ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 1 108

வனிதா, “ம்ம்ம் .. I was born and brought up in the U.S .. அங்கே நான் நைந்த் க்ரேட் முடிச்சதுக்கு அப்பறம் இங்கே வந்தோம். டெந்த்தில் இருந்து இங்கே கண்டினியூ பண்ணினேன்”

அமுதா, “உங்க வீட்டில் நீ ஒரே குழந்தையா?”

வனிதா, “இல்லை. அண்ணா என்னை விட ஆறு வருஷம் பெரியவர். அவர் திரும்ப இங்கே வரவே இல்லை. அங்கேயே படிச்சு முடிச்சுட்டு செட்டில் ஆயிட்டார்”

அமுதா, “நீ விஸ்வாவை லவ் பண்ண ஆரம்பிச்சப்போ உனக்கு என்ன வயசு?”

வெட்கத்தில் முகம் சிவந்து தலை குனிந்த வனிதா, “I think thirteen .. ”

அமுதா, “விஸ்வாவும் உன்னை அப்போ இருந்தே லவ் பண்ணினா?”

வனிதா, “I think so. ஆனா, நான் அவரை லவ் பண்ணறேன்னு தெரியறவரைக்கும் நான் அவரோட ப்ரதர் ராமை லவ் பண்ணறதா நினைச்சுட்டு இருந்தாராம்.”

அமுதா, “ஏன்?”

வனிதா, “ராம் இவரை விட கொஞ்சம் ஃபேரா இருப்பார். இவர் அளவுக்கு உயரம் இல்லைன்னாலும் பார்க்க ஸ்மார்ட்டா இருப்பார். ஐ திங்க் இவரோட ஸ்கூலிலும் பொண்ணுங்க ராம்கிட்டேதான் ரொம்ப வழியுவாங்களாம்”

அமுதா, “ம்ம்ம் … விஸ்வாகிட்டே உன் லவ்வை எப்போ சொன்னே?”

வனிதா, “நானா சொல்லலை …”

அமுதா, “இந்த மாதிரி க்ரிப்டிக்கா பேசாம கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன்? உனக்கும் பழசை நினைச்சுப் பார்க்கும் போது மனசில் இருக்கும் பாரம் கொஞ்சம் குறையும்”

வனிதா, “என்ன விவரம்?”

அமுதா, “Tell me your life history since the time you fell in love with Viswa”

வனிதா, “நான் அப்போ யூ.எஸ்ஸில் நைந்த் க்ரேட் முடிச்சுட்டு இந்தியா வந்தேன். எங்க அப்பா அவங்க வீட்டுக்குப் பக்கத்து சைட்டை ரொம்ப நாளுக்கு முன்னாடி வாங்கி அதில் வீடும் கட்டி வாடகைக்கு விட்டு இருந்தார். நாங்க வரும்போது மாமா அதை ரினவேட் பண்ணி ரெடியா வெச்சு இருந்தார். சீக்கிரமா செட்டில் ஆயிட்டோம். அப்போ அவர் ப்ளஸ் டூ அதே ஸ்கூலில் முடிச்சுட்டு ஐ.ஐ.டி என்ட்ரென்ஸ் எக்ஸாம் ரிஸல்ட்ஸுக்கு வெய்ட் பண்ணிட்டு இருந்தார். ராம் மெடிகல் காலேஜ் அட்மிஷனுக்கு வெய்ட் பண்ணிட்டு இருந்தார். எனக்கு டெந்த்க்கு இங்கே ஃப்ராங்க் ஆண்டனி ஸ்கூலில் அட்மிஷன் கிடைச்சுது. எனக்கு இங்கே இருக்கும் ஸிஸ்டம் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியான்னு ரொம்ப பயமா இருந்தது. விஸ்வா படிக்கும் போது ஸ்கூல் ஹாக்கி டீம், அத்லெட்டிக் டீம் அப்பறம் ஸ்கூல் பாண்டிலும் இருந்து இருக்கார். சோ, விஸ்வா ஸ்கூலில் டீச்சர்ஸுக்கு மத்தியில் ரொம்ப பிரபலம். எனக்கு பயம் போகணும்ன்னு ஒவ்வொரு டீச்சருக்கும் என்னை அறிமுகப் படுத்தி என்னைப் பத்தி சொல்லி எனக்கு ஹெல்ப் பண்ண சொன்னார். நான் சேர்ந்த ஒரு மாசத்தில் ப்ரின்ஸிபல் முதலா எல்லோருக்கும் என்னை விஸ்வாவோட கஸின்னு தெரிஞ்சு இருந்தது. I was really impressed about him. முன்னத்தை விட அவரை ரொம்ப லவ் பண்ண ஆரம்பிச்சேன்”

1 Comment

Comments are closed.