ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 1 108

அமுதா, “நீங்களும் என்னை பேர் சொல்லித்தான் கூப்பிடணும். வேணும்ன்னா நீ வா போன்னு ஒருமையில் பேசினாலும் பரவால்லை. உங்களை மாதிரி இளம் தம்பதியர் என்னை அப்படிக் கூப்பிட்டா நானும் கொஞ்சம் இளமையா ஃபீல் பண்ணுவேன்” என்று சிலாகிக்க, அந்தத் தம்பதியரிடம் இருந்து சிறு புன்னகையே அவருக்கு பதிலாகக் கிடைத்தது.

அவர்கள் இருவரில் சோகம் அவர் மனத்தை உறுத்தியது ..

அமுதா, “மொதல்லே இந்த கவுன்ஸிலிங்க் எப்படி நடக்கப் போகுதுன்னு உங்களுக்கு விளக்கறேன். மொத்தம் பனிரெண்டு வாரங்கள் வரை இந்த கவுன்ஸிலிங்க் நீடிக்கலாம். முதலில் உங்க ரெண்டு பேர் கூட தனித்தனியா பேசுவேன். ஒரு ஸ்டேஜுக்குப் பிறகு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னை மீட் பண்ணி பேசுவீங்க. தேவை இருந்தா மறுபடியும் தனித்தனியா பேசவும் சொல்வேன். ஓ.கே?”

கணவன் மனைவி இருவரும் தலையசைக்க டாக்டர் அமுதா தொடர்ந்தார், “சில கண்டிஷன்ஸ். உங்க ரெண்டு பேருக்கு நடுவில் எந்த வித மனஸ்தாபம் இருந்தாலும் அதை என்னுடன் தனியா பேசும் போது உங்க கோப தாபத்தை எல்லாம் கொட்டலாம். கத்தலாம். கூச்சல் போடலாம். உணற்சி வசப் பட்டு அழலாம். ஆனா உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா கூப்பிடும் போது மனசில் கோபமோ வருத்தமோ இருந்தாலும் அந்த வருத்தத்தை வார்த்தைகளால் மட்டும்தான் வெளிப்படுத்தணும். அப்போ கோபப் பட்டு உணற்சி வசப் பட்டு சத்தம் போடுவதை சண்டை போடுவதை அழறதை நான் அனுமதிக்க மாட்டேன். You both will behave as responsible grown up adults. சரியா?”

விஸ்வா, “சில விஷயங்களை பேசும் போது உணற்சி வசப் படுவதை தவிற்க முடியலைன்னா?”

அமுதா, “டீவில சொல்ற மாதிரி ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக்குவோம். உணற்சிகளை கட்டுப் படுத்தும் மன நிலை வந்த பிறகு தொடருவோம். என்ன?”

விஸ்வா, “ஓ.கே”

அமுதா, “சரி. பொதுவா முதலில் மனைவியுடன் என் கவுன்ஸிலிங்க் தொடங்கும். சோ விஸ்வா, இந்த சிட்டிங்க் வனிதாவுடன். மே பீ, அடுத்த ஒண்ணு ரெண்டு சிட்டிங்க்கும் அவகூட இருக்கலாம். நீங்க எப்ப வரணும்ன்னு என் செக்ரடரி ஃபோன் பண்ணி சொல்லுவா”

விஸ்வா முகத்தில் எரிச்சலைக் காட்டி, “How long this charade is going to go on (இன்னும் எத்தனை நாளுக்கு இந்த நாடகம் நடக்கப் போகுது?”)”

அடுத்த கணம் முகத்தில் கோபம் தாண்டவம் ஆட அமுதா குரலை உயர்த்தி, “You take that back young man! நான் மொதல்ல சொன்ன மாதிரி இங்கே நான் சொன்ன படி நீ கேட்டாத்தான் இந்த கவுன்ஸிலிங்க் நடக்கும். வேண்டாம்ன்னா இப்போ இந்த நிமிஷமே ஜட்ஜுக்கு ஃபோன் பண்ணறேன். அவர் வேற யாரையாவுது ரெஃபர் பண்ணட்டும். இல்லைன்னா போதுமான அளவுக்கு அவர் கன்வின்ஸ் ஆகலைன்னு சொல்லி டைவர்ஸ் கொடுக்க முடியாதுன்னு தீர்ப்பு அளிக்கட்டும். What do you say?”

விஸ்வா, “I apologise. நாங்க ரெண்டு பேருமே விரும்பி கேட்கும்போது ஏன் இப்படி இழுத்து அடிக்கணுங்கற ஆதங்கத்தில் கேட்டேன்”

அமுதா, “விரும்பிக் கேட்டீங்களா? உங்க முகத்தை போய் கண்ணாடியில் பாருங்க. உங்க மனசில் இருக்கும் துக்கம் உங்க முகத்தில் எழுதி ஒட்டி இருக்கு. இவ முகத்தையும் பாருங்க. பலியாட்டுக் களை சொட்டுது. உங்களுக்கே தெரியும் ஏன் ஜட்ஜ் வேண்டாம்ன்னு சொன்னார்ன்னு. நீங்க ரெண்டு பேரும் எதையோ மறைக்கறது நல்லா தெரியுது. அது என்னைத் தவிற வேறு யாருக்கும் தெரிய வராதுன்னு என்னால் உங்களுக்கு உத்திரவாதம் கொடுக்க முடியும். சோ, ப்ளீஸ் கோ-ஆபரேட் வித் மீ. ஓ.கே?”

1 Comment

Comments are closed.