ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 1 108

ஸ்ரீவத்சன், “எனக்கும் அப்படித்தான் தோணுது”

அமுதா, “உங்களுக்குத் தெரிஞ்சு அவங்களுக்கு இடையே மனஸ்தாபம் இருந்தது உண்டா?”

ஸ்ரீவத்சன், “நோ சான்ஸ். அவங்க ரெண்டு பேரும் ஒரு மாடல் கப்பிள்ன்னு சொல்லலாம். வனிதாவும் சரி விஸ்வாவும் சரி ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்ப விட்டுக் கொடுப்பாங்க. இவ்வளவு வருஷத்துக்குப் பிறகும் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிரா லவ் பண்ணினாங்க. நாங்க எல்லோரும் லவ் பர்ட்ஸ்ன்னு கிண்டல் அடிக்கற அளவுக்கு. இன்னமும் லவ் பண்ணிட்டுத்தான் இருக்காங்க அப்படிங்கறது என் கணிப்பு. I think they both still are deeply in love with each other.”

அமுதா, “பிறகு ஏன் இந்த டைவர்ஸ்?”

ஸ்ரீவத்சன், “ஜட்ஜ் உங்ககிட்டே கவுன்ஸிலிங்க் போகணும்ன்னு சொன்னதும் நான் ரொம்ப சந்தோஷப் பட்டேன். எப்படியாவுது இந்த டைவர்ஸை தடுத்து நிறுத்தினீங்கன்னா நான் உங்களுக்கு ஆயுசுக்கும் கடமை பட்டு இருப்பேன்”

அமுதா, “ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர்” என்று விடை பெற்றார்.
எதிரில் அமர்ந்து இருந்த இளம் தம்பதியை நட்புடன் கூடிய புன்முறுவலுடன் பார்த்து …

அமுதா, “மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் விஸ்வநாத், மியூச்சுவல் கன்ஸெண்ட் அப்படின்னு விவாகரத்துக்கு விண்ணப்பிச்சு இருக்கீங்க. பார்த்தா மேட் ஃபார் ஈச் அதர் கபிள்ன்னு சொல்ற மாதிரி இருக்கீங்க. போதாக் குறைக்கு உங்களோட நாலே வயசான உங்க ரெட்டைக் குழந்தைங்க. அவங்களையும் ஆளுக்கு ஒருத்தரா பிரிச்சுக்க ஒத்துட்டு இருக்கீங்க. வேற ஏதோ காரணத்தை மறைச்சு அப்படி விண்ணப்பிச்சு இருப்பதா ஃபேமிலி கோர்ட் ஜட்ஜ் நம்பறார். இதை எனக்கு விளக்கி உங்களுக்கு விவாகரத்துக் கொடுக்க மனசு வரலைன்னு அவரே எனக்கு ஃபோன் பண்ணி இந்தக் கேஸை எடுத்துக்கச் சொல்லி ரிக்வஸ்ட் பண்ணினார். உங்க ரெண்டு பேரையும் நேரில் பார்த்ததுக்கு பிறகு எனக்கும் இந்த விவாகரத்து சரியில்லைன்னுதான் தோணுது. சோ, உங்களுக்கு இந்த விவாகரத்து வேணும்ன்னா எங்கிட்ட நீங்க எதையும் மறைக்கக் கூடாது. சைக்கியாட்ரி படிச்சுட்டு ரொம்ப வருஷம் ப்ராக்டீஸ் பண்ணினதுக்கு அப்பறம் தான் நான் மேரேஜ் கவுன்ஸிலர் ஆனேன். பொய் சொன்னா என்னால சுலபமா கண்டு பிடிச்சுட முடியும். Hope I made myself clear” என்று ஆணித்தரமாக முடித்தார்.

தலை குனிந்தவாறு வனிதா, “எஸ் மேம்”

முகம் இறுகிய விஸ்வா, “எஸ் மேம் லவுட் அண்ட் க்ளியர்”

அமைதி வழியும் புன் சிரிப்புடன் அமுதா, “Stated like a true army man. நீங்க இன்னமும் ஆர்மில இருக்கீங்களா?” என்று சகஜ நிலைக்குக் கொண்டு வர முயன்றார்.

விஸ்வா, “இல்லை மேம், இப்போ ஐ ஆம் எ ஸிவிலியன்”

அமுதா, “ஏன், ஆர்மில இருக்கப் பிடிக்கலையா?”

விஸ்வா, “அது ஒரு பெரிய கதை … In fact, ஆர்மிலயே இருந்து இருந்தா இந்த சூழ்நிலையில் உங்களை சந்திச்சு இருக்க மாட்டேன்” என்று இழுத்தான்.

அமுதா, “இட்ஸ் ஓ.கே, இந்த கவுன்ஸிலிங்கில் அதை எல்லாம் எங்கிட்ட பகிர்ந்துக்க நிறைய நேரம் ஒதுக்கறேன். அப்போ சொல்லுங்க” என்ற பிறகு தொடர்ந்து “என்ன, ஆரம்பிக்கலாமா?”

விஸ்வா, “எஸ்”

வனிதா, “ம்ம்ம்”

அமுதா, “முதலில் உங்களை எப்படிக் கூப்பிடறது? உங்களை விட நான் வயசில் பெரியவதான். ஒருமையில் கூப்பிட்டா பரவால்லையா?”

விஸ்வா, “அதைத் தான் நான் விரும்புவேன்”

வனிதா, “எஸ் மேம்”

1 Comment

Comments are closed.