நண்பனின் காதலி – 5 104

ஒ அப்படியா சே அவளும் என் வளைகாப்புக்கு வந்தா எவளவு நல்லா இருக்கும் அவ இல்லமா எனக்கு லேடிஸ் துணையே இல்லாம போர் அடிக்குது நிறைய விசயத்த பேச முடியாம ஒரு மாதிரி இருக்கு என்றாள் .ஏன் அதான் டேவிட் பொண்டாட்டி தமிழ் தானா அவள சுவாதிக்கு பதிலா பிரண்ட் ஆக்கிக்கோ என்றான் .ஒ ரெஜினவா எனக்கு அவள பிடிக்கவே இல்ல என்ன இருந்தாலும் சுவாதி மாதிரி வராது உண்மைலே டேவிட் மிஸ் பண்ணிட்டான் .
நல்ல அழகு நல்ல டைப் யாருக்கு அவ கூட வாழ கொடுத்து வச்சுருக்கோ என்றாள் வள்ளி .
ஓகே ஓகே ரொம்ப புகழாத அவள அவ ஒன்னும் அப்படி ஒன்னும் அழகும் இல்ல என்றான் .அங்கிட்டு போடா உனக்கு எது சரியான அழகுன்னே கண்டுபுடிக்க தெரியல .அழகு மட்டும் இருந்தா போதாதுடா அழகும் இருக்கணும் பண்பும் இருக்கணும் அது ரெண்டும் சுவாதி கிட்ட மட்டும் தான் நம்ம குரூப்லே இருக்கு என்றாள் வள்ளி .சரி சரி போதும் எனக்கு வொர்க் இருக்கு நான் வளைகாப்புக்கு வந்து பேசிக்கிறேன் என்று சொல்லி வைத்து விட்டான் .
போனை வைத்த பின்உண்மைலே சுவாதி மாதிரி வராதுதான் என்ன பண்ண அதுக்கு என்று சொல்லி கொண்டே மேஜையில் தன் தலையை மூட்டி கொண்டான் .
பின் மதியம் லஞ்ச் முடித்த உடனே மணி சொன்ன மாதிரி தனியாக பேச அந்த ப்ளோருக்கு சென்றான் .அவர்கள் இருவரும் வொர்க் டைம்ல் மறைமுகமாக சிகரட் அடிக்க கண்டுபிடித்த பழைய இடம் .அங்க போயி விட்டு வழக்கம் போல இருவரும் சிகரட்டை பற்ற வைத்து விட்டு விக்கி கேட்டான் .என்ன விஷயம் மச்சி தனியா பேசணும்னு சொன்ன என்று கேட்டான் .
மச்சி நான் ஒரு விசயம் சொல்லுவேன் அத நீ வள்ளி கிட்ட சொல்ல கூடாது என்றான் மணி .டேய் நீதான் ஓட்ட வாய் நான்லாம் ரகசியத்த சூப்பரா பாதுகாப்பேன் என்றான் விக்கி .டேய் நான் நினைக்கிறேன் டேவிட்க்கும் சுவாதிக்கும் இப்ப affair இருக்குன்னு நினைக்கிறேன்டா என்றான் மணி

நான் நினைக்கிறேன் டேவிட்க்கும் சுவாதிக்கும் இப்ப affair இருக்குன்னு நினைக்கிறேன் என்று மணி சொல்ல இவன் என்னடா புது கதைய கட்டி விடுறான் சரி என்ன சொல்றான்னு கேப்போம் .எப்படிடா சொல்ற என்று விக்கி கேட்டான் .

டேய் யோசிச்சு பாரு ஸ்வாதிய ஒரு ரெண்டு மாசமா காணோம் .நம்பரையும் மாத்திட்டா .அவ ரூம் மெட்டு கிட்ட கூட அவ எங்க போனான்னு சொல்லல அப்புறம் இந்த டேவிட் பையன் முகரையே ரெண்டு மாசமா ஒரு மாதிரி இருக்கு எதையோ மறைக்கிற மாதிரியே இருக்கு என்றான் மணி .
மணி இத மட்டும் வச்சு ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்ல முடியாது ஒரு வேல சுவாதி திரும்ப தமிழ் நாட்டுக்கே போயி இருக்கலாம் அவ லவ் பிரேக் ஆப் ஆனதால டேவிட்க்கு வேற எதாச்சும் டென்சன் இருக்கும் இது ரெண்டையும் முடிச்சு போட்டு பாவம் கல்யாணம் ஆனவன் வாழ்க்கைல விளையாடிடாத என்றான் விக்கி .
நான் அத வச்சு மட்டும் சொல்லலடா நேத்து ஒரு விஷயம் நடந்துச்சு அத வச்சு தான் சொல்றேன் என்று மணி சொல்லவும் விக்கிக்கு மனதில் தீடிரென ஒரு வருத்தம் வந்தது .இவன் என்ன சொல்றான் ஒரு வேல ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்குமோ இந்த குழந்தை கூட அவனோடாத இருக்குமோ சும்மா ரெண்டு பேரும் என்னைய யூஸ் பண்றாங்களா என்று விக்கி நினைத்தான் .

7 Comments

  1. Story supper plz continue the story

  2. Very nice story. Plz update the next part

  3. Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro

  4. Hello brother daily oru part podunga

  5. Next story plz

  6. Next part podunga bro

Comments are closed.