ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 1 108

விஸ்வா, “ஓ.கே. டாக்டர். உங்க செக்ரடரி காலுக்கு நான் வெய்ட் பண்ணறேன்” என்றவாறு எழ முயன்றான்.

அமுதா, “வெய்ட். உங்களுக்கு கொஞ்சம் ஹோம் வொர்க் கொடுக்கப் போறேன்”

விஸ்வா, “என்ன?”

அமுதா, “ஆர்மில இருந்து இருக்கீங்க. டைரி எழுதும் பழக்கம் இருக்குன்னு நினைக்கறேன். Am I correct?”

விஸ்வா, “எஸ் அஃப்கோர்ஸ்”

அமுதா, “முதலில் நீங்க முதல் முதலில் வனிதாவை சந்திச்ச வருஷத்தில் இருந்து உங்க பழைய டைரிகளை புறட்டிப் பார்க்கணும். அதுக்குப் பிறகு எனக்கு ரெண்டு லிஸ்ட் தயார் பண்ணிக் கொடுக்கணும். ஒரு லிஸ்ட்டில் ஏன் நீங்க ரெண்டு பேரும் இனி சேர்ந்து வாழ முடியாதுங்கறதுக்கான காரணங்கள். இன்னொரு லிஸ்ட் ஏன் நீங்க ரெண்டு பேரும் வாழணும் அப்படிங்கறதுக்கான காரணங்கள். ஐ மீன், சேர்ந்து வாழறது, பிரியறது இது ரெண்டிலும் ப்ரோஸ் அண்ட் கான்ஸ் இருக்கும். Being a manager in a senior position and an ex-army man, நிச்சயம் இந்த ரெண்டையும் மனசில் எடை போட்ட பிறகு தான் இந்த முடிவுக்கு வந்து இருப்பீங்க. அதை உங்களை எழுதச் சொல்லறேன். அடுத்த சிட்டிங்க்குக்கு வரும்போது ரெண்டு லிஸ்டையும் எடுத்துட்டு வாங்க. ஓ.கே?”

விஸ்வா மௌனம் காக்க …

தொடர்ந்த அமுதா, “நான் ஏற்கனவே சொன்ன மாதிரி உங்க விஷயம் எதுவும் வெளியில் யாருக்கும் நான் சொல்ல மாட்டேன். I am bound by doctor-patient cofidentiality just like any psychiatrist .. ப்ளீஸ் கோ-ஆபரேட் பண்ணு விஸ்வா”

விஸ்வா பெருமூச்செறிந்தபடி, “எஸ் மேம்” என்றபடி விடைபெற்றான்.

அவன் போவதை, அவன் அந்த அறையை விட்டு வெளியில் செல்லும் வரை, தன் உயிரே தன்னை விட்டு பிரிந்து போவதைப் பார்ப்பதைப் போல் ஏக்கம் செறிந்த கண்களுடன் வனிதா அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவள் செய்கையை கூர்ந்து நோக்கியவாறு இருந்த அமுதா அவளது கவனம் தன் புரம் திரும்பிய பிறகு, “You love him a lot. Don’t you?”

கண்கள் பனிக்க உதட்டைக் கடித்த படி மெதுவாகத் தலையசைக்கத் தொடங்கிய வனிதா பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் கைகளில் முகத்தைப் பதித்து அழுது குலுங்கினாள்.

தன் இருக்கையை விட்டு எழுந்து அவளருகே வந்து அமர்ந்த அமுதா அவள் முதுகைத் தடவ அவரது தோளில் முகம் புதைத்து வனிதா தன் அழுகையை தொடர்ந்தாள் …

சற்று நேரத்தில் கண்களைத் துடைத்துக் கொண்ட வனிதா, “சாரி, கொஞ்சம் இமோஷனல் ஆயிட்டேன்”

அமுதா, “நோ ப்ராப்ளம் வனிதா. இப்போ நீ என்னுடன் தனியாத்தானே இருக்கே? சரி, கண்டினியூ பண்ணலாமா?”

வனிதா, “எதுக்கு இந்த டைவர்ஸ்ன்னு … “

1 Comment

Comments are closed.