ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 1 108

வனிதா, “உடம்பில் சின்ன சின்ன காயம்தான். கல் முட்டியில் பெரிய அடி. ஆபரேட் பண்ணி சரி பண்ணினாங்க. பழைய நிலைமைக்கு காலில் பலம் வர ரொம்ப நாள் ஆகும்ன்னு சொன்னாங்க. அப்படியும் ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்க முடியாதுன்னு மெடிகல் ரிப்போர்ட் கொடுத்தாங்க. அதுக்கு அப்பறம் ஆக்டிவ் டியூட்டியில் இருக்க அவருக்கு ஃபிட்னஸ் இல்லைன்னு இங்கே பாங்களூர்லில் இருக்கும் ஆர்மி வொர்க் ஷாப்பில் போஸ்ட் பண்ணினாங்க. Desk Work. வேணும்ன்னா ரிஸைன் பண்ணவும் பர்மிஷன் கொடுத்தாங்க. விஸ்வாவுக்கு அதில் ரொம்ப வருத்தம். ஆர்மி வொர்க் ஷாப்பில் வொர்க் பண்ணிட்டே அவரும் M.B.A பண்ண முடிவெடுத்தார். ரெண்டு பேரும் ஒண்ணா பார்ட் டைம் எம்.பி.ஏ என்ரோல் பண்ணி ரெண்டு வருஷத்தில் முடிச்சோம். அவர் மார்கெட்டிங்க் எலக்டிவ் எடுத்து படிச்சார். நான் ஃபைனான்ஸ்ஸில் ஸ்பெஷலைஸ் பண்ணினேன்”

அமுதா, “வாவ், ரெண்டு பேரும் ஒண்ணா படிக்கறது ரொம்ப இன்டரெஸ்டிங்க்கா இருந்து இருக்குமே?”

வனிதா, “எலக்டிவ் சப்ஜெக்ட்ஸைத் தவிற எங்க ரெண்டு பேருக்கும் ஒரே சிலபஸ்தான். நான் தான் விழுந்து விழுந்து படிச்சேன். எல்லா சப்ஜெக்ட்ஸ்ஸும் அவருக்கு ஏற்கனவே தெரிஞ்சு இருந்தது”

அமுதா, “அப்படியா? எப்படி?”

வனிதா, “IMAவில் நிறைய மேனேஜ்மெண்ட்ஸ் சப்ஜெக்ட்ஸ் கவர் பண்ணி இருக்கார். அதைத் தவிற நிறைய அவரா இன்டரெஸ்ட் எடுத்து படிச்சு இருந்து இருக்கார்”

அமுதா, “ம்ம்ம் .. ரெண்டு பேரும் வொர்க் பண்ணிட்டே படிச்சு இருந்து இருக்கீங்க. உங்க ரொமான்ஸுக்கு டைம் கிடைச்சதா?”

வனிதா, “நான் எப்பவும் ரொம்ப ப்ளான் பண்ணி படிப்பேன். விஸ்வா என்னை விட நல்லா ப்ளான் பண்ணி படிப்பார். அவரோட ஃப்ரீ டைமில் என் அசைன்மெண்ட்ஸுக்கு ஹெல்ப் பண்ணுவார். வீக் எண்ட் ஜாலியா சுத்துவோம். அதைத் தவிற அவர் முழுசா ரிகவர் ஆகணும்ன்னு தினமும் காலையில் ரன்னிங்க் அல்லது ஸ்விம்மிங்க் போவார். நானும் கூட போவேன்.”

அமுதா, “நீயும் ஓடுவாயா?”

வனிதா, “சில நாள் ஓடுவேன். இல்லைன்னா சைக்கிளில் கூடப் போவேன். கொஞ்சம் கொஞ்சமா இம்ப்ரூவ் பண்ணினார். He really struggled a lot. ஆனா அவரோட டிடர்மினேஷன் எனக்கு எல்லாம் நிச்சயம் வராது”

அமுதா, “ஏன் ரிகவர் ஆக அவ்வளவு நாள் ஆச்சு?”

வனிதா, “Knee jointஇல் இருக்கும் எலும்புகள் முறிஞ்சதால ஆபரேஷன் செஞ்சாங்க. ஆபரேஷன் முடிஞ்ச சமயத்தில் முழங்காலுக்கு அரை மணி நேரம் சிரமம் கொடுத்தா போதும். உடனே கால் முட்டியில் வீக்கம் வந்துடும். அதனால்தான் அவரை ஆக்டிவ் ஸர்வீஸ்ல இருந்து எடுத்தாங்க”

அமுதா, “இப்போ முழுசா ரிகவர் ஆயிட்டாரா?”

வனிதா, “முன்னே இருந்த அளவுக்கு ஆகலை. பட், இப்போ அவருக்கு லிமிட் ரெண்டு மணி நேரம். அதுக்கு பிறகு கால் முட்டி வீங்கிக்கும். பட், அந்தக் காலை வெச்சுட்டு ஹாஃப் மேரத்தான் (Half Marathon) கூட ஓடி ரெண்டு மணி நேரத்தில் முடிச்சு இருக்கார். போன வருஷம் கூட ஓடினார்”

அமுதா, “வாவ், நிஜமாவே அதுக்கு ரொம்ப டிடர்மினேஷன் வேணும். சரி, அப்போ எல்லாம் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சுத்தறதுக்கு உங்க அம்மா எதுவும் சொல்லையா?”

வனிதா, “வேலைக்கு போக ஆரம்பிச்சதில் இருந்து அம்மா எதுவும் சொல்லலை” என்றவள் சிறு புன்னகையுடன், “ஆக்சுவலா, இனிமேலாவுது பொய் சொல்லாம விஸ்வாவோட வெளியில் சுத்துன்னு சொன்னாங்க”

அமுதா, “சோ, நீ செஞ்ச திருட்டுத்தனம் அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கு!”

1 Comment

Comments are closed.