ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 1 108

வனிதா, “ஏன்?”

விஸ்வா, “இட் ஸீம்ஸ் நாங்க குழந்தைங்களா இருந்தபோது ரெண்டு பேரும் மாத்தி மாத்தி தூங்கி முழிச்சுக்குவோமாம். அதே மாதிரி நான் ரொம்ப நாள் தாய்ப்பால் குடிச்சுட்டு இருந்தேனாம். அவன் சீக்கிரம் சாலிட்ஸ் சாப்பிட ஆரம்பிச்சுட்டானாம். கொஞ்சம் வளந்ததுக்குப் பிறகு
சாப்பாட்டு விஷயத்தில் எங்க ரெண்டுக்கும் தனிதனி டேஸ்ட். அவனுக்குப் பிடிச்சது எனக்குப் பிடிக்காது. ஸ்டில் நானாவுது சகிச்சுட்டு சாப்பிடுவேன். நான் விரும்பி சாப்படற சில ஐட்டங்களை அவன் தொடவே மாட்டான். அம்மா ரெண்டு பேருக்கும் வேற வேற டிஷ்ஷஸ் செஞ்சு கொடுப்பாங்க. இன்னும் கொஞ்சம் பெரிசான பிறகு ஸ்போர்ட்ஸ், ஹாபீஸ் இந்த விஷயங்களிலும் அப்படித்தான். சொல்லப் போனா அவனுக்கு ஸ்போர்ட்ஸ் அவ்வளவா பிடிக்காது. நான் டென்னிஸ் கோச்சிங்க் க்ளாஸ் போறேங்கறதுக்காக அவன் க்ரிக்கெட் கோச்சிங்க் போவான். ரெண்டு பேரையும் வேற கேம்புக்குக் கூட்டிட்டுப் போய் விட்டு திரும்ப கூட்டிட்டு வர அப்பாவும் அம்மாவும் ரொம்ப கஷ்டப் படுவாங்க. வீட்டில் ரிலாக்ஸ்டா இருக்கும் போதும் அப்படித்தான். நான் கேரம் போர்ட் ஆடலாம்ன்னு சொன்னா அவன் போர்ட் கேம்ஸ் எதாவுது ஆடலாம்ன்னு சொல்லுவான். சோ, அப்பாவும் அம்மாவும் எங்க ரெண்டு பேர் கூட தனிதனியா ஆடுவாங்க.”

வனிதா, “பயமுறுத்தறையா? ஸ்டில் .. எனக்கு ரெண்டு குழந்தைங்க போதாது”

விஸ்வா, “அப்படியா, முதல் ரெண்டுக்கு பிறகு சொல்லு”

அவன் தோளில் தலை சாய்த்து கனவு காணத் தொடங்கினாள் …
அமுதா, “எதுக்காவுது சண்டை வந்து இருக்கா?”

வனிதா, “ஓ! பல விஷயங்களில், முக்கியமா என் ட்ரெஸ் விஷயத்தில் அவர் டேஸ்ட் எனக்கு பிடிக்காது. இருந்தாலும் எதையாவுது எடுத்துக்கோன்னு நிப்பார். எனக்கு வேண்டாம்ன்னு நான் பிடிவாதமா சொன்னதும் மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு இருப்பார். சில சமயம் கடைக்காரன் முன்னாடி ரூடா பேசுவார். எனக்கு ரொம்ப கோவம் வந்துடும்”

அமுதா, “சோ, திரும்பி வந்துடுவீங்களாக்கும்?”

ஒரு அளவுக்கு சகஜ நிலைக்கு வந்து முகத்தில் விரிந்த புன்னகையுடன் வனிதா, “ம்ம்ஹூம் … சண்டைப் போட்டுட்டே ரெஸ்டாரண்ட் போவோம். அங்கே போய் உக்காந்துட்டு கண்டின்யூ பண்ணுவோம். கடைசில ரெண்டு பேரும் சாரின்னு சொல்லிட்டு ராசியாயிடுவோம்”

அமுதா, “Tell me. இது வரைக்கும் உங்க ரெண்டு பேருக்கு இடையில் வந்த பெரிய சண்டை எது?” என்று வாழைப் பழத்தில் ஊசியேற்றுவதைப் போல் கேட்டார்.

வனிதா, “Nothing”

1 Comment

Comments are closed.