நண்பனின் காதலி – 5 103

ஏண்டா என்று கேட்டான் மணி .நான் வந்த உடனே டேவிட் வெளிய போயிடுவான் எதுக்கு அதுனால நான் வரல என்றான் ,
உடனே டேய் இது என்ன அவன் வீட்டு விசேசமா என் வீட்டு விசேசம் அன்னைக்கு அவன் வீட்டு விசேசம்னால தான் அவன் சொல்லி வெளிய அனுப்புனேன் .இன்னைக்கு நடக்க போறது என் வீட்டு விசேசம் அதுனால நீ தைரியமா வா என்றான் மணி .
இருந்தாலும் அவன் உனக்கு ஸ்கூல் படிச்ச காலத்துல இருந்து பிரண்டு நான் இடைல வந்தவன்தானே என்றான் விக்கி .டேய் ஏண்டா இப்படி எல்லாம் நினைக்கிற எனக்கு நீயும் பெஸ்ட் பிரண்டு தான் அவனும் பெஸ்ட் பிரண்டு தான் நீ வரர்தால அவன் வெளிய போனா அத பத்தி எனக்கு ஒன்னும் கவல இல்ல நீ சும்மா வா என்றான் மணி .
ஓகேடா நான் வரேன் எத்தன மணிக்குடா விசேசம் என்றான் .நைட் 7 மணிக்கு என்றான் மணி .ஹ அப்புறம் வள்ளி கிட்ட போன் பண்ணி பேசிடு என்று சொல்லி விட்டு வெளிய போன மணி உள்ளே வந்து விக்கி மதியம் லஞ்ச் முடிச்சுட்டு தனியா உன் கிட்ட ஒரு விசயம் பேசணும் நீ அந்த 3ர்ட் ப்ளோர்க்கு வந்துரு என்றான் மணி .சரிடா என்றான் .
அதன் பின் அவன் சொன்னது மாதிரி அவன் சமிப காலமா வள்ளி கிட்ட பேசவே இல்ல .எங்க இந்த சுவாதியால உலகமே மறந்துருது என்று நினைத்து கொண்டு வள்ளிக்கு போன் அடித்தான் .அவள் உடனே எடுக்க வில்லை .அப்புறம் திரும்ப ஒரு ரெண்டு தடவை அடிக்கவும் அவள் எடுத்தாள் .
ஹலோ சிஸ்டர் என்று சிரித்து கொண்டே சொல்லவும் அவள் திட்டினாள் என்னையே அப்படி கூப்பிடாதாடா போன வைடா என்றாள் .ஏன் சிஸ்டர் இப்படி என்றான் .பின்ன நீ உண்மைலே என்னையே சிஸ்டர நினைச்சு இருந்தேன்னா இத்தன நாள் பேசாம இருப்பியா என்று அவள் கேட்க ஐயோ அப்படி எல்லாம் இல்ல சிஸ்டர் வொர்க் பிஸி என்றான் .சும்மா சொல்லாதாடா நல்லா குடிச்சுட்டு டெய்லி ஏவ கூடாய்ச்சும் ரூம்ல கூத்து அடிச்சு கிட்டு இருப்ப உன் வீட்டுக்க வந்தா தெரிஞ்சுடும் நீ எப்படி இருக்கேன்னு என்ன இப்பதைக்கு என்னால வர முடியாது என்று வள்ளி சொன்னாள் .
அதுவும் நல்லதுதான் என்று விக்கி மனசுக்குள் நினைத்து கொண்டு அப்படி இல்ல சிஸ்டர் நிஜமாவே வொர்க் பிஸி என்றான் .சரி அது இருக்கட்டும் வளைகாப்புக்கு வருவே இல்ல என்று கேட்டாள் .சிஸ்டர் வளைகாப்பு பொம்பளைங்க சமாச்சாரம் அங்க நான் வந்து என்ன ஆக போகுது என்றான் .

7 Comments

  1. Story supper plz continue the story

  2. Very nice story. Plz update the next part

  3. Bro semmaya iruku story… Please continue… I came for sex story… U changed my thoughts… Fill ah eluthunga bro

  4. Hello brother daily oru part podunga

  5. Next story plz

  6. Next part podunga bro

Comments are closed.