ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 2 47

அமுதா, “அதாவுது நீங்க குடும்பத்தை விரிவு படுத்தலாம்ன்னு முடிவு எடுத்ததற்கு அப்பறமா?”

வனிதாவின் முகம் பேயறைந்ததைப் போல் ஆனது …

அமுதா, “என்ன டல்லாயிட்டே?”

வனிதா, “ஒண்ணும் இல்லை” என்று மழுப்பியபின், “எஸ், around that time only”

சில கணங்கள் யோசித்த அமுதா தன் டைரியில் சில குறிப்புகளை எழுதினார்.

அமுதா, “சோ, விஸ்வா அந்தக் கம்பெனியிலேயே கண்டின்யூ பண்ணினானா?”

வனிதா, “இல்லை. கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் முடியும் போது அவரும் PMLஇல் Sales Managerஆ ஜாயின் பண்ணினார். இப்போ ஜி.எம்மா இருக்கார். அவருக்குன்னு ஒரு வைஸ் ப்ரெஸிடெண்ட் போஸ்ட் க்ரியேட் பண்ணறதா இருந்தாங்க. அதுக்குள்ள இந்த … ”

அமுதா, “அதுக்குள்ள என்ன?”

வனிதா, “இந்த டைவர்ஸ் கேஸ் தொடங்கிடுச்சுன்னு சொன்னேன்”

அமுதா, “அதுக்கும் டைவர்ஸுக்கும் என்ன சம்மந்தம்?”

வனிதா, “விஸ்வா அந்தப் போஸ்ட்டை அக்ஸெப்ட் பண்ணிக்கலை. அந்தக் கம்பெனியில் தொடர்ந்து வொர்க் பண்ணுவாரான்னு தெரியலை”

அமுதா, “ஏன்?”

வனிதா, “அவருக்கு நான் தான் அந்தக் கம்பெனியில் வேலை வாங்கித் தந்தேன்”

அமுதா, “சோ, அவனோட ஈகோ ஒத்துக்கலையாக்கும்?”

வனிதா அமுதாவின் கண்களை தவிர்த்துத் தலை குனிந்து இல்லையெனத் தலையசைத்தபடி, “நான் அவருக்கு அந்த வேலை வாங்கிக் கொடுத்து இருக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த சமயத்தில் ராம் அந்த ரெண்டு வருஷத்தில் ரொம்ப பிரபலமானார். விஸ்வா இருந்த கம்பெனியில் ப்ரொமோஷனுக்கு இன்னும் ஒரு வருஷமாவுது வெய்ட் பண்ணும்ன்னு சொல்லி இருந்தாங்க. எனக்கு விஸ்வா சீக்கிரம் முன்னுக்கு வரணும்ன்னு ஒரு வெறி. நான் எங்க பாஸ்கிட்டே, ஐ மீன் மிஸ்டர் சந்திரசேகர் கிட்டே பேசினேன். அவர் விஸ்வாவுக்கு போதிய முன் அனுபவம் இல்லை அதனால போர்ட் மெம்பர்ஸ் ஆட்சேபிப்பாங்கன்னு சொன்னார். நானே போர்ட் மெம்பர்ஸ், முக்கியமா மிஸஸ் சுமதி சந்திரசேகர்கூடவும் அப்பறம் ஷண்முகம் சார்கூடவும் பேசினேன். அவங்க ரெண்டு பேரும் விஸ்வாகூட பேசிட்டு சரின்னு சொல்லிட்டாங்க. அதுக்குப் பிறகு மிஸ்டர் சந்திரசேகர் … ” என்றவள் அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாமல் சில கணங்கள் தவித்த பிறகு விரக்தியுடன், “வேற எங்கே இருந்து இருந்தாலும் விஸ்வா முன்னுக்கு வந்து இருப்பார். I wish I could go back in time and undo what I did”

3 Comments

  1. Really a good one.

  2. Really this story is like a psychological episode of lovers who cum married after, in other words perceptional analysis. Rally impressive story.. keep up this good work

  3. நான்ஷிரிக் தாரா

    தளத்தில் படித்தவற்றுள் மிகச் சிறந்த மனோதத்துவக் கதை. திருமண முறிவுகள் எங்கே தொடங்குகின்றன என்பதில் தொடங்கித் தெளிவான சிந்தனைகளை மனதில் விதைத்து நல்ல சமூகத்தைக் கட்டமைக்கக் கூடிய கதை. பதியப் பட்ட தளம் சரியில்லையோ என்று ஒரு சந்தேகம். வாழ்த்துக்கள்!

Comments are closed.