ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 1 108

டாக்டர் அமுதா மணிவண்ணன் MBBS, DPM. PhD.

அன்பும் அமைதியும் வடியும் அழகான முகத்தோற்றம். முன் ஐம்பதுகளிலும் இளமை குன்றாத உடலமைப்பு இருப்பினும் பார்ப்பவர் கையடுத்துக் கும்பிடத் தோன்றும் கம்பீரம், பதவிசு. அவரது கணவர் மணிவண்ணன் ஒரு புகழ் பெற்ற தொழிலதிபர். பணத்துக்குப் பஞ்சமில்லாத வாழ்வு. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற குறிக்கோளுடன் தன் மணவாழ்கையில் கண்ட வெற்றியின் ரகசியங்களை தன் கல்வித்திறனுடன் மற்றவருக்குப் புகட்டி பல முறிந்து போன, முறியப் போகவிருந்த திருமணங்களின் விதியை மாற்றியமைத்தவர். பெங்களூர் நகரத்தில் திருமண கோர்ட் வளாகங்களில் முறிந்து போன மணவாழ்க்கைகளுக்கு புத்தூர் மருத்துவர் எனப் பெயர் பெற்றவர்.

அவரது கவுன்ஸல்லிங்க் செண்டரில் இருந்த ஒரு கலந்தாலோசனை அறை.

அவருக்கு எதிரில் இருந்த இருக்கைகளில் ஒன்றில் … எல்லோராலும் விஸ்வா என்று அழைக்கப் படும் விஸ்வநாத் அமர்ந்து இருந்தான். ஆறடி உயரம், சற்றே கருத்த மாநிறம், பார்த்தவுடன் ராணுவத்தில் பணிபுரிபவன் அல்லது பணி புரிந்தவன் என்று அவன் முறுக்கேறிய உடலும் முடி வெட்டும் பரைசாற்றின. தான் கட்டிக் காத்த ஆறுவருட மணவாழ்க்கை தன் கண்முன்னே தவிடு பொடியாவதால் அவன் மனத்தைப் பிழிந்த துக்கம் முகத்தில் தெரியக் கூடாது என்ற அவன் பிர்யர்த்தனத்துக்கு அவனது ராணுவப் பயிற்சி உதவுவதை டாக்டர் அமுதா நன்கு உணர்ந்தார்.

அவனுக்கு அடுத்த இருக்கையில் வனிதா விஸ்வநாத் அமர்ந்து இருந்தாள். முப்பதிலும் முன் இருபதுகளை தாண்டாத, பிரம்மன் செதுக்கி வைத்த உடல் வாகு. பார்ப்பவரை சுண்டி இழுக்கும் வசீகர முகம். பல நாட்களாக அவள் அழுது புலம்பி தன் தூக்கத்தை தொலைத்துக் கொண்டு இருப்பதை அவள் முகத்தில் இருந்த சோகையும், வீங்கிய கண்களும் இரத்தச் சிவப்பாக சிவந்த மூக்கும் வெட்ட வெளிச்சமாக்கின. பல வருடங்களுக்கு முன் வனிதா சுப்ரமணியனாக பெங்களூர் செயிண்ட் ஜோஸப்ஸ் கல்லூரியில் வலம் வந்து கொண்டு இருந்த போது அக்கல்லூரி வாலிபர்கள் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு போயிருந்தாலும், பூனே ராணுவக் கல்லூரியில் இருந்த விஸ்வனாதனை நினைத்து ஒவ்வொரு நாளும் தன் பெயரை வனிதா விஸ்வநாத் என்று பல முறை எழுதியும் அவ்வாறே கையொப்பம் இட்டும் தன்னைப் பழக்கிக் கொண்டு இருந்தவள். ஆனால் இப்போது அந்தப் பட்டப் பெயர் தன்னிடம் இருந்து பறிக்கப் பட்டு தன் வாழ்க்கையே இருண்டு போவதை தவிற்க முடியாமல் பலியாட்டுக் களையுடன் இருந்ததும் டாக்டர் அமுதாவுக்குத் தெள்ளெத் தெளிவானது.

விஸ்வநாத் ஸ்ரீவத்சன் என்ற பெயரை அவர்களுடைய கேஸ் ஃபைலில் பார்த்தவுடன் யார் அந்த ஸ்ரீவத்சன் என்று விசாரிக்க அது தனக்கு ஒரு அளவுக்கு பழக்கம் ஆன டாக்டர் ஸ்ரீவத்சன் என்பதை அறிந்ததும் அவருடன் நடந்த தொலைபேசி உரையாடலை டாக்டர் அமுதா நினைவு கூர்ந்தார் …

அமுதா, “ஹெல்லோ டாக்டர் நான் சைக்கியாட்ரிஸ்ட் அமுதா பேசறேன்”

ஸ்ரீவத்சன், “சொல்லுங்க டாக்டர். எப்படி இருக்கீங்க? மணிவண்ணன் சார் எப்படி இருக்கார்?”

அமுதா, “ஐ ஆம் ஃபைன் டாக்டர். அவரும் ஓ.கே”

ஸ்ரீவத்சன், “உங்ககிட்டே இருந்து ஃபோன் கால் வரும்ன்னு எனக்குத் தெரியும். ஆனா இவ்வளவு சீக்கிரமா கூப்பிடுவீங்கன்னு எதிர்பார்க்கலை”

1 Comment

Comments are closed.