உனக்கு என்ன வேணும் மதி? 72

அம்மாவிடம் பேசி இந்த ஊரை விட்டு போவது என்று முடிவு செய்தேன். இரவில் அம்மாவிடம் பேசிய போது அம்மா ஏதோ புரிந்தாவளாக சரிடா கண்ணா தங்கை, தம்பி படிப்பு கெடுமேனு யோசிக்கூறேன் என்றார். அம்மா நான் வெளியூர் போயி வேலை செய்ய்யட்டுமா ப்லீஸ். யாருமில்லாம வெளியில் தங்குறதது தப்புமா. நான் என் தோழி கிட்ட கேட்டு இருக்கேன் மா ப்லீஸ். சரி அதுக்கு இன்னும் டைம் இருக்கு நீ நல்லா ப்ரிபர் பண்ணு சரியா. ஓகே மா.

சென்னையில் வேலைக்கு சேர்ந்த பின் குடும்பம் தலையெடுக்க ஆரம்பித்தது. அம்மா என்னை மூத்த மகனாகவே நினைத்துவிட்டார் என்று பிறகுதான் புரிந்தது. விஜி காவ்யாதிருமணம் முடிந்திருக்கும் என்று நானாகவே முடிவு செய்து கொண்டேன்.நான் எதை பற்றியும் நினைக்கும் நிலமையில் இல்லை. நல்ல வேளை உதய சந்திரனை சந்திக்கும் வாய்ப்பு மட்டும் அமையவே இல்லை.

தம்பி வேளி நாட்டில் ஸ்காலர் ஷிப் பில் படித்து கொண்டு இருக்கிறான். கையோடு வேலையும் கிடைத்து விடும். அப்படி இப்படி என்று ஏழு வருடங்கள் கடந்து விட்டது.

என் தங்கை என்னை விட இரண்டு வயதும்,என் தம்பி மூன்று வருடமும் சிறியவர்கள். ஒவ்வொரு கடமையாக முடித்துக்கொண்டு இருந்தேன். மனதில் ஆராத ரணமாக உதய சந்திரனின் முகம் அடிக்கடி வந்து போனது.

நான் வேலை செய்வது ஒரு எலெக்ட்ராநிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில். என் துறையில் தவறுகள் ஏற்படுவது சகஜமான ஒன்று ஆனால் என் மேனேஜர் குமார் என் தவறு அறிந்து என்னை தன் வழிக்கு கொண்டு வர திட்டம் போட்டார். வேலை முடிந்து வீடு திரும்பும் நேரம், ஏனோ மனம் சஞ்சலம் அடைந்தது.என்னுடன் வேலை செய்யும் குமார் என்னை ப்ளேக் மெயில் செய்வது பிடிக்க வில்லை. கூட்ட நெரிசலில் இருந்து விடுபட்டு நெரிசலில் தப்பித்து வீடு வருவதற்க்குள் அப்பாடா என்று ஆயாசமாக இருந்தது.

ஹெய் மதி ஏன்டி இவ்ளோ நெரம், உனக்காக எல்லொரும் வெய்ட் பண்ணுராங்க வா சீக்கிரம்

அம்மாவின் பதற்றம் என்னையும் தொற்றிக் கொண்டது. மாப்பிள்ளை வீட்டுக் காரங்க வந்து இருந்தார்கள். என் தங்கை பட்டு புடவை சகிதம் கூடத்தில் அமர்ந்து இருந்தாள். ஆம் என் கடைசி கடமை…

என் தங்கைக்கு வயது இருபத்து நான்கு, ஆறு மாதம் கழித்து திருமணம் என்று நிச்சயம் செய்தோம்….வந்தவர்களின் ஒரே கேள்வி மூத்த பெண்ணுக்கு செய்யாம ஏன் சின்னவலுக்கு திருமணம் செய்யுறீங்க? நான் கேள்வி கேட்ட பெண்ணிடம் சொன்ன பதில் : இந்த வீட்டுக்கு மூத்த பிள்ளை நான், எனக்குனு சில கடமைகள் இருக்கு…அது முடிஞ்சாதான் நான் என்னை பத்தி யோசிக்க முடியும்.

அம்மா என்னை பெருமையாக பார்ப்பதை அறிந்து தலை குனிந்தேன்…உண்மை எனக்குத்தானே தெரியும்…காதல் வலி கொண்ட யாராலும் அடுத்த திருமணத்தை நினைக்க கூட முடியாது..எனக்கு பிடித்த என்னவனை தவிர நான் யாரையும் மணக்கப் போவதில்லை.

எல்லாம் சுபமாக முடிந்தது, இரவு உணவின் போது அம்மா என் திருமணம் பத்தி பேசினார்கள்,

ப்ளீஸ் மா…நிரய கடன் இருக்கு எல்லாம் அடஞ்சதும் யோசிக்கலாம்.

அடுத்த நாள் பதற்றம் மாறாமல் ஆஃபீஸ் சென்றேன். குமார் வந்திருக்கவில்லை! இனி அவன் வரப்போவதும் இல்லை!!!

எம்டி அழைப்பை ஏற்று உள்ளே சென்ற எனக்கு குப்பென்று வியர்த்தது…இவனா இவன் எப்படி இங்கே, இவன் இங்கே எம்டி சேரில் எப்படி?? தலை சுற்றி மயங்கி விழுந்தேன்….

12 Comments

  1. Super stroy . இது போன்று கதை எழுத ங்கள் ஆசிரியரே. இந்த கதை அருமை…

  2. Ex a lent, supper

  3. Cont..mannichudunaga ram story

  4. அருமையான கதை ! காம கதை என நினைத்து படிக்கையில் ! அழகான காதல் கதையை உணர தேர்ந்தது! சிறு வயது காதலை நினைவு கூற வைத்தது !

  5. story touch my heart

  6. Woooow excellent story…vaasiththu kondirukkumbothu neraya edangalil kan kalangi vidden…❤❤❤

Comments are closed.