ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 1 108

அமுதா, “சரி, உங்க அம்மா ஸ்ட்ரிக்டா இருந்தாங்க. அப்பறம்?”

வனிதா, “அத்தையும் ராமும்தான் எங்களுக்கு ரொம்ப சப்போர்டிவா இருப்பாங்க. எங்க அத்தை ஒரு சார்டட் அக்கௌண்டண்ட். ஒரு பெரிய ஆடிட்டர் நிறுவனத்தில் பார்ட்னர். டவுட் கேட்க அத்தைகிட்டே போறேன்னு சொல்லிட்டு அங்கே போவேன். அங்கே இருந்து ராம் என்னை விஸ்வா இருக்கும் இடத்துக்குக் கூட்டிட்டுப் போவார்”

அமுதா, “எப்படி?”

வனிதா, “காருக்குள்ளே ஒளிஞ்சுக்குவேன்” சொன்ன மறுகணம் அவள் விரக்தியுடன், “வெளியில் இருக்கறவங்களுக்கு தெரியாம காரில் ஒளிஞ்சுக்கறது அப்போத்தான் எனக்குப் பழக்கம் ஆச்சு”

அமுதா, “ஏன் அதைப் பத்தி ரொம்ப டிஜக்டடா சொல்லறே?”

வனிதா, “ஒண்ணுமில்லை” என்று சுதாரித்துக் கொண்டு தொடர்ந்தாள், “ராம் எம்.ஈ.ஜி வாசலில் கொண்டு போய் விடுவார். காரை எடுத்துட்டு நானும் விஸ்வாவும் எங்கேயாவுது போவோம். முக்கால் வாசி நேரம் பக்கத்தில் அல்சூர் ஏறிக் கரையில் இருக்கும் பார்க்கில் ஒரு மூலையில் போய் உக்காந்துட்டு மணிக்கணக்கா பேசிட்டு இருப்போம். ராம் இவரோட பைக்கை எடுத்துட்டு எங்கேயாவுது சுத்திட்டு வருவார். மறுபடி வெஹிகிள் சேஞ்ச் பண்ணிட்டு வீட்டுக்கு வருவோம். வீட்டுக்கு வந்து விஸ்வா முதல்ல எங்க வீட்டில் போய் அரட்டை அடிச்சுட்டு இருப்பார். நான் அவங்க வீட்டில் இருந்து வர மாதிரி புக்ஸை எடுத்துட்டு வருவேன்”

அமுதா, “ஏய், அல்சூர் ஏறி பக்கத்தில் இருக்கும் பார்க்கா? அது இருட்டினதுக்கு அப்பறம் கொஞ்சம் பாதுகாப்பு இல்லாத பகுதி அப்படிம்பாங்களே?”

வனிதா, “இவர் யூனிஃபார்மில் இருப்பார். பாக்கறவங்க இவரைப் பாத்து பயந்து ஒதுங்கிப் போவாங்க”

அமுதா, “ரொம்ப ஜாலியா ரோமான்ஸ் பண்ணிட்டு இருந்து இருக்கீங்க. Then what happened?”

வனிதா, “ஆறு மாசம் கழிச்சு கார்கில் வார் தொடங்குச்சு. இவரை வார் ஃப்ரண்டுக்கு ஷிஃப்ட் பண்ணினாங்க”

ஒரு கணம் போர் என்றதும் சற்று அதிர்ச்சியுற்றாலும் மறுகணம் விஸ்வா வெற்றிகரமாக திரும்பி வந்து இருக்கிறான் என்று உணர்ந்த அமுதா, “வாவ், விஸ்வா ஒரு வார் ஹீரோவா?”

வனிதா, “ம்ம்ம் .. ”

அமுதா, “God! That must have been a really traumatic experience to you (ஐய்யோ! நினைச்சுப் பாக்கவே கஷ்டமா இருக்கு. உனக்கு ரொம்ப பயப்பட்டு இருந்து இருப்பே இல்லை?)”

வனிதா, “பாதி நாள் நான் தூங்கவே இல்லை .. ”

அமுதா, “படிச்சுட்டு இருக்கும் போதா?”

வனிதா, “இல்லை .. நான் பி.காம் ஃபைனல் இயர் எக்ஸாம் சமயம்”

அமுதா, “ஓ! ரோமான்ஸ் பண்ணிட்டு இருந்தப்ப பாதியில் போயிட்டானா? எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருந்தீங்க?”

வனிதா, “ம்ம்ம் … கல்யாணத்தைப் பத்தி எங்க ரெண்டு பேர் பேரண்ட்ஸ்ஸும் பேச்சு எடுத்தாங்க. விஸ்வாவும் நானும் இன்னும் ரெண்டு மூணு வருஷம் கழிச்சு செஞ்சுக்கலாம்ன்னு முடிவெடுத்து இருந்தோம்”

1 Comment

Comments are closed.