ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 1 108

அமுதா, “உதாரணத்துக்கு ஒரு இன்ஸிடெண்ட் சொல்லேன்”

வனிதா, “நான் வாரத்தில் மூணு நாள் ஈவ்னிங்க் டியூஷன் போவேன். விஸ்வா எர்லி மார்ங்கிங்க் ரன்னிங்க் அப்பறம் ஜிம்முக்குப் போவார். அதுக்கு பிறகு நான் ஸ்கூலுக்குப் போகும் போது அவரும் கோச்சிங்க் க்ளாஸ் போவார். விஸ்வா டெய்லி ஈவ்னிங்கில் ஸ்விம்மிங்க் ப்ராக்டீஸ் பண்ணுவார். நான் டியூஷன் போகாத நாளில் நான் அவரோடு கொஞ்ச நேரமாவுது ஸ்பெண்ட் பண்ணுவேன். முதலில் அம்மா அப்பா, மாமா அத்தை எல்லாம் அப்ஜெக்ட் பண்ணினாங்க. அப்பறம் அம்மாவே இந்த வருஷக் கடைசியில் இருந்து எப்படியும் பிரிஞ்சுதான் இருக்கப் போறாங்க பரவால்லை விடுண்ணான்னு மாமாகிட்டே சொல்லிட்டாங்க. அவர் ஸ்விம்மிங்க் போகும் போது கூட போய் பூல் சைடில் உக்காந்து படிச்சுட்டு இருப்பேன். ஒரு மணி நேரத்தில் ஐம்பது லாப்ஸ் ஸ்விம் பண்ணுவார். இருட்டின நேரமா இருக்கும். ஆனா என்கிட்டே யாராவுது வந்தாலோ பேச்சுக் கொடுத்தாலோ உடனே நிறுத்திட்டு என்னைப் பார்ப்பார். நான் ஓ.கேன்னு சொன்னதுக்கு அப்பறம்தான் கண்டின்யூ பண்ணுவார்”

அமுதா, “ஓ, எங்கே ஸ்விம் பண்ணுவான்? நம்ம க்ளப்பிலேயா. நான் அவனைப் பார்த்ததே இல்லையே”

வனிதா, “பெங்களூர் க்ளப்பில் இல்லை. இந்திரா நகர் க்ளப் ஸ்விம்மிங்க் பூலில். பாங்களூர் க்ளப்புக்கு போயிட்டு வர லேட் ஆகும்ன்னு இங்கே போவார்”

அமுதா, “Oh! His parents were members of both the clubs is it? (ஓ, அவனோட அப்பா ரெண்டு க்ளப்பிலும் மெம்பரா?)”

வனிதா, “Yes. Now we are also .. I mean he is also a member of both (ம்ம்ம் .. நாங்களும் .. ம்ம்ம்ம் அவரும் ரெண்டு க்ளப்பிலும் மெம்பர்)”

அமுதா, “முதலில் நாங்கன்னு சொல்லிட்டு அப்பறம் ஏன் அவன் மட்டும் மெம்பர்ன்னு சொன்னே?”

வனிதா, “நான் அதில் அவரோட மனைவிங்கறதால டிபெண்டண்ட் மெம்பர்” என்ற பிறகு தொண்டை அடைக்க, “டைவர்ஸுக்கு அப்பறம் எனக்கு மெம்பர்ஷில் இருக்காது”

அமுதா, “அந்தப் பேச்சை எடுக்க வேண்டாம்ன்னு சொன்னேன். மறந்துடுச்சா? ஸ்டில், உன் கூட இருக்கப் போற உன் பையன் டிபெண்டெண்ட் மெம்பரா கண்டின்யூ பண்ணுவான் இல்லையா?”

வனிதா அமுதாவை வெறித்துப் பார்த்தாள். ஆழ்மனதில் அவள் எதையோ மறைப்பதை அமுதா உணர்ந்தாள்.

அமுதா, “இட் இஸ் ஓ.கே. லவ் ஸ்டோரியை கண்டின்யூ பண்ணலாம். சோ, அந்த வருஷம் முழுக்க ஃப்ரீ டைமில் எல்லாம் ஒண்ணா சுத்தினீங்களாக்கும்?”

வனிதா, “ம்ம்ம் .. ”

அமுதா, “உங்க அம்மா சொன்ன மாதிரி லிமிட்டை க்ராஸ் பண்ணாம நடந்துட்டீங்களா?”

வெட்கத்தில் முகம் சிவந்த வனிதா, “அதிக பட்சம் கிஸ் பண்ணிப்போம். அதுவும் அந்த வருஷம் முடியற சமயத்தில். பிரிஞ்சு இருக்கப் போறோமேன்னு எனக்கு ரொம்ப கவலையா இருக்கும். அழுவேன். என்னை கன்ஸோல் பண்ண கட்டிப் பிடிப்பார். அப்போ ஆரம்பிச்சுது”

அமுதா பேச்சின் தடத்தை மாற்றும் வகையில் திடீரென, “Were you a virgin then? (உனக்கு அதற்கு முன் செக்ஸில் அனுபவம் இருந்ததா என்பதை பூடகமாக நீ அப்பொழுது கன்னித்தன்மையுடன் இருந்தாயா) என்று கேட்டார் … (பாருங்க இங்கிலீஷில் எழுதறது எவ்வளவு சுலபம்ன்னு!)”

முகத்தில் கோபம் தாண்டவமாட வனிதா, “Of course! I gave my virginity to Viswa during our first night (என் கன்னித்தன்மையை விஸ்வாவுக்கு எங்களது முதலிரவில் சமர்ப்பித்தேன்)”

அமுதா, “இல்லை, உங்க அம்மா மாமாகிட்டே பேசும் போது உனக்கு நிறைய எக்ஸ்போஷர் இருக்குன்னு சொன்னாங்கன்னு நீ சொன்னியே? அதான் கேட்டேன்”

1 Comment

Comments are closed.