ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 2 47

அமுதா, “Why?”

வனிதா, “Everything started with that (எல்லாம் அப்பத்தான் தொடங்குச்சு)”

அமுதா, “எது எல்லாம்?”

சற்று நேரத்துக்கு முன் துக்கம் தொண்டையை அடைக்க விவாகரத்தின் காரணத்தை அவளாகவே சொல்லுவதற்கு முன்வந்த வனிதா ஆமை தன் ஓட்டுக்குள் ஒளிந்து கொள்வது போல் மறுபடி மௌனம் காத்து மூக்கை உறிஞ்சியபடி கண்ணீர் விட்டாள்.

அமுதா மேலும் அவளை வற்புறுத்த விரும்பவில்லை.

அமுதா, “நான் முந்தாநேத்து சொன்னேனே அந்த லிஸ்டை எழுதுனியா?”

வனிதா, “ம்ம்ம்” என்ற படி நோட்டுப் புத்தகத்தில் இருந்து கிழிக்கப் பட்ட இரு காகிதங்களை நீட்டினாள்

அமுதா, “முதலில் ஏன் இந்த விவாகரத்து வேண்டாம் அப்படிங்கறதுக்கான காரணங்களை படிக்கலாம்”

1. I love Viswa
2. பெற்றோர்கள் பிரிஞ்சு இருந்தா குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப் படும்
3. இரட்டைக் குழந்தைகளைப் பிரிச்சு வளர்த்தா அவர்கள் மனநிலை பாதிக்கப் படும்
4. I think Viswa also still loves me

அமுதா, “ம்ம்ம் … இதை விட சரியான காரணங்கள் இருக்க முடியாது. அடுத்த லிஸ்டைப் படிக்கலாம்

1. விஸ்வாவுக்கு நான் ஏற்றவள் இல்லை
2. என்னை விட ஒரு நல்ல ஒருத்தியை விஸ்வா கல்யாணம் செஞ்சுக்கணும்”

படித்து முடித்த பிறகு வனிதாவைக் கூர்ந்து நோக்கிய அமுதா, “என் கிட்டே எதையும் மறைக்கக் கூடாதுன்னு சொன்னேன்”

வனிதா தலை குனிந்து இருந்தாள்.

அமுதா, “சரி, ஏன் நீ விஸ்வாவுக்கு ஏத்தவ இல்லை?”

வனிதா, “விஸ்வாவோட அறிவாற்றலையும் அவரோட தன்னம்பிக்கையையும் உழைப்பையும் நான் முழுசா புரிஞ்சுக்கலை”

அமுதா, “சரி, இப்போ புரிஞ்சுகிட்டே இல்லையா?”

வனிதா, “Now it is too late”

அமுதா, “ஏன்?”

மேலும் வனிதா மௌனம் காக்க …

அமுதா, “உன்னை விட நல்ல ஒருத்தின்னா எப்படி இருக்கணும்?”

வனிதா, “அவர் மேல் நம்பிக்கை வெச்சு இருக்கணும்”

அமுதா, “போதும் கண்ணாமூச்சி வனிதா. உனக்கு அவன் மேல நம்பிக்கை இல்லாம இருந்ததால என்ன ஆச்சு?”

3 Comments

  1. Really a good one.

  2. Really this story is like a psychological episode of lovers who cum married after, in other words perceptional analysis. Rally impressive story.. keep up this good work

  3. நான்ஷிரிக் தாரா

    தளத்தில் படித்தவற்றுள் மிகச் சிறந்த மனோதத்துவக் கதை. திருமண முறிவுகள் எங்கே தொடங்குகின்றன என்பதில் தொடங்கித் தெளிவான சிந்தனைகளை மனதில் விதைத்து நல்ல சமூகத்தைக் கட்டமைக்கக் கூடிய கதை. பதியப் பட்ட தளம் சரியில்லையோ என்று ஒரு சந்தேகம். வாழ்த்துக்கள்!

Comments are closed.