ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 1 108

விஸ்வா, “No aththai. I won’t if you both and my parents don’t permit (இல்லை அத்தை நீங்களும் மாமாவும் எங்க அப்பா அம்மாவும் அனுமதிக்கலைன்னா நான் செய்ய மாட்டேன்)”

வனிதா, “But what’s wrong (அதனால என்ன?)” என்ற அவளது சிறு பிள்ளைத் தனமான ஈன ஸ்வரத்திற்கு

விஸ்வா, “You keep quite” என்று முற்றுப் புள்ளி வைத்தான்.

தன் வருங்கால மருமகனை வாஞ்சையுடன் பார்த்த வத்சலா தன் அண்ணனிடன், “பாத்தியா, இவனே வேண்டான்னாலும் என் பொண்ணு அவனை ஒரு வழி பண்ணிடுவா. So, let us not be too contrite about it (நாம ரொம்ப கட்டுப்பெட்டியா இருக்க வேண்டாம்)” என்றபிறகு வனிதாவைப் பார்த்து “உனக்கு டியூஷன் இருக்கு இல்லை. கிளம்பு” என்றபிறகு தன் அண்ணனிடம் குறும்புப் பார்வையுடன், “அண்ணா, ரொம்ப லேட் ஆயிடுச்சு. Hope Viswa wouldn’t mind dropping her in his new sexy bike? (விஸ்வாவுக்கு அவளை அவனோட புது பைக்கில் கூட்டிட்டு போக ஆட்சேபனை எதுவும் இருக்காது இல்லை?)”

முகம் மலர்ந்த விஸ்வாவைப் பார்த்துப் பூரித்த காயத்ரி, “No issues. My sons will always be at the service of a damsel in distress”

விஸ்வா, “I beg to differ மா! Unlike Ram I am partial to only MY damsel” என்றபடி அவன் அப்படிச் சொன்னதில் முகம் பிரகாசித்த வனிதாவை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றான்.

விஸ்வா பைக்கை இயக்க அவன் பின்னால் அமர்ந்த வனிதா அவனை அணைத்து அவன் முதுகில் தலை சாய்த்ததை பார்த்த தாய்மார் இருவருக்கும் கண்கள் பனித்தன.

முகத்தில் ஆதங்கம் ததும்ப ஸ்ரீவத்சன், “வத்சலா, இன்னும் நாலஞ்சு வருஷம் இருக்கு. He will be out most of that time”

காயத்ரி, “நீ ஒண்ணும் கவலைப் படாதே வத்சலா. அவனைப் பத்தி அவங்க அப்பாவைவிட எனக்கு நல்லா தெரியும். எங்கே போனாலும் திரும்பி பெட்டிப் பாம்பா வந்துடுவான். உன் பொண்ணை நீ ஒழுங்கா பாத்துக்கோ”

சுப்ரமணியன், “ஃப்யூ!” என்று பெருமூச்சு விட்டபின், “ஸ்ரீ, அந்த சிங்கிள் மால்ட்டை ஓபன் பண்ணலாம் வா”

இக்கதையை கேட்டதும் அமுதா வாய்விட்டுச் சிரித்தார் அதே சமயம் தனக்கு வேண்டியதை அடைவதில் வனிதா சிறிதும் தயக்கம் காட்ட மாட்டாள் என்பதை உணர்ந்தார், “வாவ், இப்போ கூட இங்கே எல்லாம் பேரண்ட்ஸ் அப்படி அனுமதிக்கறது இல்லை. So did you both kept your promises?”

வனிதா, “Yes very much. என்னைவிட விஸ்வாதான் ரொம்ப சீரியஸ்ஸா கடைபிடிச்சார். ஒரு காரியத்தில் இறங்கினா எந்த அளவுக்கு அவரால ஃபோகஸ்ட்டா இருக்க முடியும்ன்னு அப்போத்தான் தெரிஞ்சுட்டேன்.. இன்னமும் அவர் அப்படித்தான்”

அமுதா, “சோ, தனக்கு ஒரு வேலைன்னா உன்னை அம்போன்னு விட்டுட்டு போயிடுவானாக்கும்?”

வனிதா, “No way! அவர் என்ன காரியத்தில் ஈடுபட்டு இருந்தாலும் ஒரு கண் என் மேல் இருந்துட்டே இருக்கும்”

1 Comment

Comments are closed.