ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 1 108

அவளை மேலும் எதுவும் சொல்ல விடாமல் தடுத்த அமுதா, “அதை அப்பறம் பார்ப்போம். மொதல்ல நீ அவரை சந்திச்சதில் இருந்து நடந்ததை எல்லாம் சொல்லணும். ஒரு ஃப்ளாஷ் பாக் மாதிரி ஓ.கே?”

வனிதா, “ஓ.கே”

விஸ்வா போவதை, அவன் அந்த அறையை விட்டு வெளியில் செல்லும் வரை, தன் உயிரே தன்னை விட்டு பிரிந்து போவதைப் பார்ப்பதைப் போல் ஏக்கம் செறிந்த கண்களுடன் வனிதா அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவள் செய்கையை கூர்ந்து நோக்கியவாறு இருந்த அமுதா அவளது கவனம் தன் புரம் திரும்பிய பிறகு, “You love him a lot. Don’t you?”

கண்கள் பனிக்க உதட்டைக் கடித்த படி மெதுவாகத் தலையசைக்கத் தொடங்கிய வனிதா பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் கைகளில் முகத்தைப் பதித்து அழுது குலுங்கினாள்.

தன் இருக்கையை விட்டு எழுந்து அவளருகே வந்து அமர்ந்த அமுதா அவள் முதுகைத் தடவ அவரது தோளில் முகம் புதைத்து வனிதா தன் அழுகையை தொடர்ந்தாள் …

சற்று நேரத்தில் கண்களைத் துடைத்துக் கொண்ட வனிதா, “சாரி, கொஞ்சம் இமோஷனல் ஆயிட்டேன்”

அமுதா, “நோ ப்ராப்ளம் வனிதா. நீ என்னுடன் தனிதாத்தானே இருக்கே? சரி, கண்டினியூ பண்ணலாமா?”

வனிதா, “எதுக்கு இந்த டைவர்ஸ்ன்னு … ”

அவளை மேலும் எதுவும் சொல்ல விடாமல் தடுத்த அமுதா, “அதை அப்பறம் பார்ப்போம். மொதல்ல நீ அவரை சந்திச்சதில் இருந்து நடந்ததை எல்லாம் சொல்லணும். ஒரு ஃப்ளாஷ் பாக் மாதிரி ஓ.கே?”

வனிதா, “ஓ.கே”

~~~~~~~~~~~~~~~~~

அமுதா, “விஸ்வாவை எப்போ சந்திச்சே?”

வனிதா, “சின்ன வயசில் இருக்கும் போதே. அவர் என் மாமா பையன்”

தனக்கு தெரியும் என்பதை காட்டிக் கொள்ளாமல், அமுதா, “ஓ, அரேஞ்ச்ட் மேரேஜா?”

வனிதா, “இல்லை. அரேஞ்ச்ட் லவ் மேரேஜ். அப்படி எங்க வீட்டிலோ அவர் வீட்டிலோ எதிர்த்து இருந்தா அவர்கூட ஓடிப் போகவும் தயங்கி இருக்க மாட்டேன்”

வாய்விட்டு சிரித்த அமுதா, “சோ எப்போ இருந்து அவரை காதலிக்க ஆரம்பிச்சே?”

வனிதா, “சின்ன வயசில் இருந்தே. வருஷத்துக்கு ஒரு முறை லீவில் பெங்களூர் வரும் போது அவரோடவும் அவரோட ப்ரதர் ராமோடவும் சகஜமா பேசுவேன். ராமும் ரொம்ப சகஜமா பேசுவார். இவர்தான் ரொம்ப தயங்கி தயங்கி பேசுவார். நான் எய்த் க்ரேட் படிச்சுட்டு இருந்தப்போ இவர் ஒரு டென்னிஸ் கோச்சிங்க் கேம்பில் கலந்துக்க யூ.எஸ் வந்து இருந்தார். அப்போ நல்லா பழக்கம் ஆச்சு. ஐ திங்க், அப்போதான் இவரை ரொம்ப டீப்பா லவ் பண்ண ஆரம்பிச்சேன்”

அமுதா, “Hey! Wait a minute!! நீ அப்போ யூ.எஸ்ஸில் இருந்தியா?”

1 Comment

Comments are closed.