ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 1 108

வனிதா பதில் சொல்ல சற்று தடுமாறிய பிறகு, “அது … என் ஃப்ரெண்ட்ஸ் நிறையப் பேருக்கு இதில் எக்ஸ்பீரியன்ஸ் இருந்தது. நானே நேரில், ஐ மீன் ஒளிஞ்சு இருந்து பார்த்து இருக்கேன். அப்பறம் அம்மா எனக்கு அட்வைஸ் பண்ணினாங்க”

சில பொத்தல்களை அவள் சங்கோஜத்தில் மறைப்பதை அமுதா உணர்ந்தாள்.

அமுதா, “சோ, அந்த வருஷக் கடைசியில் விஸ்வா என்.டி.ஏ ஜாயின் பண்ணினானா?”

வனிதா, “எஸ். He was one of the top rank holders”

அமுதா, “அப்பறம் எப்படி உங்க காதல் தொடர்ந்தது?”

வனிதா, “வாரா வாரம் ஃபோன் கால். வருஷத்துக்கு ஒரு முறை பத்தே நாள் லீவில் வருவார்”

அமுதா, “நீ என்ன செஞ்சுட்டு இருந்தே?”

வனிதா, “நான் முதலில் பி.ஏ எகனாமிக்ஸ் படிச்சுட்டு அதுக்கு அப்பறம் மேனேஜ்மென்ட் படிக்கணும்ன்னு இருந்தேன். அப்பா மாமா ரெண்டு பேரும் பி.ஏ பண்ணறதுக்கு பதிலா பி.காம் படிக்க சொன்னாங்க. சரின்னு செயின்ட் ஜோஸப்ஸ்ஸில் பி.காம் ஜாயின் பண்ணினேன்”

அமுதா, “ப்ளஸ் டூ எங்கே படிச்சே?”

வனிதா, “ப்ளஸ் டூ முடிக்கும் வரைக்கும் ஃப்ராங்க் ஆண்டனிலேயே கண்டின்யூ பண்ணினேன்”

அமுதா, “சோ, அப்பறம் என்ன ஆச்சு?”

வனிதா, “பி.காம் ஜாயின் பண்ணும் வரை எனக்கு அவ்வளவா காமர்ஸில் இன்டரெஸ்ட் இருக்கலை. ஒன்ஸ் படிக்க ஆரம்பிச்ச பிறகு எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. I was my class topper throughout”

அவள் முகத்தில் இருந்த பெருமிதம் அவளது சோகத்தையும் சிறுது மறைத்தது …

வனிதா, “நான் செகண்ட் இயர் ஸ்டார்ட் பண்ணும் போது விஸ்வா என்.டி.ஏ முடிச்சுட்டு டெஹராடூனில் இருக்கும் ஐ.எம்.ஏவுக்குப் போனார்”

அமுதா, “ஸோ, விஸ்வா ஆர்மில செலக்ட் ஆனானா? ஏன் அவனுக்கு ஏர் ஃபோர்ஸ், நேவில எல்லாம் இஷ்டம் இல்லையா?”

வனிதா, “ம்ம்ஹூம் .. He always wanted to be an army man. என்.டி.ஏ பாஸ்ஸிங்க் அவுட் பரேடுக்கு (NDA Passing Out Parade) நாங்க எல்லாம் போயிருந்தோம். ராமும் டெல்லியில் இருந்து வந்து இருந்தார்”

அமுதா, “எந்த ரெஜிமெண்டில் சேர்ந்தான்?”

வனிதா, “என்.டி.ஏவில் இருக்கும் போதும் அவர் ரொம்ப நல்லா படிச்சார். அவருக்கு எப்பவும் எஞ்சினியரிங்கில் இன்டரெஸ்ட் உண்டு. சோ, என்.டி.ஏவிலும் நிறைய எஞ்சினியரிங்க் சப்ஜெக்ட்ஸ் ஆப்ட் பண்ணி படிச்சார். முடிக்கும் போது மெட்ராஸ் ஸாப்பர்ஸ்ஸில் (Madras Sappers) செலக்ட் ஆனார். He was a combat engineer”

1 Comment

Comments are closed.