ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 1 108

ஸ்ரீவத்சன், “டேய். உன்னை எம்பாரஸ் பண்ணறதுக்காக சொல்லலை. Its time they too know about it அதுக்ககத்தான் சொன்னேன். கொடு”

தயக்கத்துடன் விஸ்வா தன் பர்ஸ்ஸை திறந்து காட்ட அதில் வனிதாவின் புகைப் படம் ஒன்று இருந்தது

ஸ்ரீவத்சன், “சார்கிட்டே இந்த மாதிரி ஒரு டஜன் ஃபோட்டோஸ் இருக்கு. ஒவ்வொண்ணு பின்னாலையும் ‘வனிதா மை லவ்’ அப்படின்னு எழுதி வெச்சு இருக்கார். ரெண்டு நாளைக்கு முன்னாடி எதேட்சையா அவன் ரூமுக்குப் போனப்ப பார்த்தேன். நாங்க ரெண்டு பேரும் அவனுக்கு அட்வைஸ் பண்ணினோம்”

வனிதாவின் முகம் ஆயிரம் வாட்ஸ் விளக்கைப் போல பிரகாசிக்க விஸ்வாவின் முகத்தில் இருந்த குழப்பம் அகலவில்லை.

காயத்ரி, “நீ இன்னும் அவளுக்கு சொல்லலைன்னு சொன்னே இல்லை? See what she has been doing in her class” என்ற படி அந்த நோட்டுப் புத்தகத்தை அவனிடம் நீட்டி கடைசிப் பக்கத்தைக் காட்டினாள்

அதில் அந்தப் பக்கம் முழுவதும் ‘வனிதா விஸ்வநாத்’ என்று பல விதங்களில் எழுதப் பட்டு இருந்தது. சில இடங்களில் அதையே கையொப்பம் போலும் இடப் பட்டு இருந்தது.

வனிதாவின் முகத்தில் இருந்த பிரகாசம் அவனது முகத்துக்கும் பரவியது.

ஏதும் பேசாமல் நின்று இருந்த அந்த பச்சிளம் ஜோடியைப் பார்த்து ஸ்ரீவத்சன், “Look both of you. We are not against your love for each other. ரெண்டு பேரும் டீன் ஏஜர்ஸ். நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. செய்ய வேண்டிய வேலைகளை விட்டுட்டு இப்படி கனவு கண்டுட்டு இருந்தா உங்க படிப்பு கெடும். விஸ்வா, அடுத்த வருஷம் என்.டி.ஏ சேரணும்ன்னு குறியா இருக்கே. வனிதா நீ இந்த வருஷம் ஐ.ஸி.எஸ்.ஸி போர்ட் எக்ஸாம் எழுதப் போறே. நீங்க ரெண்டு பேரும் நல்லா பிரிபேர் பண்ணனும். என்ன?”

வனிதா, “மாமா, என் படிப்பு கெடாது. நான் நல்லா படிப்பேன்”

விஸ்வா, “டாட், நிச்சயம் நான் அடுத்த வருஷம் என்.டி.ஏவில் சேரத்தான் போறேன். பாத்துட்டு இருங்க”

வத்சலா, “விஸ்வா, இவளுக்கு இது புது இடம் புது ஸ்கூலிங்க் ஸிஸ்டம். நீதான் அவளுக்கு ஹெல்ப் பண்ணி கோப்-அப் பண்ண வைக்கணும். இவ எங்கேயும் போயிட மாட்டா. நீ படிச்சு ஒரு நல்ல பொசிஷனுக்கு வந்ததும் நாங்களே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வெக்கறோம். அது வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப கவனமா இருக்கணும். ரெண்டு பேரும் அவங்கவுங்க வேலைகளை முடிச்சுட்டு, ஜாலியா வெளியே மூவிக்கு, டின்னருக்கு எல்லாம் போகணும்ன்னா I have no problem allowing you both to do the same” என்றவளை இடைமறித்து ..

ஸ்ரீவத்சன், “என்ன வத்சலா இது?”

வத்சலா, “அண்ணா, உன் பையன் வேணுன்னா நீ சொன்னபடி கேட்டு இருப்பான். இவ அங்கே பிறந்து வளந்தவ. சின்ன வயசிலேயே நிறைய விஷயங்கள் அவளுக்குத் தெரியும்” என்றபடி வனிதாவைக் கூர்ந்து நோக்கினாள். தாய், மகள் இருவர் பார்வையும் ஒரு கணம் உறைந்து நின்றபின் வனிதா தலை குனிந்தாள்.

பெருமூச்சு விட்டபடி வத்சலா தொடர்ந்தாள், “ஸ்கூலிலேயே சொல்லிக் கொடுத்து இருக்காங்க. இவ மட்டும் தான் அவ க்ளாஸ்ல டேட்டிங்க் எதுவும் போகாம இருந்தா. அவளா கேட்டு இருந்தா நிச்சயம் அனுமதிச்சு இருப்போம். நாம் தடுத்தா ரெண்டு பேரும் திருட்டுத்தனமா மீட் பண்ணிப்பாங்க.”

1 Comment

Comments are closed.