ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 1 108

வனிதா, “ஃப்ரீயா இருந்தப்போ எழுதினது”

வத்சலா, “இதுக்கு என்ன அர்த்தம்? You are too young to think about such things”

வனிதா, “Why not?”

வத்சலா, “God! What to do with this girl Subbu? வாங்க அண்ணாகிட்டேயே போய் பேசலாம்”

அவளையும் அழைத்துக் கொண்டு அடுத்த வீட்டுக்குள் நுழைந்தனர். ஹாலில் அமர்ந்து இருந்த ஸ்ரீவத்சனிடம் வத்சலா, “அண்ணா, பாரு இவ என்ன செஞ்சு வெச்சு இருக்கான்னு” என்றபடி கையில் கொண்டு வந்து இருந்த நோட்டுப் புத்தகத்தை நீட்டினாள்.

தலையை சொறிந்த ஸ்ரீவத்சன், “ரெண்டு நாளைக்கு முன்னாடி I had a chat with my son. உங்க ரெண்டு பேர்கிட்டேயும் மெதுவா சொல்லாம்ன்னு இருந்தேன்”

சுப்ரமணியன், “என்ன ஸ்ரீ மெதுவா சொல்லாம்ன்னு இருந்தே?”

ஸ்ரீவத்சன், “இரு அவனையே கூப்பிடறேன்” என்ற போது அவரது மனைவி காயத்ரி உள்ளிருந்து வந்தாள்.

காயத்ரி, “ஹே, என்ன புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேரும் பொண்ணையும் கூட்டிட்டு வந்து இருக்கீங்க? நாங்க இல்லை இன்னைக்கு உங்க வீட்டுக்கு டின்னருக்கு வர்றதா இருந்தோம்?”

வத்சலா, “இது வேற விஷயம் காயத்ரி. பாரு” என்ற படி கையில் இருந்த மற்ற ஒரு நோட்டுப் புத்தகத்தை அவளிடம் நீட்டினாள். வாங்கிப் பார்த்த காயத்ரியின் முகத்தில் புன் முறுவல் பரவத் தொடங்கியது.

ஸ்ரீவத்சன் தன் மனைவியிடம், “அவனை கூப்பிடு”

காயத்ரி, “இங்கே பாருங்க அவனே மனசு ஒடிஞ்சு போயிருக்கான். ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் டீடெயிலா பேசினோம். அவனும் சரின்னு ஒத்துட்டான். இப்போ எதுக்கு அவனை இழுக்கறீங்க?”

ஸ்ரீவத்சன், “ரெண்டு பேர் படிப்பும் கெட்டுப் போகக் கூடாது. அவன் அதுக்கு பொறுப்பு ஏத்துக்கணும். Call him”

சிறிது நேரத்தில் விஸ்வா அங்கு வந்தான்.

ஸ்ரீவத்சன், “உன் பர்ஸை அத்தைகிட்டே கொடு”

விஸ்வா முகத்தில் பீதி பரவ, “நோ! டாட், நேத்துதானே நான் உங்ககிட்டே ப்ராமிஸ் பண்ணினேன்? இப்போ எதுக்கு டாட்?”

ஸ்ரீவத்சன், “முதல்ல உன் பர்ஸில் இருப்பதை அத்தை மாமாகிட்டே காட்டு”

கண் கலங்கிய விஸ்வா, “டாட், I know they all, including her, prefer Ram over me. எதுக்கு டாட் என்னை எம்பாரஸ் பண்ணறீங்க?”

வத்சலா, “இது என்ன புதுக் கதை? அண்ணா அவனை எதுக்கு இப்படி எம்பாரஸ் பண்ணறே? பரவால்லடா கண்ணா நீ ஒண்ணும் உன் பர்ஸ்ஸை காட்ட வேண்டாம். பட், ஒண்ணு சொல்லறேன். Never did any of us preferred Ram over you” என்ற பிறகு வனிதாவைக் காட்டி சிரித்தபடி, “Particularly not her”

1 Comment

Comments are closed.