ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 1 108

அமுதா, “அப்படின்னா நேரா விஷயத்துக்கு வர்றேன். ஏன் இந்த விவாகரத்து?”

ஸ்ரீவத்சன், “Honestly? I don’t know. ரெண்டு பேரும் எதுவும் சொல்ல மாட்டேங்கறாங்க. என் தங்கையும், அதாவுது வனிதாவின் அம்மா, அவளும் என் ப்ரதர் இன் லாவும் ரொம்ப குழம்பிப் போயிருக்காங்க”

அமுதா, “ஓ, வனிதா உங்க தங்கை மகளா?”

ஸ்ரீவத்சன், “என் ட்வின் ஸிஸ்டரோட மகள்”

அமுதா, “ஓ அதான் இவங்களுக்கும் ட்வின்ஸ் பிறந்து இருக்கு”

ஸ்ரீவத்சன், “விஸ்வாவும் ட்வின்ஸில் ஒருத்தன்தான். அவனோட ப்ரதர்தான் டாக்டர் ராமமூர்த்தி”

இளம் வயதிலேயே புகழ் பெற்ற நியூரோ சர்ஜனான டாக்டர் ராமமூர்த்தியையும் கேஸ் ஃபைலில் பார்த்த விஸ்வனாதனின் புகைப் படத்தையும் நினைவு கூர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே உருவ ஒற்றுமை இல்லாததை உணர்ந்த அமுதா, “வாவ், மேல்-மேல் டைஸைகாட்டிக் ட்வின்ஸா (Male–male dizygotic twins – முழு உருவ ஒற்றுமை இல்லாத இரட்டைப் பிறவியர்)?”

ஸ்ரீவத்சன், “எஸ்”

அமுதா, “Sorry for the digression. சோ, அவங்களோடது அரேஞ்ச்ட் மேரேஜா?”

ஸ்ரீவத்சன், “நாட் அட் ஆல். என் தங்கைக்கு என் மகன்களில் ஒருத்தனுக்கு தன் மகளைக் கொடுக்கணும்ன்னு ரொம்ப ஆசை. எனக்கும் ஒரு அளவுக்கு அதில் ஒப்புதல் இருந்தது. ஆனா நாங்க எந்த முடிவும் எடுக்கும் முன்பே இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. தட் ஈஸ், விஸ்வா ப்ளஸ் டூ படிச்சுட்டு இருந்தப்பவே. வனிதா அப்ப டெந்த் படிச்சுட்டு இருந்தா”

அமுதா, “வாவ். அப்படி இருந்தும் எதுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து டைவர்ஸ் கேட்டு இருக்காங்க?”

ஸ்ரீவத்சன், “ரெண்டு பேரும் சேர்ந்து கேட்டாங்களான்னு எனக்கு சந்தேகமா இருக்கு. .ரொம்ப வற்புறுத்திக் கேட்டப்ப என் தங்கைகிட்டே தப்பு தன் பேரில்தான் அப்படின்னு மட்டும் வனிதா சொல்லி இருக்கா”

அமுதா, “உங்ககிட்டே விஸ்வா எதுவும் சொல்லலையா?”

ஸ்ரீவத்சன், “இல்லை”

அமுதா, “டாக்டர் ராம்கிட்டே இதைப் பத்தி கேட்டீங்களா?”

ஸ்ரீவத்சன், “நிம்ஹான்ஸ் (Nimhans – டாக்டர் ராமமூர்த்தி பணியாற்றும் புகழ்பெற்ற மருத்துவமனை) அவனை ஒரு டெபுடேஷனில் யூ.எஸ் அனுப்பி இருக்கு. இன்னும் ஒரு மூணு வாரத்தில் திரும்பி வரப் போறான். விஸ்வாகூட ஃபோனில் பேசி இருக்கான். வற்புறுத்திக் கேட்டப்ப நீ திரும்பி வா அப்பறம் சொல்லறேன்னு சொல்லியிருக்கான்.”

அமுதா, “சோ, ஐ திங்க், டைவர்ஸ் வேணும்ன்னு கேட்டது உங்க சன். வனிதா அதுக்கு ஒப்புதல் கொடுத்து இருக்கா. What is your opinion?”

1 Comment

Comments are closed.