ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 1 108

ராணுவ பொறியியல் குழு (Military Engineering Group) என்பது ராணுவத்தை சார்ந்த ஒரு படை. மெட்ராஸ் ஸாப்பர்ஸ் (Madras Sappers), பாம்பே ஸாப்பர்ஸ் (Bombay Sappers) மற்றும் பெங்கால் ஸாப்பர்ஸ் (Bengal Sappers) என்ற மூன்று பிரிவுகளும் இதில் அடக்கம். போரில் டேங்குகள் (battle tank) துருப்புக்கள் செல்வதற்கு முன்னால் அவை செல்லுவதற்கு ஏதுவான பாதை அமைத்துக் கொடுப்பதில் இருந்து (வேண்டுமானால் துரிதமாக டேங்குகள் செல்லும் அளவுக்கு பலமுள்ள பாலங்கள் அமைப்பது முதல்) ராணுவத்தில் இருக்கும் இயந்திரங்களை சரி பார்ப்பது வரை இப்படையில் வேலை. பல பொறியாளர்களுடன் போர்ப் பயிற்சி பெற்ற ஆஃபீஸர்களும் இதில் இருப்பார்கள். பல போர்களில் முன் செல்லும் கமாண்டொ மற்றும் பாரா ரெஜிமென்ட் (Para Regiment) வீரர்களுடன் சேர்ந்து படை செல்ல திட்ட மிட்ட பாதைகளின் பாதுகாப்பை வேவு பார்ப்பதும் இவர்களின் வேலையே. தங்களுக்குக் கீழ் பணி புரியும் பொறியாளர்களின் பாதுகாப்பும் விஸ்வாவைப் போன்ற ஆஃபீஸர்களின் கையில்.

அமுதா, “வாவ், காம்பாட் எஞ்சினியர்ன்னா சண்டையில் கலந்துக்குவாங்களா?”

வனிதா, “More of defense .. அவங்களுக்கு கீழே இருக்கறவங்க இவங்க பொறுப்பில் இருப்பாங்க”

அமுதா, “உனக்குத் தெரியுமான்னு தெரியலை, நானும் ஒரு எஞ்சினியர்கூட இருவது வருஷத்துக்கும் மேல குடும்பம் நடத்திட்டு இருக்கேன். மத்தபடி விஸ்வா எப்படி? அவனும் ஒரு டிபிகல் எஞ்சினியர் மாதிரிதானா?” என்ற அர்த்தம் பொருந்திய கேள்வியை புன்னகைத்த படி கேட்க,

சிரித்த வனிதா, “Yes. A very thorough one at that (அவர் ரொம்பவே எஞ்சினியர்தான்)”

சிரித்த படி அமுதா, “Now we are on common territory .. (இப்போத்தான் நாம ரெண்டு பேரும் பொதுவான் விஷயம் பேசறோம்)”. சரி, என் அனுபவம் இருக்கட்டும். உனக்கு எப்படி?”

வனிதா, “வீட்டில் இருக்கும் எல்லாம் சரியா வொர்க் பண்ணனும். ப்ளெண்டரில், ஐ மீன் மிக்ஸியில் கொஞ்சம் வேற மாதிரி சவுண்ட் வந்தாலும் உடனே என்னன்னு பார்த்து எதாவுது செய்வார். எங்க வீட்டில் எதுவும் ரிப்பேர் ஆகி நின்னு போனது கிடையாது. அதே மாதிரி கேட் கதவு எதிலும் திறந்து மூடும் போது எந்த சத்தமும் வராம ஸ்மூத்தா வொர்க் பண்ணனும். எங்க வீட்டுக் கதவில் லாக்கை திறக்கும் போது கூட ரொம்ப சத்தம் கேட்காது ..” என்றவள் அதைச் சொல்லச் சொல்ல அவள் கண்கள் குளமாகின

அமுதா, “ஏன் இதுக்கு இமோஷனல் ஆயிட்டே?” என்று மெதுவாக தன் கேள்விகளை விவாகரத்தின் முக்கியக் காரணங்களின் பக்கம் செலுத்தினார்.

சுதாரித்துக் கொண்ட வனிதா, “இல்லை. நான் கிச்சனில் இருக்கும் போது அவர் வீட்டுக் கதவை திறந்து உள்ளே எனக்குப் பக்கத்தில் வரும் வரை ஒரு சத்தமும் இருக்காது .. அதை நினைச்சுட்டேன்”

அமுதா, “சோ, மெட்ராஸ் ஸாப்பர்ஸ்ன்னா எங்கே போஸ்டிங்க் இருந்தது?”

வனிதா, “முதலில் இங்கே, பெங்களூரில்தான் இருந்தது. அப்போ நான் பி.காம் ஃபைனல் இயர். அடுத்த ஏழு மாசமும் ரொம்ப ரொம்ப ஜாலியா இருந்தோம். நான் நல்லா படிச்சுட்டு இருந்தேன். ஸ்டில் எனக்கு ஃப்ரீ டைம் நிறைய இருக்கும். ஆனா அம்மா கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருந்தாங்க. ராமும் அப்போதான் நிம்ஹான்ஸ்ஸில் ஜாயின் பண்ணினார்”

அமுதா, “ஓ, டாக்டர் ராம் M.B.B.S முடிச்சதும் Nimhansஇல் ஜாயின் பண்ணினாரா?”

வனிதா, “ஆமா. ஒரு வருஷத்துக்கு அப்பறம்தான் மேல் படிப்புக்கு லண்டன் போனார்” என்றபின் சற்று நேர மௌனத்திற்குப் பிறகு தொடர்ந்து, “ரெண்டு பேரும் ட்வின்ஸ் நீங்க அவருக்கு மட்டும் தனி மரியாதை கொடுக்க வேண்டியது இல்லை” என்று தன் கணவனை ஒருமையிலும் அவனது இரட்டைப் பிறவியை பன்மையிலும் அழைத்ததில் தான் அடைந்த எரிச்சலைக் காட்டினாள்.

அமுதா, “மை காட்! புருஷனை கொஞ்சமும் விட்டுக் கொடுக்க மாட்டே போல இருக்கே. சாரி, டாக்டர் ராமை எனக்கு முன்னாடியே தெரியும். நேரடியா நீங்க வாங்கன்னுதான் கூப்பிட்டுப் பழக்கம். இனி உன் கூட பேசும் போது அவன் இவன்னே சொல்றேன். ஓ.கே?”

வனிதாவின் உதடுகளில் தோன்றிய புன்னகை அமுதாவுக்கு தன் இலக்கை எளிதில் அடைய முடியும் என்ற நம்பிக்கை ஊட்டியது ..

1 Comment

Comments are closed.