் மாறாது!!!
அவன் யாரை கல்யாணம் செய்தாலும் என் கணவன் அவன் மட்டுமே.

குளித்து வெளி வந்து பாட்டியின் கைவண்ணத்தை ஒரு பிடி பித்தேன்.

காதல் வந்தாலும், காதலனை பிரிந்தாலும் சோறு உன்ன முடியாது, தூங்க முடியாது என்று சொல்வதெல்லாம் பொய்!!!
நான் நன்றாக சாப்பிட்டு நிம்மதியாக தூங்கினேன். ஏன் தெரியுமா?

என் தங்கை திருமணத்துக்கு தேவையான பணம் கிடைத்து விட்டது. இனி இந்த பாட்டியுடன் என் மீதி காலத்தை கழிக்க போகிறேன்.
அம்மாவை தம்பி மூன்று மாதங்களுக்கு பிறகு கூடவே அழைத்து சென்று விடுவான். பிறகென்ன எனக்கான ஒரே ஜீவன் பாட்டிதான்.

மீண்டும் ஆபிஸ் போயி அவனின் திருமணத்தை காணும் சக்தி எனக்கு இல்லை. எங்கோ அவன் இருக்கட்டும் நிம்மதியாக!!!

ஆனால் என் மனதுக்குள் எப்போதும் இருப்பான்.

அப்படி யோசிக்கும் போதுதான் என்னுள் இன்னுமொரு விபரீதமான எண்ணம் முளைத்தது!!!!

பேசாமல் உதியிடம் கலந்து பிள்ளை பெற்றுக்கொண்டால் என்ன?

அவன் சொத்து வேண்டாம்! மனைவி என்ற அங்கீகாரம் வேண்டாம்!அவனின் ஜீவன்…அவன் உயிரை மட்டும் பெற்றுக்கொண்டால் என்ன?

ஒரு நிமிடம் என் உடல் சிலிர்த்தது! மறு நிமிடம் உதியின் ஏளன பார்வை கண் முன் வந்தது…

ச்சீ …ச்சீ …என் புத்தி ஏன் இப்படி யோசிக்கிறது?

அவனின் பணத்துக்காக அவனை நெருங்குகிறேன் என்று தப்பாக நினைத்து விட்டால்? விட்டால் என்ன நிச்சயம் அப்படித்தான் நினைப்பான்.
அதோடு அவன் பேசிய பணத்தை விட அதிகமாக கொடுத்ததற்காக இளிக்கிறேன் என்று வாய் விட்டே சொல்லி விடுவான்.

நான் ஒரு அனாதை குழந்தையை எடுத்து வளர்த்தால் என்ன? ஐய்யயோ இன்னுமொரு அனாதை வேண்டாம்…நான் ஒருவள் படுவது பத்தாதா!!

மனசெல்லாம் குழப்பத்தோடும் பல கனவுகளும் மாறி மாறி சரியான தூக்கம் இல்லாமல் தவித்தேன். காலை பொழுது புலர்ன்தது.
வெளியே சித்தியின் குரலும் தங்கையின் குரலும் கேட்பது போல இருந்தது.

கனவா என்று ஒரு முறை கிள்ளிப்பார்த்தேன். கனவில்லை நிஜம்தான். என் மனம்தான் தெளிவில்லாமல் குழம்புகிறது.

வெளியே வந்து வாங்க அம்மா ..வாடா குட்டி!

இப்படித்தான் சொல்லாமல் கொள்ளாமல் பாட்டி வீட்டுக்கு வந்து விடுவாயா அக்கா ? நல்ல வேலை பாட்டி எங்களை பொங்கல்க்கு
அழைத்ததால் உன்னை முன்பே பார்க்க முடிந்தது? தங்கையின் கொஞ்சல் பேச்சை ரசித்தேன்.

ஹேய் செல்ல கல்யாணப் பெண்ணே உனக்காகத்தானே அக்கா இவ்வளவும் செய்கிறேன் என்று அவளை தோளோடு அணைத்துக்கொண்டேன்.

அப்போது பாட்டி வந்து மதிம்மா போயி பல்லு தேசு குளிச்சு இந்த புது பொடவையும் உன் அம்மா நகைகள் கொஞ்சம் எடுத்து வெச்சுருக்கேன்
அதையும் போட்டுக்கிட்டு வா கோவிலுக்கு போகலாம்.

எதுக்கு பாட்டி இதெல்லாம். நாந்தான் என் செயின் போட்டு இருக்கேனே.

12 Comments

  1. Super stroy . இது போன்று கதை எழுத ங்கள் ஆசிரியரே. இந்த கதை அருமை…

  2. Ex a lent, supper

  3. Cont..mannichudunaga ram story

  4. அருமையான கதை ! காம கதை என நினைத்து படிக்கையில் ! அழகான காதல் கதையை உணர தேர்ந்தது! சிறு வயது காதலை நினைவு கூற வைத்தது !

  5. story touch my heart

  6. Woooow excellent story…vaasiththu kondirukkumbothu neraya edangalil kan kalangi vidden…❤❤❤

Comments are closed.