ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 1 108

அமுதா, “அப்போ உங்க பேரண்ட்ஸுக்கு நீ லவ் பண்ணற விஷயம் தெரியாதா?”

வனிதா, “ம்ம்ஹூம் .. முன்னே, அதாவது, யூ.எஸ்ஸில் இருந்தப்போ அம்மா ஃபோனில் மாமாகிட்டே எப்படி இருக்கான் என் மருமகன் அப்படின்னு கேட்டதை ஒட்டுக் கேட்டேன். அவங்க யாரை சொல்றாங்கன்னு எனக்கு சந்தேகமா இருந்தது. அதுக்கு அப்பறம் அப்பாகூட பேசிட்டு இருந்தப்ப ரெண்டு பேரில் யாருன்னு டிஸைட் பண்ணிட்டியான்னு அப்பா கேட்டார். அதுக்கு அம்மா, ரெண்டு பேரில் யாரா இருந்தாலும் மருமகன் தானே, இன்னும் நாள் இருக்கு எதுக்கு அவசரப் பட்டு டிஸைட் பண்ணனும் அப்படின்னு ஜோக் அடிச்சாங்க சோ, அதில் இருந்து என் லவ்வுக்கு அவங்க அப்போஸ் பண்ண மாட்டாங்கன்னு எனக்கு தெரியும். I didn’t tell them anything”

அமுதா, “சரி, நீ ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சே. அப்பறம் என்ன ஆச்சு?”

வனிதா, “ராமுக்கு A.I.M.Sஇல் அட்மிஷன் கிடைச்சது. விஸ்வாவுக்கு ஐ.ஐ.டி அட்மிஷன் கிடைக்கலை. அவருக்கு ஐ.ஐ.டி இல்லைன்னா என்.டி.ஏ (NDA)வில் சேரணும்ன்னும் ஆசை இருந்தது. ஆனா மாமா அவரை ஐ.ஐ.டி என் ட்ரென்ஸில் அதிக கவனம் செலுத்தச் சொன்னதால் என்.டி.ஏவுக்கு சரியா பிரிபேர் பண்ணலை. ரெண்டும் கிடைக்காம ரொம்ப மனசு ஒடிஞ்சு போயிருந்தார். லோகல் காலேஜில் பணம் கொடுத்து மாமா அவருக்கு எஞ்சினியரிங்க் சீட்டுக்கு ஏற்பாடு செய்யறதா சொன்னதுக்கும் வேண்டாம்ன்னு சொல்லிட்டார். எங்க அப்பா அம்மாவுக்கு எல்லாம் ராமுக்கு எய்ம்ஸில் அட்மிஷன் கிடைச்சதில் ரொம்ப சந்தோஷம். டெல்லியில் இருந்து ராம் வாரா வாரம் அவங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணும்போது அம்மா அப்பாவையும் ஃபோனில் கூப்பிட்டு பேசுவார். ஒரு வாரம் அவர் கிட்டே இருந்து ஃபோன் வரலைன்னாலும் அம்மா ராம் ஏன் ஃபோன் பண்ணலைன்னு அத்தைகிட்டே கேப்பாங்க. விஸ்வா கோச்சிங்க் க்ளாஸ் போயிட்டு என்.டி.ஏ என்ட்ரன்ஸ் எக்ஸாமுக்கு பிரிபேர் பண்ணிட்டு இருந்தார். எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ராம்மைத்தான் ரொம்ப பிடிக்கும்ன்னு நான் நினைச்சேன். எங்கே அவங்க ரெண்டு பேரும் என்னைக் கேட்காம என்னை ராமுக்கு பேசி முடிச்சுடுவாங்களோன்னு எனக்கு மனசுக்குள்ளே ஒரே பயம். இப்போ நினைச்சுப் பாத்தா ரொம்ப ஸில்லியா இருக்கு. அப்போ எனக்கு பதினாறு வயசு தான். நான் படிச்சு முடிக்கும் வரை என்கிட்டே அந்தப் பேச்சை எடுக்க வேண்டாம்ன்னுதான் அவங்க இருந்து இருக்காங்க. எனக்கு அது தெரியலை. .. நான் இங்கே ஸ்கூலில் சேர்ந்து ஆறு மாசம் ஆகி இருக்கும் போது … ”

என்றும் பசுமையாக அவள் மனத்தில் நிலைத்த அன்றைய நிகழ்வுகள் அவள் மனத்தில் ஓடத் தொடங்கின ..

அவளது தாய் தந்தையர் பார்க்க வேண்டும் என்றே பள்ளியில் இருந்து வந்ததும் அவளது நோட்டுப் புத்தகங்கள் சிலவற்றை அவைகளின் கடைசிப் பக்கம் தெரியும் படி டைனிங்க் டேபிளில் பரப்பி வைத்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள். சிறுது நேரத்தில் அவளது தாய் வத்சலா அவளை அழைக்க ..

அவளது தாயுடன் தந்தையும் அமர்ந்து இருந்ததைக் கண்டாள்

வத்சலா, “என்ன மேடம்? படிக்கறதை மறந்துட்ட மாதிரி இருக்கு?”

வனிதா, “ஏன்? நான் படிச்சுட்டுத்தான் இருக்கேன்”

வத்சலா, “What do you call these?” என்றபடி அவள் பரப்பி வைத்து இருந்த நோட்டுப் புத்தகங்களில் ஒன்றை எடுத்துக் காட்டினாள்.

1 Comment

Comments are closed.